PG - TRB - TAMIL - 2006 - 2007 , ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலைத்தமிழாசிரியர் தேர்வு - 2006 - 2007 வினாத்தாள்

 

 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2006 - 2007

வினாக்களும் விடைகளும் 

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2006 - 2007

QUESTION & ANSWER 




****************    *************   ***********

1. எட்டுத் தொகையுள் காலத்தால் முற்பட்ட நூல்

A) அகநானூறு

B) புறநானூறு

C) நற்றிணை

D) குறுந்தொகை

2 . சங்க இலக்கியத்தில் மிகக் குறைந்த அடிகளை உடைய பாடல்

A) ஐங்குறுநூறு 

B) குறுந்தொகை

C) பரிபாடல்

D) நற்றிணை

3 . குறுந்தொகை நூலைத் தொகுத்தவர்.

A) உப்பூரி குடிகிழார் 

B) கபிலர்

C) நக்கீரர்

D) பரணர்

4 . அகநானூறு பின்வரும் அடிகளைக் கொண்டிலங்குவது

A) 10 முதல் 28 அடி வரை 

B) 11 முதல் 29 அடி வரை

C) 12 முதல் 30 அடி வரை 

D) 13 முதல் 31 அடி வரை

5 . கலிப்பாவால் இயற்றப்பட்ட சங்க இலக்கியப் பாடல்

A) குறுந்தொகை 

B) கலித்தொகை

C) அகநானூறு

D) புறநானூறு

6 . கோப்பெருஞ்சோழனோடு உயிர்நட்பு கொண்டு விளங்கிய புலவர்

A) எயிற்றியனார் 

B) ஔவையார்

C) பிசிராந்தையார் 

D) மோசிகீரனார்

7 . "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல். . எனும் வரிகள் இடம் பெறும் சங்க இலக்கியம்

A) குறுந்தொகை 

B) கலித்தொகை

C) பதிற்றுப்பத்து

D) அகநானூறு

8 . பத்துப்பாட்டு நூல்களில் மிகுதியான அடிகளைக் கொண்ட நூல்

A) மதுரைக்காஞ்சி 

B) நெடுநல்வாடை

C) பெரும்பாணாற்றுப்படை 

D) திருமுருகாற்றுப்படை

9 . "ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று. ..”

எனும் வரிகள் இடம் பெறும் சங்க இலக்கியம்

A) பரிபாடல்

B) பதிற்றுப்பத்து

C) அகநானூறு

D) புறநானூறு

10. திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர்

A) நக்கீரர்

B) கபிலர்

C) அகத்தியர்

D) தொல்காப்பியர்

11. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் சங்க இலக்கியப் பாடலை இயற்றிய புலவர்

A) கபிலர்

B) ஔவையார்

C) கணியன் பூங்குன்றனார் 

D) மோசி கீரனார்

12. மானவிஜயம் என்ற செய்யுள் நாடகம் இயற்றியவர்

A) கபிலர்

B) பரணர்

C) பரிதிமாற்கலைஞர் 

D) மறைமலையடிகள்

13. மதுரைக் காஞ்சியில் இடம் பெறும் அடிகளின் எண்ணிக்கை

A) 872

B) 782

C) 287

D) 278

14. கார்காலம் என்று வழங்கப்படுவது

A) சித்திரை - வைகாசி 

B) ஆவணி-புரட்டாசி

C) தை-மாசி

D) ஐப்பசி-கார்த்திகை

15. முல்லை நிலத்தின் தெய்வம்

A) முருகன்

B) திருமால்

C) வருணன்

D) இந்திரன்

16. பகைவரின் நிலத்தைக் கைக்கொள்ளலை விளக்கும் திணை

A) வஞ்சி

B) காஞ்சி

C) நொச்சி

D) உழிஞை

17. சோழன் கரிகாலனின் சிறப்பைக் கூறும் ஆற்றுப்படை நூல்

A) பெரும்பாணாற்றுப்படை 

B) சிறுபாணாற்றுப்படை

C) பொருநராற்றுப்படை 

D) கூத்தராற்றுப்படை

18. இருவருள் ஒத்த அன்பு அமையாத ஏற்றத் தாழ்வான காதல் நிலை

A) புணர்தல்

B) ஊடல்

C) இரங்கல்

D) பெருந்திணை

19. இன்னா நாற்பது எனும் கீழ்க்கணக்கு நூலின் ஆசிரியர்

A) கபிலர்

B) பரணர்

C) திருவள்ளுவர் 

D) அம்மூவனார்

20. 'பழமொழி நானூறு' எனும் கீழ்க்கணக்கு நூலின் ஆசிரியர் 

A) கணிமேதாவியார்

B) முன்றுறையரையனார்

C) மதுரைக் கண்ணங்கூத்தனார்

D) மாறன் பொறையனார்

21. இரட்டை மணிமாலையின் ஆசிரியர்

A) திருமூலர்

B) மாணிக்கவாசகர்

C) ஆண்டாள்

D) காரைக்காலம்மையார்

22. திராவிட சிசு என்று போற்றப்பட்டவர்

A) திருமூலர்

B) திருநாவுக்கரசர்

C) திருஞானசம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

23. "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.......' 'எனும் பாடலினைப் பாடியவர்

