குடியரசுதின வாழ்த்துகள்
பாரதியாரின் ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா - இசை
அன்பான குழந்தையே வா! வா! வா!
ஆக்கமான பாரதம் காண்போம் வா வா வா !
இந்தியாவின் வளம் பெருக்குவோம் வா வா வா !
ஈடில்லா நாடுஆக்குவோம் வா வா வா
உலகத்தினூடே வளர்ச்சி காண்போம் வா வா வா
ஊருக்கெல்லாம் எடுத்துச்சொல்வோம் வா வா வா
எளியமக்களை உயர்த்துவோம் வா வா வா
ஏற்றத்தாழ்வு நீக்கி வாழ்வோம் வா வா வா
ஐவிரல்கள் போல் இணைந்திருப்போம் வா வா வா
ஒற்றுமையைப் பேணி வாழ்வோம் வா வா வா
ஓங்குப் புகழ் பெறச் செய்வோம் வா வா வா
ஔவை போன்ற மூத்தோர் வழி செல்வோம் வா வா வா.
73 வது குடியரசு தின வாழ்த்துகள்
0 Comments