வீரத்தமிழச்சி அஞ்சலை அம்மாள் பிறந்த தினம்

 

வீரத் தமிழச்சி அஞ்சலை அம்மாள் பிறந்த தினம்.

                  20 • 01 • 2022


ஆங்கிலேய அடக்குமுறையின்

கொடும் தண்டனையும் 

கொடூர நிகழ்வும் கண்டு

செந்நீர் சிந்திய வீர தமிழச்சிகள் பலர்...

பாரதத் தாயின் கண்ணீர் துடைக்க 

சுதந்திர  போராட்ட பக்கத்தில் 

தன் பெயர் பதித்த வீரமங்கையர்

ஆயிரமாயிரமாக அணிவகுத்து

அகிம்சை வழிகண்டும்

ஆயுதமேந்தியும் ...

வீறுகொண்டெழுந்து 

வெள்ளையரை விரட்டியடிக்க 

வெஞ்சினம் கொண்டு

தன் இனம் காக்க போராடிய தியாக 

வரலாற்றில் அஞ்சலை அம்மாள்

இன்று போற்றப் படுகிறார்.!         இந்திய நாடு அந்நியரின் அசுரப்பிடியில் சிக்கித் தவித்த வேலையில் , நாட்டையும், மக்களையும் காப்பாற்றவும்,மீட்டெடுக்கவும் போராடிய பெருங் கூட்டத்தில் சரிபாதியாக பெண்களும் அணி திரண்டனர். இதில் தமிழகப் பெண்களும் தங்கள் மறம் போற்ற தியாகம் ஈந்து , தாய் நாட்டின் சுதந்திரம் காக்க முன்வந்துப் போராடினர். அச் சிறப்புக்குரிய பெண்களில் ஒருவரே அஞ்சலை அம்மாள். இவர் 1890 - ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார்.இவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், எனினும் அந்நியரிடம் அடிமைப்பட்டு, அல்லல் பட்டுக் கொண்டிருந்த தன் தாயகத்தின் நிலையை அறிந்துக் கொள்வதில்  பேரார்வம் கொண்டு தேடித் தேடி செய்திகளைச் செய்திகளை அறிந்து கொண்டார்.விடுதலைச் செய்திகளை அறிந்ததன் வாயிலாக காந்தியக் கொள்ளையின் மீது ஈர்ப்புக் கொண்டார்.விளைவு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து , இந்திய விடுதலைக்கு சிறு வித்தாக விழுந்து பெரு விருட்சங்களுள் ஒன்றானார். 


தாயும் ,சேயும் இணைந்து தாய் நாடு காத்தல்

         தாய் நாட்டைக் காப்பாற்ற தாயும், சேயும் இணைந்து செய்த போராட்டம், 1857 - ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்தில் இந்திய விடுதலைக்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொலை செய்ய காரணமாக இருந்த நீலன் சிலை சென்னையில் இருந்து , இதை அகற்றுவதற்காக சோமயாஜீலு தலைமையில் நடந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.அப்போராட்டத்தில் தான் மட்டுமல்லாது தனது மகள், ஒன்பது வயதே நிரம்பிய அம்மாக்கண்ணுவையும் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். முளையிலேயே தாய் நாட்டுப் பற்றையும் , மகத்துவத்தையும்  எடுத்தியம்பி போராட வைத்தார்.இதனால் வெள்ளையரின் சின்னத்துக்கு ஆளாகி, தாயும் சேயும் சிறைக்குச் சென்றனர். அவ்வாறு சிறை சென்ற போதும் , ஆங்கிலேய அரசுக்கு அடிபணியாமல், அச்சம் கொள்ளாமல் , அடிமைத்தனத்தை எதிர்த்து அகலத்திற்கு எடுத்துக்காட்டாக தன் மகளை வளர்த்தார். ஆகையால் காந்தியடிகள் தமிழகம் வரும் போதெல்லாம் அம்மாக்கண்ணுவைப் பார்க்க விரும்புவார். ஒரு சமயம் லீலாவதி " எனப் பெயர் சூட்டி தமது வர்தா ஆசிரமத்துக்கே அழைத்துச் சென்றார். 