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

24. "பரவை என்னும் என் காதலிக்கும் எனக்கும் பற்றாக உள்ள பெருமானே" என்று பாடலில் குறிப்பிட்டுள்ளவர்

A) திருநாவுக்கரசர் 

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர் 

D) மாணிக்கவாசகர்

25. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்களுள் ஒன்று

A) திருப்பாவை

B) திருவந்தாதி

C) திருமந்திரம்

D) திருக்கோவையார்

26. , "மானிடர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்று இறைவனிடம் தெய்வக் காதல் கொண்டவர்

A) ஔவையார்

B) குலசேகராழ்வார்

C) ஆண்டாள்

D) காரைக்காலம்மையார்

27. 'திருப்பாவை ஜீயர்' என்று போற்றப்படுபவர்

A) இராமானுஜர் 

B) ஆதிசங்கரர்

C) அரவிந்தர்

D) குலசேகராழ்வார்

28. திராவிட வேதம் என்று புகழப்படுவது

A) திருவாய்மொழி

B) திருக்கோவை

C) திருக்குறள்

D) திருவாசகம்

29, நம்மாழ்வாரின் சீடர்

A) தொண்டரடிப் பொடியாழ்வார்

B) பெரியாழ்வார்

C) மதுரகவியாழ்வார்

D) திருமங்கையாழ்வார்

30. புறப்பொருள் வெண்பாமாலைக்கு மூல நூலாகத் திகழ்ந்தது

A ) புறநானூறு

B) பன்னிருபடலம்

C) வெண்பாப் பாட்டியல்

D) கலிங்கத்துப்பரணி

31. காரியாசான் எழுதிய நூல்

A) முதுமொழிக் காஞ்சி 

B) கார் நாற்பது

D) சிறுபஞ்சமூலம்

C) ஏலாதி

32. பின்வருவனவற்றுள் ஒன்று புறப்பொருள் நூல் ஆகும்

A) கார் நாற்பது

B) களவழி நாற்பது

C) கைந்நிலை

D) இன்னிலை

33. காவிரிபூம்பட்டினத்தின் புகழ் பாடும் பத்துப்பாட்டு நூல்

A) முல்லைப்பாட்டு 

B) குறிஞ்சிப்பாட்டு

C) பட்டினப்பாலை 

D) நெடுநல்வாடை

34. நாலடியார் எனும் நீதிநூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

A) கால்டுவெல்

B) பெஸ்கி

C) இராபர்ட்-டி-நொபிலி 

D) ஜி.யூ.போப்

35. கழுமலம் என்னும் இடத்தில் நடைபெற்ற போர் பற்றிய புறப்பொருள் நூல்

A) கலிங்கத்துப்பரணி 

B) கார் நாற்பது

C) களவழி நாற்பது 

D) தக்கயாகப் பரணி

36. சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று அரசர்களையும் போற்றிப் பாடும் நூல்

