PG - TRB - தமிழ் - தமிழகம் - தூங்கா நகர்

 

PG - TRB - தமிழ் 

தூங்கா நகர்

* சங்கம் வைத்து செந்தமிழ் வளர்த்த நகரம் மதுரை. மதுரை தமிழகத்தின் 2-ஆவது பெரிய நகரமாகும்.

* உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் மக்கள் விழித்திருந்து வேலை செய்வதால் 'தூங்கா நகர்' எனப்படுகிறது.

* ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஏதாவது ஒரு விழா   கொண்டாடப்படுவதால் மதுரை ‘திருவிழா நகர்' எனப்படுகிறது.

* நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு,  எட்டு சிறிய கோபுரங்களையும் கொண்டு, எழில்மிகு சிற்பக் கலைக்கூடமாக விளங்குவதால் கோயில் மாநகர்' எனப்படுகிறது.

* பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்ததால்

'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' எனப்படுகிறது.

* மதுரை என்றால் இனிமை' என்பது பொருளாகும். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை.

* மதுரையை புறநானூறு ‘தமிழ்கெழு கூடல்' எனக் கூறுகிறது.

தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும் சொற்றொடர் :

- "சேரநாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு

முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோர் உடைத்து”.

* 'தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”

நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப் படையில் பாடியது.


Post a Comment

0 Comments