PG TRB - தமிழ் - பகுதி 7 , சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு

 

PG TRB - தமிழ் 

பகுதி - 7 , சங்க இலக்கியம்

பத்துப்பாட்டு - வெற்றிக்குறிப்புகள்



3. சிறுபாணாற்றுப்படை

* ஒய்மானாட்டு நல்லியக்கோட்னிடம் பரிசில் பெற விரும்பிய பாணன் ஒருவனை அவனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது   சிறுபாணாற்றுப்படை.

* இதனை இயற்றியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். இது 269 அடிகளைக் கொண்டது. இதில் விறலியின் அழகு, வஞ்சி, மதுரை, உறந்தை ஆகிய நகரங்களின் சிறப்பு, வள்ளல்கள் எழுவரின் செயல்கள், நெய்தல், முல்லை, மருத நிலமக்களின் ஒழுகலாறு, நல்லியக் கோடனின் நற்பண்புகள் முதலியன   பேசப்படுகின்றன.

* இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ என்னும் தொடர், நூலின்   பெயர்க்காரணத்தைத் தெரிவிக்கிறது.

* இதனைச் சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை எனப் போற்றுகிறார் தக்கயாகப்பரணி உரைக்காரர்.

***************   ************    ***********

4. பெரும்பாணாற்றுப்படை

* பரிசில் பெற்ற பேரியாழ்ப்பாணன் ஒருவன் பரிசில் பெற விரும்பும் மற்றொரு பெரும்பாணனைத் தொண்டைமான் இளந்திரையனிடம்   ஆற்றுப்படுத்துவதாக உள்ளது.

* இதனை யாத்தவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இது 500 அடிகளால் ஆகியது. பேரியாழின் வருணனை, உப்பு, வணிகர் இயல்பு, எயினர், மறவர், இடையர், உழவர், வலைஞர், அந்தணர் ஆகியோர்

ஒழுக்கம், பட்டினம், திருவெஃகா, காஞ்சி போன்ற இடங்களின் சிறப்பு இளந்திரையனின் வீரம், கொடை இன்னோரன்ன பண்புகள்
ஆகியவற்றைப் பெரும்பாணாற்றுப் படையில் காணலாம்.

* இடனுடைப் பேரியாழ் முறைவு கழிப்பி என்னும் தொடர் நூலுக்குப்
உயர் வந்த காரணத்தைத் தெரிவிக்கிறது.







Post a Comment

0 Comments