A) முத்தொள்ளாயிரம்

B) மூவருலா

C) பதிற்றுப்பத்து 

D) திருக்கோவையார்

37. சைவத் திருமுறைகளின் எண்ணிக்கை

A) 18

B) 17

C) 14

D) 12

38. அற்புதத் திருவந்தாதியின் ஆசிரியர்

A) திருமூலர்

B) ஔவையார்

C) காரைக்காலம்மையார் 

D) பொய்கையார்

39. பத்தாம் திருமுறை என்று அழைக்கப்படுவது

A) திருவாசகம்

B) திருமந்திரம்

C) திருவந்தாதி

D) திருவிரட்டை மணிமாலை

40. 'அன்பே சிவம்' என்று தம் பாடலின் மூலம் வலியுறுத்தியவர்

A) திருஞானசம்பந்தர் 

B) திருமூலர்

C) திருநாவுக்கரசர் 

D) சுந்தரர்

41. தமிழில் தோன்றிய முதல் உரைநடை நூலாகக் கருதப்படுவது

A) இறையனார் களவியலுரை

B) இளம்பூரணர் உரை

C) சேனாவரையர் உரை

D) பரிமேலழகர் உரை

42. தமிழில் தோன்றிய முதற்காப்பியம்

A) கம்பராமாயணம் 

B) சீவகசிந்தாமணி

C) மணிமேகலை

D) சிலப்பதிகாரம்

43. தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம்

A) பெரிய புராணம்

B) திருவிளையாடற்புராணம்

C) மணிமேகலை

D) சீவகசிந்தாமணி

44. நாதகுத்தனார் இயற்றிய காப்பியம்

A) நாககுமார காப்பியம் 

B) யசோதர காப்பியம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

45. வெண்ணாவலுடையார் இயற்றிய சிறு காப்பியம்

A) யசோதர காப்பியம்

B) உதயணகுமார காவியம்

C) வளையாபதி

D) குண்டலகேசி

46. சரசுவதி அந்தாதியை இயற்றிய புலவர்

A) இறையனார்

B) நக்கீரர்

C) கம்பர்

D) கபிலர்

47. மூவருலா எனும் நூலின் ஆசிரியர்

A) கம்பர்

B) ஒட்டக்கூத்தர்

C) சேக்கிழார்

D) ஜெயங்கொண்டார்

48. கொன்றைவேந்தன் எனும் நூலை இயற்றியவர்

A) கபிலர்

B) பரணர்

C) ஔவையார் 

D) நப்பசலையார்

49.. ஐந்திலக்கணத்திற்கும் விளக்கம் கூறிய முதல் இலக்கண நூல்

A) அகத்தியம்

B) வீரசோழியம்

C) நன்னூல்

D) தொல்காப்பியம்

50. தலைவன் தன் மனைவியிடத்து அனுப்பும் தூது

A) விறலிவிடு தூது

B) மேகவிடு தூது

C) கிள்ளைவிடு தூது 

D) நெஞ்சுவிடு தூது


51 பிள்ளைத் தமிழ் இலக்கணம் குறிப்பிடும் குழந்தைப் பருவங்கள்

A) 7

B) 9

C) 10

D) 12

52. குழந்தைப் பருவத்தின் செங்கீரைப் பருவம் என்பது 

A) ஒன்பதாம் மாதம் 

B) ஏழாம் மாதம்

C) ஐந்தாம் மாதம் 

D) மூன்றாம் மாதம்

53. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத் தமிழ் நூல்

A) குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்

B) மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

C) சேக்கிழார் பிள்ளைத் தமிழ்

D) திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ்

54. கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது

A) தில்லைக் கலம்பகம்

B) மதுரைக் கலம்பகம்

C) நந்திக் கலம்பகம்

D) திருக்காவலூர்க் கலம்பகம்

55. உழத்திப் பாட்டு என்று வழங்கப்படுவது

A) பள்ளுப் பாடல்கள் 

B) மருதநிலப் பாடல்கள்

C) குறத்திப் பாட்டு 

D) முல்லைப் பாட்டு

56. 'அறநெறிச் சாரம்' எனும் அறநூலை இயற்றியவர்'

A) பொய்யாமொழிப் புலவர் 

B) முனைப்பாடியார் 

C) அதிவீரராம பாண்டியர் 

D) பரஞ்சோதி முனிவர்

57. 'ஏகாம்பரநாதர் உலா' வை இயற்றியவர்

A) அந்தகக் கவி வீரராகவ முதலியார்

B) இரட்டையர்

C) சிவப்பிரகாசர் 

D) தாயுமானவர்

58. வீரசைவ சமயத்தை விளக்கும் மொழிபெயர்ப்பு நூல்

A) பிரபுலிங்க லீலை 

B) வீரசோழியம்

C) நளவெண்பா

D) மனோன்மணீயம்

59. நாட்டுப்புறவியலைக் குறிக்கும் Folklore என்ற சொல்லை உருவாக்கியவர்

A) மாக்ஸ்முல்லர் 

B) வில்லியம் ஜான் தாமஸ்

C) சு. சக்திவேல்

D) வில்லியம் பாஸ்கல்

60. 'முத்துப்பாட்டன் கதைப்பாடல்' என்பது

A) கவிதை

B) புதுக்கவிதை

C) சிறுகதை.

