வீரத்துறவி விவேகானந்தர் பிறந்த தினம் / SWAMY VIVEKANANDAR BIRTH DAY - JANUARY 12

 


வீரத்துறவி விவேகானந்தர் பிறந்த தினம்

                                         12 • 01• 2022 


ஆன்மீகப் பேரொளியாக சுடர்விட்டு, இந்திய நல்வழியில் பங்கிட்டுக்  தாயகப் பெருமையை தரணியெங்கும் நிலையாய் , கலையாய் , செழிப்பாய், வளர்த்தி , நிறுத்தி வளம்பெறச் செய்தவர் .இந்தியத் தாயின் அருந்தவப் புதல்வன்.அகிலம்போற்றும் இந்தியச் சமயத் தலைவர்.மேற்குவங்கம் தந்த மேன்மை மிகு பாரத மாமணி. சிறுவயது முதலே நினைவாற்றல்மிகுந்த தலைவர்.படிப்புடன் விளையாட்டையும், இசையையும்இனிதே கற்று சிறந்தவர். இவை அனைத்துக்கும் மேலாக தனி மகுடமான தியானச் சிகரம் , பகுத்தறிவுச் சுரங்கம் , இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமைமிகு சீடர், இளைஞர்களை எழுச்சியடையச் செய்யும் கருத்துக் கருவூலம் , தாயகம்மற்றுமல்லாது தரணியெங்கும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையிலான சொற்பொழிவுகளை கேட்கும்மக்கள் மனம் தெய்வீகம் பெற இதமான மழையெனப் பொழிந்தவர். 1893 -- ஆம் ஆண்டு சிகாகோ உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் அரங்கம் நிறைந்த ஆன்றோர் கூட்டத்தில் இந்திய பாரம்பரிய இறை செய்திகளை எடுத்தியம்பி, ஏற்றம்பெறச் செய்தவர்.

        சுவாமி விவேகானந்தர் 1863 - ஆம் ஆண்டு ஜனவரி 12 - ம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கு ம் - புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். வங்காள மொழியை தன் தாய் மொழியாகக் கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்து , பின் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் ( presidency college) சேர்ந்தார்.பின்னர் ஸ்காட்ஷ் சர்ச்சு கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல் நாட்டுத் தத்துவங்கள் மற்றும்ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றைப் படித்தறிந்தார். இவற்றின் விளைவு , இறை உண்மைகளைப் பற்றி பலகேள்விகளும், ஐயங்களும் எழுந்தன. உலகில் காணப்பட்ட முரணான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வேறுபாடுகளை அறவே வெறுத்தார். அது மட்டுமல்லாமல் அனுபவமிக்க பெரியோரிடத்தில் அது பற்றிய செய்திகளை விவாதிக்கவும் செய்தார்.இதை அடுத்து பிரம்ம சமாஜ உறுப்பினர் ஆனார்.அங்கும் அவரி ன் கேள்விக்கு சரியான விடை அகப்பட வில்லை.ஆதலால் இறை உண்மைகளைப் பற்றி அறிய மகான் இராமகிருஷ்ண ரைட் சந்தித்து சீடரானார். முதலில் இராமகிருஷ்ணரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள தயங்கினார். பின் இராமகிருஷ்ணரின்  போதனைகள் , உருவவழிபாடு என்பது , இரு வழிப்பயணமாக உணர்த்து , அவை தரும் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்து இணைந்தார். 

        1886 - ம் ஆண்டு இராமகிருஷ்ணர் இந்தப் பின் , விவேகானந்தர் மற்றும்  இராமகிருஷ்ணரின் முதன்மைச் சீடர்களும் துறவறம் பூண்டனர். அதன் பிறகு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பயணித்து  , இந்தியாவின் அனைத்து கலாச்சார பண்பாடுகளையும் நுகர்ந்து அறிந்தார் .அதே சமயம் இந்தியமக்களின் கீழ் நிலை வாழ்க்கை மற்றும் ஆங்கிலேய அடிமைநிலையைக் கண்டு மனம் வெதும்பினார். இந்தப் பயண முடிவில் ,1892 - ஆம் ஆண்டு  டிசம்பர் 24 - ம் நாள் தென்னிந்தியாவின் கன்னியாக் குமரி சென்ற விவேகானந்தர் , அங்கு கடல் நடுவே அமைந்துள்ள ஒரு பாறைமீதமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார். அத்தியானமானது இந்தியாவின் நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் பற்றிய தியானமாக மேற்க் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.எனவே இன்றளவும்  அப்பாறை விவேகானந்தர் பாறையாக , நினைவிடமாக வரலாறு கூறி மிளிர்கிறது.

