PG - TRB - தமிழ்
தமிழரின் கடறபயணங்கள்
கடற்பயணங்கள்
* தமிழ்நாட்டு வணிக வரலாறு தொன்மை வாய்ந்தது.
* பழங்காலந்தொட்டே உள்நாட்டு, அயல்நாட்டு வணிகத்தில் தமிழர் சிறப்புற்றிருந்தனர்.
* உள்நாட்டு வணிகத்தை விட அயல்நாட்டு வணிகத்தில் அதிலும் கடல் வணிகம் மிகவும் சிறப்புற்றிருந்தது.
தமிழர்களின் பன்னாட்டுத் தொடர்பை விளக்கும் மொழிகள்
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" - ஔவையார்
யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்
கடற்பயணம் பற்றிய தொல்காப்பிய குறிப்புகள்
வெளிநாடுகளில் இருந்து கடல்வழி வந்தவை - குதிரைகள்
உள் நாட்டில் இருந்து தரைவழி வந்தவை - கறி (மிளகு)
வடமலையில் இருந்து வந்தவை -
மெருகிடப்பட்ட பொன்,மாணிக்கக் கற்கள்
மேற்கு மலையில் இருந்து வந்தவை - சந்தனம், ஆரம்
தென் கடலில் இருந்து கிடைத்தவை - முத்து
கீழ்க்கடலில் விளைந்தவை - பவளம்
* கடற்பயணத்தை தொல்காப்பியம் 'முந்நீர் வழக்கம்' என்று குறிப்பிட்டுள்ளது.
* தொல்காப்பிய பொருளதிகாரம் பொருள்வயிற் பிரிவு' இரு வகைப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. அவையாவன :
காலில் (தரைவழிப் பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு
வணிகத் தொடர்புடைய நாடுகள்
ரீசு, உரோம், எகிப்து, சீனம், பாலஸ்தீனம், மெசபடோமியா,சபிலோனிய முதலியன தமிழரின் கடல்வணிகம் குறித்து பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி ஆகியன குறிப்பிட்டுள்ளன.
ஏற்றுமதியான பொருள்கள்
* இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி மயில்தோகை முதலானவை. இருப்பினும், ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது.
இறக்குமதியான பொருள்கள் :
சீனத்துப்பட்டு, சர்க்கரை, கண்ணாடி, கற்பூரம், குதிரைகள் (அரேபியா).
* அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கரும்பு கொண்டுவரப்பட்டு பயிரிடப்பட்டது.
* தமிழர்கள், கிரேக்கர்களையும் உரோமானியரையும் 'யவனர்' என்று அழைத்தனர்.
கலத்தைக் குறிக்கும் வேறு பெயர்கள் : கப்பல், கட்டுமரம். நாவாய்,
படகு, பரிசில். புணை. தோணி, தெப்பம், திமில், அம்பி. வங்கம். மிதவை,
0 Comments