D) நாட்டுப்புற இலக்கியம்

61. வில்லிப்புத்தூரார் பாரதத்தை மேலும் விரிவாகத் தம் பெயரால் நூலாகச் செய்தவர்

A) நல்லாப்பிள்ளை

B) வடமலையப்ப பிள்ளை

C) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

D) அருணாசலக் கவிராயர்

62 'பக்தியின் மொழி தமிழ்' என்று சிறப்பித்துக் கூறியவர்

A) மறைமலையடிகள் 

B) பரிதிமாற்கலைஞர்

C) தனிநாயகம் அடிகள் 

D) சேக்கிழார்

63. கால்டுவெல் ஐயர் இயற்றிய நூல்

A) இலக்கிய ஒப்பாய்வியல்

B) இலக்கியத் திறனாய்வு

C) மொழி வரலாறு

D) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

64. வீரமாமுனிவர் இயற்றிய நூல்

A) நற்கருணைத் தியான மாலை

B) தேம்பாவணி

C) தாமரைத் தடாகம்

D) மோட்சப் பிரயாணம்

65. தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

A) அண்ணாமலை ரெட்டியார்

B) மறைமலையடிகள்

C) அண்ணாமலை செட்டியார்

D) வேதநாயக சாஸ்திரியார்

66. கருணாமிருத சாகரம் என்ற இசைத்தமிழ் நூலை இயற்றியவர்

A) வேதநாயகம் பிள்ளை 

B) இராமலிங்க அடிகள்

C) விபுலானந்த அடிகள் 

D) ஆபிரகாம் பண்டிதர்

67. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தவர்

A) ஆபிரகாம் பண்டிதர்

B) ஆதிசங்கரர்

C) இராமாநுஜர்

D) இராமலிங்க அடிகள்

68. தமிழில் முதல் புதினத்தை எழுதி வெளியிட்டவர்

A ) கல்கி 

B) அகிலன்

C) ஜெயகாந்தன்

D) வேதநாயகம் பிள்ளை

69. கல்கியின் 'அலையோசை' சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு

A) 1946

B) 1956

C) 1966

D) 1965

70. அசோகமித்திரனின் 'அப்பாவின் சிநேகிதர்' சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு

A) 1966

B) 1976

C) 1986

D) 1996

71 .  டாக்டர் மு.வ. அவர்களின் இறுதி நாவல்

A) கரித்துண்டு 

B) அகல் விளக்கு

C) வாடாமலர்

D) பாவை 

72 தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர்

A) பம்மல் சம்பந்த முதலியார்

B) சகஸ்ரநாமம்

C) டி.கே. சண்முகம்

D) அவ்வை துரைசாமிப் பிள்ளை

73. 'ஷெல்லிதாசன்' என்ற புனைப் பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டார்

A) பாரதி

B) பாரதிதாசன்

C) கண்ணதாசன் 

D) வண்ணதாசன்

74. 'ஊசிகள்' எனும் புதுக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

A) மு. மேத்தா

B) கவிஞர் வாலி

C) கவிஞர் மீரா

D) வைரமுத்து

75. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்' என்று போற்றப்படுபவர்

A) அகிலன்

B) அண்ணா

C ) சுஜாதா

D) கல்கி

76. 'குறிஞ்சி மலர்' எனும் புதினத்தை இயற்றியவர்

A) அகிலன்

B) கல்கி

C) நா. பார்த்தசாரதி 

D) ஜெயகாந்தன்

77. வி.எஸ். காண்டேகரின் படைப்புகளைச் சிறப்புற மொழி பெயர்த்தவர்

A) பாலகுமாரன்

B) கா.ஸ்ரீ.ஸ்ரீ

C) த.நா. குமாரசாமி 

D) சேனாதிபதி

78. 'தேசபக்தன்' என்ற நாளிதழின் ஆசிரியராக இருந்தவர்

A) சோமசுந்தர பாரதியார் 

B) பாரதியார்

C) திரு.வி.க.

D) பாரதிதாசன்

79. 'புதுமைப்பித்தன் வரலாறு' எனும் நூலை எழுதியவர்

A) ரகுநாதன்

B) ம.பொ.சிவஞானம்

C) கி. சந்திரசேகரன்

D) பத்மநாபன்

80. குழந்தை இலக்கியம் வளர்ப்பதையே வாழ்நாள் தொண்டாகக் கொண்டவர்

A) பாரதி

B) பாரதிதாசன்

C) கவிமணி

D) அழ. வள்ளியப்பா

81. பதிப்பீட்டுக் கல்வி என்பதன் பொருள்

A) சமயக் கல்வி (Religious Education)

B) அறமுறைக் கல்வி (Moral Education)

C) மதிப்புறு கல்வி (Cost Education)

D) கல்வியின் பொருளாதாரம் (Economics of Education)

82 தண்டனை ஒரு

A) உட்புகுத்தல் (Reinforcement)

B) எதிர்மறை உட்புகுத்தல் (Negative Reinforcement)

C) உடன்படு உட்புகுத்தல் (Positive Reinforcement)

D) ஊக்கமளித்தல் (Encouragement)

83. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினைத் தீர்மானிக்கும் இரு காரணிகளாவன

A) மரபுநிலை மற்றும் பள்ளி

B) பள்ளி மற்றும் வீடு

C) வீடு மற்றும் சமுதாயம்

D) மரபுநிலை மற்றும் சூழ்நிலை

84. 'சுதந்திரமான சூழ்நிலையில் கற்றல்' (Learning in free atmosphere) என்பதை வலியுறுத்தியவர்

A) மாண்டிச்சோரி 

B) காக்னே

C) ஜே. கிருஷ்ணமூர்த்தி

D) காந்திஜி

85. கருத்து தெரிநிலை சோதனை (Thematic Appreception Test) ஒருவரின் .......... கண்டறிய நடத்தப்படுகிறது.

