உழவர் திருநாள் - சிறப்பு வினாடி - வினா
இயங்கலைத் தேர்வு - 16 - 01 - 2022
வினா உருவாக்கம்
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை .
தினம் ஒரு தேர்வு ஆன்லைனில் எழுத விரும்புவோர் தங்கள் பெயர் , படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற எண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.
***************** ************ *********
1) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் -----
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) ஔவையார்
விடை : அ ) பாரதியார்
2) உழவுத் தொழிலே சிறந்தது ( உழந்தும் உழவே தலை ) என்று கூறியவர்
அ) கம்பர்
ஆ) திருவள்ளுவர்
இ) நக்கீரர்
விடை : ஆ ) திருவள்ளுவர்
3) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் ------ பின்செல் பவர் என்கிறது பொய்யாமொழி
அ) அதுகண்டு
ஆ) தொழுதுண்டு
இ) மேற்கொண்டு
விடை : ஆ) தொழுதுண்டு
4) ஏர் எழுபது பாடிய புலவர் ------
அ) கபிலர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) கம்பர்
விடை : இ ) கம்பர்
5) "உழுதுண்டு வாழ்வதற்கு
ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு
வேறோர் பணிக்கு " என்று பாடிய
புலவர் ------
அ) ஔவையார்
ஆ) முடத்தாமக்கண்ணியார்
இ) மோசிகீரனார்
விடை : அ ) ஓவையார்
6) ------- கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
அ) உறவினர்
ஆ) மருத்துவர்
இ ) உழவர்
விடை : இ ) உழவர்
7) அன்று நஞ்சை உண்டு சாகுபடி ஆனது . இன்று நஞ்சை உண்டு சாகும்படி ஆனது என்று விவசாயிகளின் வேதனையை
கவிதையாக்கிய கவிஞர் ------
அ) வாலி
ஆ) மு.மேத்தா
இ) நெல்லை ஜெயந்தா
விடை : இ ) நெல்லை ஜெயந்தா
8) -------- ஒருவர் உளரேல் அவர்
பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்
மழை என்றார் ஔவையார்.
அ) பொல்லார்
ஆ) நல்லார்
இ) வல்லார்
விடை : ஆ ) நல்லார்
9) " ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே" - என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல் ------
அ) முக்கூடற்பள்ளு
ஆ) நந்திக்கலம்பகம்
இ) பிள்ளைத்தமிழ்
விடை : அ ) முக்கூடற்பள்ளு
10) வயலும் வயல் சார்ந்த நிலமும் ------
அ ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
விடை : ஆ ) மருதம்
11) வானம் பார்த்த நிலத்தை -------என்கிறோம்.
அ) நன்செய்
ஆ) புன்செய்
இ ) களர்செய்
விடை : ஆ ) புன்செய்
12) " ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை. என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை " - என்ற திரைப்பாடலை எழுதியவர் -------
அ ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
விடை : அ ) மருதகாசி
13 ) " பொன்னு விளையிற பூமியடா - விவசாயத்தை பொறுப்பாக் கவனிச்சு
செய்றோமடா" - என்ற பாடல் வரி
இடம்பெற்ற திரைப்படம் ------
அ) பிள்ளைக்கனியமுது
ஆ) மக்களைப் பெற்ற மகராசி
இ) விவசாயி
விடை : ஆ ) மக்களைப் பெற்ற மகராசி
14) நம்மாழ்வார் ஐயா ஊக்குவித்த வேளாண்முறை ------
அ ) இயற்கை வழி
ஆ) செயற்கை வழி
இ) நவீன வழி
விடை : அ ) இயற்கைவழி
15 ) தமிழகத்தின் பாரம்பரிய நெல்வகைகளைவெளிக்கொணர்ந்தவர் -------
அ) ஜெயராமன்
ஆ) சீத்தாராமன்
இ) மணிராமன்
விடை : அ ) ஜெயராமன்
16) வளரும் ஆண்பிள்ளைகளுக்கு ஏற்ற
நெல்வகை ------
அ) சீரகச்சம்பா
ஆ) கிச்சிலிச்சம்பா
இ) மாப்பிளைச்சம்பா
விடை : இ ) மாப்பிளைச்சம்பா
17) அடிச்சு வளர்க்காத பிள்ளையும் ஒடிச்சு வளர்க்காத----- ம் உருப்படாது என்பது
பழமொழி.
அ) வேம்பும்
ஆ) தென்னையும்
இ) முருங்கையும்
விடை : இ ) முருங்கை
18) உள்ளூர்ல உதை வாங்காத ,
வெளியூர்ல ------- வாங்காத என்பது பழமொழி.
அ) செடி
ஆ) நாற்று
இ) விதை
விடை : இ ) விதை
19) காற்றுள்ள போதே ------ கொள்.
அ) தூற்றிக்
ஆ) மாற்றிக்
இ) ஏற்றிக்
விடை : அ ) தூற்றிக்
20 ) நண்டு ஓட நெல் நடு , நரி ஓட
கரும்பு நடு , வண்டி ஓட ------ நடு.
அ) தென்னை
ஆ) பனை
இ) வாழை
விடை : இ ) வாழை
*************** ***************** **********
0 Comments