உலகத் தாய்மொழி தினம் - INTERNATIONAL MOTHER LOANGUAGE DAY - FEBRUARY- 21

 

உலக தாய் மொழி தினம்

INTERNATIONAL MOTHER LANGUAGE DAY 

21 • 02 • 2022

தாய் மொழி என்பது தாயின் வழியாகக் கற்பது மட்டும் அன்று , அந்த இனத்தை அடையாளப்படுத்துவதும் ஆகும்.பண்பாடு தருவதும் , பக்குவமாக்குவதும் தாய்மொழியே.அத்தகு தாய்மொழியை உயர்த்துவதும் , பாதுகாப்பதும் நம் ஒவ் வொருவரின் கடமையாகும்.எனவே உலக மொழிகள் அனைத்தும் , அம்மொழிகளுக்கே உரிய தனித்தன்மையைப் பெற்றுச் சிறந்து விளங்குகிறது.மனித இனத்தின் மகத்தான விளக்கமாகவும், சிறப்பாகவும் , அடையாளமாகவும் திகழ்கின்றன. அத்தகைய தாய்மொழியை பாதுகாக்கவும் , சிறப்பிக்கவும் ஐக்கிய நாட்டு சபையின் பண்பாட்டு தொடர்பாக விளங்கும்  அமைப்பான யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்த தினமே , உலக தாய்மொழி தினம். இது 1999- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு , பின் 2000 -ம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 - ம் நாளை சர்வதேச தாய் மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

               கட்டுப்பாடின்றி காடுகளில் அலைந்து திரிந்த மனித இனம் தன்னைக் காத்துக் கொள்ள ஒலியெழுப்பி, மொழியைக் கற்றது. அம்மொழிகள் இடம் , காரணம் , தேவைகள் போன்ற வற்றின் அடிப்படையில் விளைந்தவை.அவற்றைச் சிறப்புச் செய்ய ஒரு தினம்.அவை செம்மொழியால் செழித்திருக்கும் இந்திய நாட்டிலேயே தாய் மொழிக்கான ஒரு தினத்தை உருவாக்கி ய சிறப்பு வரலாற்றைப் பெற்று திகழ்கிறது. 

ஆம் ! இன்றைய வங்கதேசத்தில் இருந்த , அன்றைய பாகிஸ்தானில் 1952 - ஆம் ஆண்டு ' டாக்கா ' பல்கலைக்கழகத்தில் வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடந்த மாணவர் போராட்டத்தில் உயிரிழந்த சலாம் , பர்கட், ரபீக் , ஜபார் ஆகிய நான்கு மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ , பிப்ரவரி 21 - ஆம் நாளை சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது. தோற்றம் முதலே சைகை மூலம் தங்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த மனித இனம் , ஒலியை வெளிப்படுத்தி பின்பு தன் முயற்சியாகவும் , திறனுக்கேற்றவாறு தன்னால் பேச முடிந்த வார்த்தைகளைத் தொகுத்து மொழியாக்கினான். அதன் விளைவாக தன் மொழியை தெளிவாக வெளிப்படுத்த இலக்கணம் தோன்றலாயிற்று. இந்த இலக்கணங்கள் வழியே இலக்கியங்கள் தோன்றி தாய் மொழிதனை மெருகூட்டி அணிசெய்தன.

இவ்வாறாக மொழியின் வளர்ச்சியில் பல படிநிலைகளைக் கண்டு சிறந்து விளங்கியது.அவரவர் ஆர்வம் , ஆற்றல் , பண்பாடு  கலாச்சாரத்திற்கு தக்கவாறு சிறந்து வளர்ந்தது.உலகில் பேசப் பயன்படும் மொழிகள் அனைத்திற்கும் உரிய பாதுகாப்பும் , மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் பயனாக ஆண்டு தோறும் இந்த நாள் சிறப்பிக்கப் படுகிறது.தாய் மொழி என்பது உயர்ந்து , உயிருக்கு நிகரானது . அவற்றைக் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகிறது, எனினும் பிறமொழிகளுக்கு ஊறுசெய்வது நன்மைப் பயக்காது. துன்பமே நேரிடும். எனவே தம் மொழிக் காத்து பிறமொழியை மதிப்பதுவே உயர்ந்த பண்பாட்டின் அடையாளமாகத் திகழும். இவையே ஒற்றுமையைப் பாதுகாக்கும் வழியுமாகி மனித இனத்தை ஒன்றுபடுத்தும். 