A) அறிவுத்திறனை

B) ஆளுமையை (Personality)

C) நினைவாற்றலை

D) சாதனையை

86. "நம்முடைய தவறுகளை வேறொருவரிடம் காணும் மனப்பாங்கு நம் அனைவரிடத்திலும் உள்ளது”

A) தன்னையறியாமலே பிறர் கருத்தைக் கையாளுதல் (Introjection)

B) அடக்கி வைத்தல் (Repression)

C) எடுத்துக் காட்டல் (Projection)

D) அறிவார்ந்த விளக்கம் (Rationalisation)

87. தனிப்பட்ட முறையில் கற்பித்தல் (Individualised Instruction) என்பதன் பின்னணியில் உள்ள கொள்கை
யாது?

A) உட்புகுத்தல் மற்றும் கற்றல் (Reinforcement and learning)

B) இசைவுபடுத்தல் (Accommodation)

C) பொருந்துதல் (Adaptation)

D) திட்டங்கள் (Schemes)

88. செய்முறை கற்றல் (Learning by doing) என்ற முறையை வலியுறுத்தியவர் யார்?

A) ஏ.எஸ்.நீல்

B) ஜான் டூவி

C) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 

D) கில்பேட்ரிக்

89. குழந்தையின் சமுதாய வளர்ச்சியில் (Social development) முக்கிய பங்கு வகிப்பது

A) பள்ளி

B) குடும்பம்

C) சமூகம்

D) அண்டை அயலார்

90. வகுப்பறையில் கவனம் (Attention) செலுத்துவதை தீர்மானிக்கும் ஸ்தூலமான காரணி (Objective factor)

A) ஈடுபாடு (Interest)

B) புதுமை (Novelty)

C) உணர்ச்சிபூர்வம் (Sentiment)

D) LOTUUITSTOOL (Attitude)

91. மெதுவாக கற்போருக்கு (Slow learners) பயன்படும் கற்பித்தல் - கற்றல் முறை

A) விரிவுரை (Lecture) 

B) தானே கற்றல்

C) நினைவிலிருத்தல் 

D) குழு கற்றல்

92. "சீ, சீ இந்த பழம் புளிக்கும்” எனும் நரியின் கதை எந்தவகையைச் சார்ந்தது?

A) அறிவுத்திறம் வாய்ந்த தன்மை (Intellectualization)

B) அறிவார்ந்த விளக்கம் (Rationalization)

C) எதிர்மறையான தன்மை (Negativism)

D) தன்னலம் (Egocentrism)

93. குறைபாடுள்ள (Defectives) மற்றும் நெறி பிறழ்ந்தவர்களை (Delinquents) பயனுள்ள மற்றும் திறமையுள்ள சமுதாய உறுப்பினர்களாக பயிற்றுவிக்க
முயல்வது

A) பரிகாரம் தரும் பயிற்சி (Remedial Instruction)

B) திட்டமிட்ட பயிற்சி (Programmed Instruction)

C) உடற்பயிற்சி (Physical Instruction)

D) சமயச் சார்புள்ள பயிற்சி (Religious Instruction)

94. ஓர் அறிவுத்திறன் சோதனையில் பத்து வயது சிறுவன் ஒருவனின் மனவளர்ச்சி வயது 11 எனக் கண்டறியப்-
படுகிறது. இந்த 1.Q. ஆனது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.

A) 100

B) 120

C) 110

D ) 90

95. DIET எனப்படுவது

A) மாவட்ட ஆசிரியர் வேலைவாய்ப்பு நிலையம் (District Institute for Employment of Teachers)

B) மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிலையம் (District Institute of Education and Training)

C) மாவட்ட துவக்க ஆசிரியர் கல்வி நிலையம் (District Institute of Elementary Teacher Education)

D) மாவட்ட கல்வித் தொழில்நுட்ப நிலையம் (District Institute of Educational Technology)


96. தன் நிலையாக்கம் (Self actualisation) என்பது "தனியாள் திறனின் (Personal potential) முழு வளர்ச்சி ஆகும்

A) ராட்டர்

B) மாஸ்லோ

C) மெக்லீலாண்ட் (McCleland)

D) ஹல் (Hull)

97. கல்வியறிஞர் ஃப்ரோபெல் (Froebel) ஒரு

A) கருத்தியல் கொள்கைவாதி

B) இயற்கை கொள்கைவாதி

C) யதார்த்த கொள்கைவாதி

D) பயனளவு கொள்கைவாதி

98. மாண்டிசோரி அம்மையாரால் துவக்கப்பட்ட பள்ளி --------- 
என்றழைக்கப்பட்டது.

