உலகத்.தாய்மொழி தினம் - பிப்ரவரி 21 - ஆன்லைன் தேர்வு - வினா & விடை / ULAGATH THAIMOZHI THINAM - ONLINE TEST - QUESTION & ANSWER

 

உலகத் தாய்மொழி தினம்

பிப்ரவரி - 21

சிறப்பு இயங்கலைத் தேர்வு 

வினா உருவாக்கம்

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை.

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் , படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி தேர்வு இணைப்பைப் பெறலாம்.


1) ' எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' - என்று பாடிய கவிஞர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ணதாசன்

ஈ) சுரதா

விடை : ஆ) பாரதிதாசன்

2) ------- தமிழ்மொழி எமது - எமக்கு இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது என்றார்   பாவேந்தர்.

அ) புதுமை

ஆ) பழமை

இ) இனிமை

ஈ) இளமை

விடை : இ) இனிமை


3) ' தமிழன் என்றோர் இனமுண்டு ; தனியே அவர்க்கொரு குணமுண்டு'
என்றவர் -----

அ ) நாமக்கல் கவிஞர்

ஆ) கவிமணி

இ )  உவமைக்கவிஞர்

ஈ) முடியரசன்

விடை : அ ) நாமக்கல் கவிஞர்

4) ஆரியம்போல் உலக வழக்கழிந்து ஒழியா உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துவமே'
என்றவர் யார்?

அ) திரு.வி.க.

ஆ) பேரா.அன்பழகன்

இ) பேரா. நமச்சிவாயம்

ஈ) பேரா.சுந்தரம்பிள்ளை

விடை : ஈ) பேரா.சுந்தரம்பிள்ளை

5) இருப்பாய் தமிழா நெருப்பாய்!    இதுவரை இருந்தது போதும்
செருப்பாய்' என்றவர் -----

அ) வாலி

ஆ) கண்ணதாசன்

இ) காசி ஆனந்தன்

ஈ) பட்டுக்கோட்டை

விடை : இ) காசி ஆனந்தன்

6) சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் ----- படித்திடடி பாப்பா என்றார்
மகாகவி.

அ) பணிந்து

ஆ) மகிழ்ந்து

இ) தொழுது

ஈ) விரும்பி

விடை : இ) தொழுது


7) வீறுடைய செம்மொழி தமிழ்மொழி! உலகம் வேரூன்றிய நாள் முதல் ------ 
மொழி என்றார் பாவலரேறு
பெருஞ்சித்திரனார்.

அ) உயர்மொழி

ஆ) உயிர்மொழி

இ ) உலகமொழி

ஈ) செம்மொழி

விடை : ஆ) உயிர்மொழி

8) ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே தமிழில் பிறமொழிச்சொற்கள்
கலந்துள்ளன என்று கூறியவர் -----

அ) வீரமாமுனிவர்

ஆ) ஜி.யு.போப்

இ) கால்டுவெல்

ஈ)ஹீராஸ்

விடை : இ) கால்டுவெல்

9) உலகின் இருளைப் போக்குவதில் ஒன்று செங்கதிர் , மற்றொன்று செந்தமிழ் என்று கூறிய நூல் -----

அ) தண்டியலங்காரம்

ஆ) மாறனலங்காரம்

இ) கந்தர் அலங்காரம்

ஈ) தொல்காப்பியம்

விடை : அ) தண்டியலங்காரம்

10 ) தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார் ?

அ) அறிஞர் அண்ணா

ஆ) பரிதிமாற்கலைஞர்

இ) மறைமலையடிகள்

ஈ) ம.பொ.சி.

விடை : ஆ) பரிதிமாற்கலைஞர்


11) தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய் என்று வருந்திப் பாடியவர் யார்?

அ) காசி ஆனந்தன்

ஆ) அப்துல் ரகுமான்

இ) ஈரோடு தமிழன்பன்

ஈ) இன்குலாப்

விடை :  அ) காசி ஆனந்தன்

12) தமிழிற்கு ------   வகையான
சிறப்புகள் உண்டு என்றார் பாவாணர்

அ ) 10

ஆ) 12

இ) 14

ஈ) 16

விடை : ஈ) 16

13) யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடிய கவிஞர் யார்?

அ) பாரதியார்

ஆ) கம்பர்

இ) இளங்கோவடிகள்

ஈ) ஔவை

விடை : அ) பாரதியார்

14) தமிழ்நாட்டில் தமிழ்வழியாகவே கல்வி கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான்
புதிய புதிய சொற்களை உருவாக்க முடியும் என்று கூறியவர் யார்?

அ) காந்தி

ஆ) பாரதி

இ) பாரதிதாசன்

ஈ) பாவாணர்

விடை : ஆ) பாரதி

15 ) தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற
பாரதியின் பாடல் -----   ல் இடம்
பெற்றுள்ளது.

அ ) பாப்பா பாட்டு

ஆ) கண்ணன் பாட்டு

இ )  குயில் பாட்டு

ஈ) தேசிய கீதங்கள்

விடை : ஈ) தேசிய கீதங்கள்

16 ) சமஸ்கிருதக் கறைபடியாத
மொழி தமிழ் என்றவர் ------

அ ) எல்லீஸ்

ஆ) ஹீராஸ்

இ) கால்டுவெல்

ஈ) போப்

விடை : அ ) எல்லீஸ்

17) தமிழ்ப்பல்கலைக் கழகம் ----- ல் அமைந்துள்ளது.

அ) சென்னை

ஆ) மதுரை

இ) நெல்லை

ஈ) தஞ்சை

விடை : ஈ) தஞ்சை

18 ) --------  நாட்டின் 150 வது சுதந்திர தினத்தில் அந்நாட்டுத் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது.

அ) கனடா

ஆ) இலங்கை

இ) மலேசியா

 ஈ) சிங்கப்பூர்

விடை : அ) கனடா

19 ) இந்திய மொழிகளில் முதன்
முதலில் அச்சேறிய மொழி -----


அ ) மலையாளம்

ஆ) இந்தி

இ) தமிழ்

ஈ) கன்னடம்


விடை : இ) தமிழ்


20 ) 1578 ஆம் ஆண்டில் முதன் முதலில் அச்சேறிய தமிழ் நூலின் பெயர் -----

அ ) திருக்குறள்

ஆ) இராமாயணம்

இ) சிலப்பதிகாரம்

ஈ) தம்பிரான் வணக்கம்


விடை : ஈ) தம்பிரான் வணக்கம்





Post a Comment

0 Comments