PG - TRB - தமிழ் - தமிழ்ச்சமுதாய வரலாறு - தமிழரின் வணிகம் / PG TRB TAMIL - TAMIZHARIN VANIKAM

 

PG - TRB - தமிழ் - தமிழ்ச் சமுதாய வரலாறு

தமிழர் வணிகம்

* பழந்தமிழர் அறத்தின்வழியே வணிகம் செய்தார்கள். பொருள் தேடுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள்.

* அவர்கள், கொள்வதும் மிகைக் கொளாது, கொடுப்பதும் குறைபடாது வணிகம் செய்தார்கள்.

* உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருளீட்டினார்கள். நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, கொள்ளு, எள்ளு முதலிய பருப்பு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.

* கடல் வணிகத்திலும் தமிழர் சிறந்திருந்தனர். பொன்னும், மணியும், முத்தும், துகிலும் கொண்டு கடல் கடந்து வணிகம் செய்தனர்.)

* பண்டைத் தமிழகத்தில் துறைமுகப்பட்டினங்கள் அதிகமாக இருந்தன. பூம்புகார் முதலான பெருநகரங்கள் வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன.

* கிறித்து பிறப்பற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து அரிசியும் மயில் தோகையும், சந்தனமும் ஏற்றமதி செய்யப்பட்டன.

* கி.மு 10-ஆம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில் தோகையும், வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன.

* தமிழர்களுக்குச் சாவக நாட்டுடனும் கடல் வணிகத் தொடர்பு இருந்தது.

“தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி உமணர் போகலும்”

                                   நற்றிணை 183

“ பாலொடு வந்து கழொடு பெயரும்" - குறுந்தொகை 23

“பொன்னொடு வந்து கறியோடு பெயரும்..."

அகநானூறு 149

மேற்கண்ட சங்க இலக்கிய வரிகள் மூலம் பண்டைத் தமிழர் ' பண்டமாற்று' முறையில் வணிகம் செய்தனர் என்பதை அறியமுடிகிறது.

தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் என்ற இரண்டு முறையில் வணிகம் செய்தனர். தரைவழி வணிகத்தில் வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள் இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்"

- திருக்குறள்.

“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" - பட்டினப்பாலை.

மேற்கண்ட பாடல் வரிகள் தமிழக வணிகரின் நேர்மையைப் பற்றி கூறுகின்றன.

சேரர்களின் வணிகம்

உள் நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்குத் காரணம் சேர நாட்டின் இயற்கை அமைப்பே ஆகும்,

சேரர்கள் வலிமைமிகுந்த கடற்படையை வைத்திருந்தனர். செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் என அழைக்கப்பட்டான். கடம்பர் எனப்பட்ட கடற்கொள்ளையர்களை சேரமன்னர்கள் அடக்கியதால் கடல் வணிகம் செழித்து விளங்கியது. முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள்   ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் அயல்நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.   பொன், மென்மையான புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இச்செய்தியை

மீனோடு நெற்குவை இ

மிசையம்பியன் மனைமறுக்குந்து

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியால் கரைசேர்க்குந்து''

என்ற புறநானூறு 343-ஆம் பாடல் விளக்குகிறது.

      மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். விலையைக் கணக்கிட நெல்லே அடிப்படையாக இருந்தது. உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை

"நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கோள்ளீ ரோவெனச் சேறிதொறும் நுவலும்"

என்று அகநானூறு 390-ஆம் பாடல் விளக்குகிறது.




Post a Comment

0 Comments