A) குழந்தைகள் இல்லம்

B) சிறுவர் பள்ளி

C) கோடை மலைப் (Summer Hill) பள்ளி

D) சிறுமியர் பள்ளி

99. MLL எனப்படுவது

A) இறுதிநிலைக் கற்றல் (Marginal level of Learning)

B) மீப்பெரு நிலைக் கற்றல் (Maximum Level of Learning)

C) மோட்டார் கற்றல் அளவு நிலை (Motor Learning Level)

D) மீச்சிறு நிலைக் கற்றல் (Minimum Level of Learning)

100. காந்தியடிகளின் கல்விக் கொள்கையின் பெயர்

A) சமூகக் கல்வி

B) ஆதாரக் கல்வி

C) தொழில்நுட்பக் கல்வி 

D) ஊரகக் கல்வி

101. கற்றல் வளைவில் (Learning curve) முன்னேற்ற மில்லாமையைக் காட்டும் காலக் கட்டம் (Period)

A) பிழை (Error)

B) தடை (Inhibition)

C) பேக்கன் (Plateau)

D) முடிவுறும் பகுதி (Terminal Point)

102. அறிவாற்றலின் குழுக் காரணிக் கொள்கையை (Group factor theory of intelligence) எடுத்துரைத்தவர்

A) ஸ்பியர்மேன்

B) தார்ண்டைக்

C) தர்ஸ்டன்

D) கில்ஃபோர்ட்

103. நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம்

A) மன வயது  X 100

கால வயது

B) கால வயது x 100

மன வயது

C) மனவயது  

கால வயது

D ) கால வயது

மன வயது

104. எவ்வகையான சிந்தனை உருவாக்குதலுக்கு (Creativity) மிகவும் தேவைப்படுகிறது?

A) உடன்பாட்டு சிந்தனை (Positive thinking)

B) குவி சிந்தனை (Convergent thinking)

C) Quinlamp home (Practical thinking)

D) விரி சிந்தனை (Divergent thinking)

105. ராபர்ட் கேக்னேயின் கற்றல் வகையின் படி நிலைக் Qarama (Theory of hierarchical learning) கொண்டிருப்பது

A) 7 வகைக் கற்றல்கள் 

B) 2 வகைக் கற்றல்கள்

C) 8 வகைக் கற்றல்கள் 

D). 10 வகைக் கற்றல்கள்

106. இலவச மற்றும் கட்டாய பள்ளிக் கல்வியை வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு எது?

A) பிரிவு 354

B) பிரிவு 45

C) பிரிவு 30

D) பிரிவு 31

107. மாணவர்களுக்கு பண்பு வடிவமைத்தலில் (Character formation) மிகவும் ஆற்றல் வாய்ந்த வழிமுறை யாது?

A) மாணவருக்கு அடிக்கடி அறிவுரை கூறுதல்

B) மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தல்

C) பள்ளிகளில் சமயச் சார்பான. விழாக்களை (Religious functions) நடத்துதல்

D) அவர்களை பாடல்கள் பாட வைத்தல்

108. நீங்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் பலத்த
வெடியோசை கேட்கிறது. அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?

A) வகுப்பறையில் இருந்து கொண்டு மாணாக்கர் தலைவனை (class leader) வெளியே நடப்பதை அறிந்துவர
அனுப்புவீர்கள்.

B) வகுப்பிலிருந்து வெளியே வந்து நடப்பதை அறிவீர்கள்.

C) தகவலறிய பக்கத்து வகுப்புக்கு ஓடுவீர்கள்

D) மாணவர்களை இயல்பாகவே வகுப்பிலிருந்து வெளியேறச்
சொல்வீர்கள்.

109. மாநில அளவில் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த உதவும் அமைப்பு

A) NCERT

B) NCTE

C) SCERT

D) DTE

110. ............ மாற்றியமைக்க கல்வி உதவுகிறது.

A) மனப்பான்மை

B) நடத்தை

C) வாழ்க்கை

D) ஈடுபாடு

111. இந்திய வரலாற்றில் 'இந்திய நெப்போலியன்'என்றழைக்கப்பட்டவர் யார்?

