PG TRB - தமிழ்
பகுதி - 7 , சங்க இலக்கியம்
பத்துப்பாட்டு - வெற்றிக் குறிப்புகள்
5. முல்லைப்பாட்டு
* பத்துப்பாட்டில் அளவால் சிறியது. இது 103 அடிகளால் ஆனது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகன் மகனார் நப்பூதனார்.
* இதில் அகத்திணையான முல்லையும் அதற்குப் புறமான வஞ்சியும் விரித்துரைக்கப்படுகின்றன. அரசனைப் பிரிந்துறையும் அரசியின் துயர நிலையும், போர் மேற்சென்று பாசறையில் இருக்கும் அரசனின் செயல்களும் சுவைபட கூறப்பட்டுள்ளன.
* கார்கால வருகை, பெண்டிர் விரிச்சி கேட்டல், பாசறை அமைப்பு) அங்குள்ள பணிப்பெண்கள், யவனக் காவலர்கள், போரிட்ட படைகளின் நிலை, முல்லை நில இயல்பு முதலியன விளக்கப்படுகின்றன.
* முல்லைப்பாட்டுத் தலைமகள் நெஞ்சை ஆற்றுப்படுத்தி ஆற்றி நிற்பதால் நெஞ்சாற்றுப்படை என்றும் இதனைக் குறிப்பர்.
* இது பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல். இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
************* ************** *************
6. மதுரைக்காஞ்சி
* பத்துப்பாட்டில் மிகப்பெரிய பாட்டு இதுவே.
* 782 அடிகளைக் கொண்டு விளங்குகிறது.
* ஆசிரியப்பாவின் இடையே வஞ்சியடிகள் விரவி வருகின்றன.
* இது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது மாங்குடி மருதனார் பாடியது.
* இதனைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்றும் கூடற்றமிழ் என்றும் குறிப்பர்.
* பாண்டியன் நெடுஞ்செழியனின் படையெடுப்பு, தலையாலங்கானப் போர், வள்ளன்மை முதலான செயல்களும் பண்புகளும் மதுரைக்காஞ்சியில் விரித்துச் சொல்லப்படுகின்றன.
* மேலும் மதுரையின் நாளங்காடி, அல்லங்காடி, மகளிர், காவலர், அந்தணர் ஒழுக்கம் ஆகியனவும் இப்பாடலில் சிறப்பாகக் அந்நாளைய மதுரையின் சிறப்பிலை - மரத் துகை புரிவது இந்நூல்
* காஞ்சி என்பது நிலையாமையை உணர்த்தும் புறத்திணையாகும். குறிக்கப்பட்டுள்ளன.
0 Comments