விவேகானந்தரின் தத்துவங்கள்  :

                    பழங்காலம் முதலே ஆன்மீகப் பயணத்தில் தழைத்து, செழித்து வளர்ந்தது இந்திய நாடு.இங்கு எண்ணிலாத் தன்னலமற்ற மாதவத் துறவிகளையும் , மகன்களையும் தன்னகத்தேக் கொண்ட பாரதப் பெரும் பரப்பு , இவற்றில் மாபெரும் ஒளியா க விளங்கியவர் இந்தியத் தாயின் இணையில்லா மாணிக்கம் " வீரத்துறவி " விவேகானந்தர். இவரது வீரம் செறிந்த உணர்ச்சியூட்டும் உரைகள் அனைத்தும் இளைஞர்கள் மனமெங்கும் மகிழ்ச்சிப் பூக்களாய், எழுச்சி விதைகளாய், சூழ்ச்சி முறியடிக்கும் சுந்தர வழிகளாய் வாழ்த்தி வகைப்படுத்தி , வழி நடத்தின . ஆதலால் இளைஞர் இதயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கையும், வீரமும் கிடைக்கப்பெற்று ததும்பி நிரம்பி வழியவகைச் செய்தார், தமது தூய வீரத் தத்துவம் பரப்பி.அவற்றி லிருந்து சில....

* நீ சாதிக் கப் பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்ல.

* உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு , அதிலிருந்தே நல்ல செயல்கள் விளையும்.

* உலகில் உள்ள தீமைகள் பற்றியே நாம் வருந்துகிறோம்.நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றிய சிறிதும் கவலை கொள்வதில்லை.உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும். 

*யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் பின்னாளில் உன்னை யோசிக்க வைக்கும்.

* எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.இது வரையில் நீங்கள் செய்து முடிக்காத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

* எழுமின் , விழுமின் ,குறிக்கோளை அடையும் வரை அயராது உழைமின். 

* உண்மைக் காக எதையும் தியாகம் செய்யலாம்.ஆனால் எதற்க்காகவும் உண்மையை தியாகம் செய்து விடாதீர்கள்.

* பிரச்சனை களைக் கண்டு பயந்து ஒதுங்கினால் அது உன்னைத் துரத்தும்.அதை நீ எதிர்த்து நின்றால் ஒதுங்கிக் கொள்ளும்.

* நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.

* பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக்கொடுப்பது மட்டும் தான்.

இவ்வாறாக வீரத் துறவியின் விவேக வைர வரிகள் இந்திய இளைஞர்களின் முன்னேற்ற பாதையென மின்னி அழைக்கி றது. அவற்றை பாதையாக்கி இளைஞர் சமுதாயம் பயணிக்ககுமானால், உயர்ந்ததொரு நல்உலகை படைக்க முடியும் என்பதில் ஐயமில்லை.இந்திய நாட்டையும் , மக்களையும் உயர்ந் நிலையில் நிறுத்தி காண எண்ணிய அழகிய துறவியின் இனிய நினைவுகளை நினைவுக்கொள்வதோடு மட்டும் நிறுத்தாமல், அந்த எழுச்சி மிகு மந்திர வரிகளுக்கு வடிவுகொடுத் து அதன் விளைவாக ஏற்றம் மிகு மாற்றத்தைக் காண்போம்.!

                                      🙏   வெல்க பாரதம்.🙏

Post a Comment

0 Comments