A) அசோகர்

B) இரண்டாம் சந்திரகுப்தர்

C) சாணக்கியர்

D) சமுத்திரகுப்தர்

112. கீழ்க்கண்டவர்களுள் "தலையிடாமை நிலை” (Laissez- faire) பொருளாதார கொள்கையுடன் தொடர்புடையவர்
யார்?


A) மால்தஸ்

B) மார்ஷல்

C) ஆடம் ஸ்மித்

D) கீன்ஸ்


113. இந்தியா மற்றும் சீனாவைப் பிரிக்கும் எல்லைக்கோடு என அழைக்கப்படுகிறது.


A) ரேட்கிளிஃப் கோடு (Radcliffe line)

B) துராந்த் கோடு (Durand line)

C) OLDÓLO COMIGO (McMahon line)

D) மேகிநாட் கோடு (Maginot line)


114. கீழ்வருவனவற்றுள் எந்த நாடு 'வெள்ளை யானைகளின் நாடு' என்றழைக்கப்படுகிறது?


A) மலேஷியா

B) தாய்லாந்து

C) கனடா

D) எத்தியோப்பியா


115. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?


A) இராஜா ராம்மோகன்ராய் 

B) இரவீந்திரநாத் தாகூர்

C) கேஷப் சந்திரசென் 

D) எம்.ஜி. ரானடே


116. மலேரியா ................ஆல் ஏற்படுகிறது.


A) பிளாஸ்மோடியம் 

B) வைரஸ்

C) DNA

D) பாக்டீரியம்


117. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 ................. குறிப்பிடுகிறது.


A) சட்டத்தின் முன் அனைவரும் சமம்

B) தீண்டாமை ஒழிப்பு

C) பேச்சுரிமை

D) மதச் சுதந்திரம்


118. டைனமோ என்ற கருவி --------
மாற்றுகிறது 


A) மின்னாற்றலை எந்திர ஆற்றலாக (Electricity to mechanical energy)

B) எந்திர ஆற்றலை மின்னாற்றலாக (Mechanical energy
to electrical energy)

C) காந்த விசையை மின்னாற்றலாக (Magnetism to
electricity)

D) மின்னாற்றலை காந்தவிசையாக (Electricity to
magnetism)


119. சங்க காலத்தில் ஆட்சி செய்யாத அரச குலம் எது?


A) பாண்டியர்

B) சேரர்

C) சோழர் 

D) பல்லவர்


120. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற FIFA உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் எந்த நாட்டை இத்தாலி
வென்றது?


A) ஜெர்மனி

B) பிரான்ஸ்

C) போர்ச்சுக்கல் 

D) ஸ்பெயின்


121 திராவிட மொழிகளின் எண்ணிக்கை

A) 6

B) 8

C) 10

D) 12

122. திராவிட மொழிகளில் முதன்முதலில் திருந்திய நிலைபெற்ற மொழி

A) தமிழ்

B) தெலுங்கு

C) கன்னடம்

D ) துளு 

123. வடுகு என்னும் சொல் பின்வரும் மொழிகளுள் ஒன்றைக் குறிக்கும்

A) தமிழ்

B) தெலுங்கு

C) குடகு

D) கோதம்

124. இந்தியாவின் வடமேற்கு பலுசிஸ்தானத்தில் பேசப்பட்டு வரும் மொழி

A) கோலமி

B) பார்ஜி

C) பிராகூய்

D) மால்டா

125. 'உலகம்' எனும் சொல் பின்வரும் பொழியிலிருந்து தமிழுக்கு வந்தது.

A) தெலுங்கு

B) ஆங்கிலம்

C) இந்தி

D) சமஸ்கிருதம்

126. சொற்பிறப்பு ஆராய்ச்சி என்பது ஆங்கிலத்தில் பின்வருமாறு
அழைக்கப்படுகிறது

A) semantics

B) phonetics

C) etymology 

D) linguistics

127. சொற்களின் வடிவு குறுகுதலை இவ்வாறு அழைப்பர்

A) போலி மொழி

B ) மரூஉ

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

128. மனிதனது மனத்தை விடுத்து ஆராய்ந்தால் மொழியைப் பற்றி அறியத்தக்கதாக ஒன்றும் இல்லை' எனும் கருத்தைக் கூறியவர்

A) கால்டுவெல்

B) மு. வரதராசனார்

C) எம்.பிரீல்

D) ஜே. வெண்ட்ரியே

129. “பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது. எழுத்து மொழி அந்தஆற்றலில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது” என்று கருதும்
மொழியறிஞர்

A) கால்டுவெல்

B) ஜே. வெண்ட்ரியே

C) எம்.பிரீல்

D) மாக்ஸ்முல்லர்

130. சீன மொழியில் வெறுஞ்சொற்களாகக் கருதப்படுபவை,
தமிழில் பின்வருமாறு வழங்கப்படுகின்றன

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல் 

D) உரிச்சொல்

131. நடு இந்தியாவில் சில மலைகளிலும் காடுகளிலும் வாழும் மக்கள் பேசும் மொழி

A) கூ

B) குவி

C) கோண்ட்

D) கோந்தி


132. தமிழில் 'காணி' எனும் எண்ணலளவை பின்வரும் முறையில்
எழுதப்படுகிறது

A ) 1 / 80

B) 1 / 60

C) 1/ 40

D) 1 / 20

133. பொது மொழியிலிருந்து வேறுபட்டுச் செயற்கையாக அமைக்கப்படும் மொழிக்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படும்.

