PG - TRB - தமிழ் - பகுதி 7 , சங்க இலக்கியம் - 4. குறுந்தொகை - முதன்மைக் குறிப்புகள் / PG TRB TAMIL - PART 7 , SANGA ILAKKIYAM - KURUNTHOKAI

 

PG - TRB - தமிழ் 

தமிழ் - முதுகலை

PG TRB - தமிழ்



7 , சங்க இலக்கியம்

4. குறுந்தொகை

நூற்குறிப்பு :

* கடைச்சங்க காலத்தில் தோன்றிய தொகை நூல்களில் ஒன்றாகிய   குறுந்தொகை நானூறு, அகவற்பாவால் அமைந்த ஓர் அகப்பொருள் நூலாகும்.

*  இந்நூலின் பாடல்கள், நான்கடிச் சிற்றெல்லையையும் எட்டடிப்   பேரெல்லையையும் உடையவை. ஆனால் ஒன்பதடியில் உள்ள 307, 391 ஆகிய இரு பாடல்களும் இத்தொகையில் இடம்பெற்றுள்ளன.

'நல்ல குறுந்தொகை' என்ற அடைமொழியுடன் இந்நூல் சிறப்பித்துக்   கூறப்பட்டுள்ளது.

* தொகை நூல்களில் முதலாவதாகத் தொகுக்கப்பெற்றதாக இந்நூல்   கூறப்படுகின்றது.

* இந்நூலின் பாடல்கள் பல, உரையாசிரியர்கள் பலரால் பல்வேறு உரை விளக்கங்களில் மேற்கோளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

* இந்நூலின் 165 செய்யுட்களே மேற்கோளாகப் பயன்படுத்தப்   பெறாதவை. இறையனார் களவியல் உரையாசிரியர், குறுந்தொகை , நானூறு என்று இந்நூலைக் குறிப்பிடுகின்றார்.

* ஆனால் கடவுள்வாழ்த்து நீங்கலாக இந்நூலில் 401 பாடல்கள் இடம்  பெற்றுள்ளன.

* இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

* இத்தொகை நூலைத் தொகுத்தவர் பெயர் பூரிக்கோ என்றும், இத்தொகை பாடியோர் இருநூற்றைவர் என்றும் பழங்குறிப்பு ஒன்று காணப்படுகின்றது.

* இந்நூலில் உள்ள பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை.

* குறுந்தொகையின் 380 பாடல்களுக்குப் பேராசிரியர் உரை வகுத்தார் என்றும், எஞ்சிய இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை வழங்கினார் என்றும் நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரத்தால் உணரலாம்.

***************   *************   *************

கல்விப் பணியில் ,

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் . மதுரை - 97861 41410 

YOU TUBE - GREEN TAMIL

**************    ***********   **************

Post a Comment

0 Comments