தைத்திருநாள் சிறப்பு இயங்கலைத் தேர்வு - வினா & விடை / PONGAL THIRUNAL - ONLINE TEST - QUESTION & ANSWER

 

தைத்திருநாள் - சிறப்பு

வினாடி வினா - Green Tamil 

வினா உருவாக்கம் -

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,

 மதுரை - 97861 41410

**************   *************   ***********

1) பொங்குதல் என்பதன் பொருள் ------

அ ) நிரம்பி வழிதல்

ஆ ) வீணாகுதல்

இ ) வற்றிப்போதல்

விடை : அ ) நிரம்பி வழிதல்

2) மார்கழி மாதத்தின் நிறைவு நாள் -----
ஆகக் கொண்டாடப் படுகிறது.

அ ) யோகி

ஆ ) காணும் பொங்கல்

இ ) போகி

விடை : இ ) போகி 

3)போகிப்பண்டிகை யாரை நினைத்துக்
கொண்டாடப் படுகிறது?

அ ) திருமால்

ஆ ) இந்திரன்

இ )பிரம்மன்

விடை : ஆ ) இந்திரன்

4) தை முதல் நாளில் சூரியன் தெற்கிலிருந்து -----நோக்கி நகர்கிறது.

அ ) கிழக்கு

ஆ ) மேற்கு

இ ) வடக்கு

விடை : இ ) வடக்கு 


5 )தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளாக
எந்நாளை நம்முன்னோர் கொண்டாடினர்?

அ ) தை முதல் நாள்

ஆ ) சித்திரை முதல் நாள்

இ ) ஜனவரி முதல் நாள்

விடை : அ ) தை முதல் நாள்

6) ' பொங்கலோ பொங்கல் பொங்கலோ
பொங்கல் என்று பாடுங்கள்' என்று பாடிய
கவிஞர் ------

அ ) பாரதியார்

ஆ ) பாரதிதாசன்

இ ) கவிமணி

விடை : ஆ ) பாரதிதாசன்


7) மாட்டின் கொம்பில் -----கட்டப்பட்டிருந்தது.

அ ) சல்லிக்காசு

ஆ ) பூமாலை

இ ) புதுத்துணி

விடை : அ ) சல்லிக்காசு 

8) பொங்கல் திருநாள் ------  நாட்கள்
கொண்டாடப்படுகின்றன.

அ ) 3

ஆ ) 4.

இ ) 5

விடை : அ ) 3

9) லெமூரியாக் கண்டத்தின் முதல் மாந்தன் தமிழன் என்று கூறியவர் ------

அ ) கமில்சுவலபில்

ஆ ) பாவாணர்

இ ) க.ப.அறவாணன்

விடை : ஆ ) பாவாணர்

10 ) உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு
நடைபெறும் ஊர் ------

அ ) சமயநல்லூர்

ஆ ) செய்துங்க நல்லூர்

இ ) அலங்கா நல்லூர்

விடை : இ ) அலங்காநல்லூர் 

11 ) பொங்கல் கோலத்தின் நடுவில்
வைக்கப்படும் பூ ------

அ ) செம்பருத்திப்பூ

ஆ ) பூசணிப்பூ

இ ) ஆவாரம்பூ

விடை : ஆ ) பூசணிப்பூ


12) தானாத் தின்னா ------ போகும் என்பது 
பழமொழி.

அ ) வீணாப்

ஆ ) தேனாப்

இ ) நஷ்டமாகப்

விடை : அ ) வீணாப் 

13 ) தைப் பிறந்தால் ------- பிறக்கும்.

அ ) வளி

ஆ ) வழி

இ ) வலி

விடை : ஆ ) வழி 

14) ' மார்கழித் திங்கள் மதி நிறைந்த
நன்னாள் ' என்பாடியவர் யார் ?

அ ) ஔவையார்

ஆ ) காரைக்காலம்மையார்

இ ) ஆண்டாள்

விடை : இ ) ஆண்டாள்

15 ) ------  கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே.

அ ) புதியன

 ஆ ) பழையன

இ ) மறந்தன

விடை : ஆ ) பழையன

16) தை மாதத்தின் இரண்டாவது நாள்
மாட்டுப் பொங்கல் மற்றும் ----- தினம் ஆகும்

அ ) திருவள்ளுவர் தினம்

ஆ ) உழவர் தினம்

இ ) அன்னையர் தினம்

விடை : அ ) திருவள்ளுவர் தினம்

17) தை மாதத்தின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் மற்றும் ------ ஆகும்.

அ ) கவிஞர் திருநாள்

ஆ ) உழவர் திருநாள்

இ ) பொன்னேர் திருநாள்

விடை : அ ) உழவர் திருநாள்

18) உழுதவன் கணக்குப் பார்த்தால் ------ கூட மிஞ்சாது.

அ ) வயல்

ஆ ) உழக்கு

இ ) செலவு

விடை : ஆ ) உழக்கு 

19 ) அழுது கொண்டிருந்தாலும் ------- 
கொண்டிரு என்பது நம் முன்னோர் கூற்று.

அ ) உண்டு

ஆ ) உழுது

இ ) தூங்கிக்

விடை : உழுது

20 ) பங்கிட்டுத் தின்னா ------ ஆறும்.

அ ) உணவு

ஆ ) மனம்

இ ) பசி

விடை : இ ) பசி



Post a Comment

0 Comments