A) பொது மொழி 

B) குறுமொழி

C) சைகை மொழி 

D) குழந்தை மொழி

134. `சுமார்' எனும் சொல் எம்மொழியைச் சார்ந்தது?

A) போர்த்துக்கீசியம் 

B) தமிழ்

C) பாரசீகம்

D) தெலுங்கு

135. பஞ்சாயத்து' எனும் சொல் எம்மொழியைச் சார்ந்தது?

A) தமிழ்

B) தெலுங்கு

C) இந்தி

D) இந்துஸ்தானி

136. சந்திரகுப்த மௌரியன் காலத்தில் கிரேக்கத் தூதராக வந்தவர்

A) பிளைனி

B) மெகஸ்தனிஸ்

C) தாலமி

D) அகஸ்டஸ்

137. தமிழில்  1 / 320 x 1 / 7 எனும் பின்னத்தில், ஏழில் ஒரு பங்கு பின்வருமாறு அழைக்கப்படுகிறது.

A ) அணு 

B) குனம்

C) இம்மி

D) மும்மி

138. மணிப்பிரவாள நடை என்பது

A) தமிழும், தெலுங்கும் 

B) தமிழும், கன்னடமும்

C) தமிழும், மலையாளமும் 

D) தமிழும், வடமொழியும்

139. மறைமலையடிகள் என்று தூய தமிழில் தம் பெயரை மாற்றிக்
கொண்டவர்

A) சூரியநாராயண சாஸ்திரியார்

B) தேவநேயப் பாவாணர்

C) சுவாமி வேதாசலம்

D) இராமலிங்கர்

40. விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதியவர்

A) இராமானுஜர் 

B) பரிமேலழகர்

C) சங்கரர்

D) இராமகிருஷ்ண பரமஹம்சர்

141. வடமொழியில் காவ்யாதர்சம் எனும் நூலை எழுதிய தமிழர்

A) சங்கரர்

B) தண்டி

C) இராமானுஜர்

D) இராமலிங்கர்

142 வடமொழியில் மத்தவிலாச பிரகசனம் என்ற நாடக நூல் இயற்றிய அரசன்

A) மகேந்திரவர்மன் 

B) சந்திரகுப்த மௌரியன்

C) பிரகதத்தன்

D) விஷ்ணுகுப்தன்

143. தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூல்

A) புறப்பொருள் வெண்பாமாலை

B) நன்னூல்

C) தண்டியலங்காரம்

D) தொல்காப்பியம்

144. புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர்

A) அகத்தியர்

B) இறையனார்

C) ஐயனாரிதனார் 

D) தொல்காப்பியர்

145. எட்டுத்தொகை நூல்களில் இடம் பெறும் அகநூல்களின் எண்ணிக்கை

A) 3

B) 4

C) 5

D) 6

146. நெடுந்தொகை என்று அழைக்கப்படுவது

A) புறநானூறு

B) அகநானூறு

C) நெடுநல்வாடை 

D) குறிஞ்சிப்பாட்டு

147. தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்தவர்

A) சி.வை. தாமோதரம் பிள்ளை

B) எஸ். வையாபுரிப்பிள்ளை

C) உ.வே. சாமிநாதய்யர்

D) கே.என். சிவராசப்பிள்ளை

148. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர்

A) இளம்பூரணர்

B) சேனாவரையர்

C) பேராசிரியர்

D) நச்சினார்க்கினியர்

149. பதினெண்மேற்கணக்கு என்று அழைக்கப்படுவது

A) தற்கால இலக்கியம் 

B) சிற்றிலக்கியம்

C) இடைக்கால இலக்கியம் 

D) சங்க இலக்கியம்

150. சங்க இலக்கியத்தில் மருதத்திணைப் பாடல்களைச்
சிறப்பாகப் பாடியவர் என்று போற்றப்படுபவர்

A) அம்மூவனார்

B) கபிலர்

C) ஓரம்போகியார் 

D) பேயனார்


*****************   ****************   ********


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********

Post a Comment

0 Comments