10 ஆம் வகுப்பு - தமிழ் - முன்னுரிமைப்பாடம் - இயல் 1 , 2 , 3 - குறுவினா - வினா & விடை / 10th TAMIL - EYAL 1 , 2 , 3 - KURUVINA - VINA & VIDAI

 

              பத்தாம் வகுப்பு  - தமிழ்

           இயல் 1 , 2 , 3 - பாடப்பகுதி குறுவினாக்களும் விடைகளும்

                    இயல் - 1  - மொழி

                        அமுத ஊற்று

பாடப்பகுதி குறுவினா & விடை 

1. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

i ) வேங்கை = மரத்தைக் குறிக்கும்.

(ii) வேம் + கை = வேகின்ற கை.

2 ) மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!' - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத்
தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

(i) சீவக சிந்தாமணி
(ii) வளையாபதி
(iii) குண்டலகேசி

3 ) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள
பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள் :

(i) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

(ii) ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

பிழையான தொடர் :

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

காரணம் :

பல சீப்பு வாழைப்பழங்கள் சேர்ந்ததுதான் ஒரு தாறு.
(ii) ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்தான் இருக்கும்.

4 ) 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ்' இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன்
இலக்கணம் தருக.

(i) உடுப்பதூஉம் - இன்னிசை அளபெடை
(ii) உண்பதூஉம் - இன்னிசை அளபெடை

                                                   இயல் - 2

குறுவினா

1. ) நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு
முழக்கத்தொடர்களை எழுதுக.

i ) மரங்கள் இருக்குமிடம்
    மகிழ்ச்சி நிலைக்குமிடம்.

ii ) மரம் மனிதனின் மூன்றாவது கரம்.

*************    ************   ************

2 ) வசன கவிதை - குறிப்பு வரைக.

(i) உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை
வடிவம் வசன கவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் PS Peery (Free verse) என்றழைக்கப்படும்.இவ்வடிவம் தமிழில் பாரதியரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

(ii) உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார்
இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம்
உருவாகக் காரணமாயிற்று.

************    ************    **************


3 ) தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

(i) தண்ணீர் குடி : தண்ணீரைக் குடி - இரண்டாம் வேற்றுமை தொகை.

(ii) தயிர்க்குடம்
: தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

தொடரில் அமைக்க :

(i) காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

(ii) மல்லிகா தயிர்க்குடம் தூக்கிச் சென்றாள்.

***********    **************     ************

                            இயல் - 3

3 ) ' எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. ' சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

சிரித்துச் சிரித்துப் பேசினார்! என்று கூறும்போது அடுக்குத் தொடராகும்.


5 ) பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

(i) பாரதியார் கவிஞர்  : பெயர்ச்சொல்
(ii) நூலகம் சென்றார்  : வினைச்சொல்
(iii) அவர் யார்?               :  வினாச் சொல்


*************     ***************   ***********

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

**************   ***************  ************


Post a Comment

1 Comments