                            1932- ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகி  , சிறை சென்றார் அஞ்சலை அம்மாள்.வேலூர் சிறைக்குள் அவர் நுழைத்த போது நிறைமாத கர்ப்பிணியா  அவரை , பலர் தடுத்தும்  இந்திய விடுதலைக்காக சிறை சென்றார் . சிறைச் சென்று அங்கு கடும் வேதனையை அனுபவித்த போதும் தன் கொள்கையில் மாறவில்லை.கர்ப்பிணியான  அஞ்சலை அம்மாள் , ஒரு மாதம் அவகாசம் கேட்டுக் கொண்டு சிறையிலிருந்து வெளியே சென்று வீர மகனைப் பெற்றெடுத்தார்.அக் குழந்தை பிறந்து இரு வாரங்களே ஆகியிருந்த நிலையில் இளம் குழந்தையுடன் மீண்டும் சிறைக்குச் சென்றார். இச்செயல் அவரின் நேர்மையும் , உறுதியும் அவரைச் சிறைப்படுத்தியவர்களை சிந்திக்க வைத்தது.தன் தாய் நாட்டிற்காக எந்தச் சூழல் வந்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாமல் விடுதலையே முழு மூச்சாக எண்ணி செயல்லாற்றினார். 

             மேலும் இவரது குரு பற்றுக்கு  சான்றாக நிகழ்ந்த ஒரு சம்பவம் காந்தியடிகள் தமிழகம் வந்த போது அஞ்சலை அம்மாவை சந்திக்கும் வாய்ப்பற்றதாக கடுமையானதொரு தடைச்சூழல் நிலவியது. எனினும் அத்தடைகளைத் தகர்த்தெறிந்து தன்தேசத் தலைவனைக் காண பர்தா அணிந்துக்  கொண்டு காந்தியடிகளைச் சந்தித்தார்.இவரது தைரியத்தைக் கண்டு வியந்த அண்ணல் அவர்கள் பாராட்டி தென்னாட்டு ஜான்சி ராணி என வாழ்த்தி மகிழ்ந்தார்.

         தைரியம் மட்டுமல்லாது தமிழரின் தலையாய பண்புகளில் ஒன்றான விருநுதோம்பல் பண்பையும் கைவரப் பெற்றவர். தொண்டன்கள் நிறைந்த தமது இல்லத்தில் உணவும் , உபச்சாரமும் ஓயாது காணப்பட்டது.இரக்கமும் உதவும் உள்ளமும் கொண்ட அவர் விடுதலைக்குப் பின் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 

தெய்வீகமான தீர்த்தாம் பாளைய குடிநீர் திட்டம் :

          சட்டமன்ற உறுப்பினரான பிறகு தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு பல உதவிகளும் , நலத்திட்டங்களும் செய்தார பெருமுயற்சியை மேற்கொண்டார்.அவ்வாறாக செய்து முடிக்கப்பட்டத் திட்டமே தீர்த்தாம் பாளையத்தின் குடிநீர்த் திட்டமாகும் . இத்திட்டம் அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றியது. அக்கிராமத்து மக்கள் குடிநீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருந்தனர் , அந்தச் சூழலை உணர்ந்த அஞ்சலை அம்மாள் அவர்கள் வீராணம் ஏரி வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்கால் உருவாக்கி தீர்த்தம் பாளையத்துக்கு கொண்டு வந்தார்.எனவே இவரது நினைவைப் போற்றும் வகையில் அவ் வாய்க்கால் "அஞ்சலை வாய்க்கால் " எனப் பெயரிட்டப்பட்டது.இவ்வாறு தன்னலம் கருதாமல் நாட்டிற்காகவும் , மக்களுக்காகவுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த அஞ்சலை அம்மாவின் அன்பு மனமும் ,வீர உணர்வும்,நாட்டுப் பற்றும் தலைவணங்கச் செய்கிறது. இ‌ந்த நாளில் அஞ்சலை அம்மாவை நினைவுக் கொள்வது அவருக்கு நாம் செய்யும் மரியாதையும் ,இளைய சமுதாயத்திற்கு செய்யும் வழிக்காட்டுதலும் ஆகும்.எனவே இவரது வீரவரலாற்றைப் போற்றி வணங்குவோம்.!

Post a Comment

0 Comments