காலத்திற்கேற்ப ஒருமொழியை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் ஆயுள் தொடரும். அவ்வா று இல்லை யெனில் அம்மொழியின் வரலாறே வழக்கிழந்து மறையும் . அகிலம் முழுதும் பேசப்பட்ட மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே நாகரீகத்தை உலகிற்கு உணர்த்தின. உலகம் முழுவதும் பேசப்படும் மொழிகள் ஆறாயிரம் மொழிகள் ஆகும்.உலகில் 94 - நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது. உலகில் 74 % மக்கள் இந்திய ஐரோப்பிய ஐரோப்பிய மொழிகளைப் பேசுவதாகவும் , 23% மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழிகளைப் பேசுவதாகவும் அறியப்படுகிறது.

அந்த ஆறு மொழிகளாவன ...

தமிழ், சமஸ்கிருதம் , கிரேக்கம் , லத்தீன் , ஹீப்ரு,  சீனம் ஆகிய ஆறு மொழிகளில் தமிழுக்கு தனியானதொரு இடமும் சிறப்பும் உண்டு.இந்த ஆறு மொழிகளில் வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி உலகிற்கு ஈடு கொடுக்கும் மொழிகளாக தமிழும் , சீனமும் மட்டுமே காணப்படுகின்றன. தமிழ் மொழி பற்றி'  எமினோ ' கூறும் போது, " தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளையும் , நுண்ணிய ஆற்றலையும் கொண்ட மொழி " எனக் குறிப்பிடுகிறார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இலக்கிய வளமும் , வாழ்வியல் கலையும் உடைய தமிழ்மொ ழியைப் பேசவும் , படிக்கவும் கைவரப் பெற்ற நாம் பெருந்தவப் பயனைப் பெற்றவர்களாவோம்! என்பது உண்மையே. தமிழ் மொழி நவீன சிந்தனைகளின் ஊடே ஈடுகொடுத்து கால மாற்றத்திற் கேற்ப, தன்னில் மாற்றத்தைப் பெற்று இளமைமாறா புதுமையோடு என்றும் சிறந்தே விளங்குகிறது.தாய் மொழிக் கல்வியின் படைப்புகளே புகழின் உச்சத்தை அடையச் செய்கிறது.கீதாஞ்சலி என்னும் நோபல் பரிசைப் பெற்றக் கவிதையை , ரவீந்திர நாத் தாகூர் தமது தாய் மொழியாகிய வங்க மொழியில் எழுதியே சிறப்புப் பெற்றார். பன்மொழிப் புலமைப் பெற்ற மகாகவியும் தமது படைப்புகளைத் தாய்மொழி யாகிய தமிழில் படைத்தே உலகப் புகழ் மிக்கைவையாக மிளிரச் செய்தார். தாய்மொழி மட்டுமல்லாமல் பிறமொழிகளையும் கற்று அவற்றில் சாதனைகள் பல புரிந்த போதும் , தன்னிலை மாறாமல் நமது பாரம்பரிய,பண்பாட்டு அடையாளமான தாய் மொழியின் மாண்பை சிதைக்காமல், அவற்றை வளர்க்க வேண்டும்.தமிழர் என்ற  பெருமையோடு, எங்கும் , எப்போதும் , எல்லாவற்றிற்கும்  தமிழில் உரையாடுவதை தவமாக, வரமாக எண்ணி பின் பற்றி வணங்குதல் வேண்டும். உலகின் முதல் மொழியானநமது செம்மொழியைப் பாதுகாத்து சிறப்புச் செய்வோம்.!

Post a Comment

0 Comments