TRB - தமிழ் - தமிழர்களின் விருந்தோம்பல்

 

TRB - TAMIL


தமிழர்களின் விருந்தோம்பல்

தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மிகவும் சிறப்பானது. உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களே விருந்தினர் ஆவர். விருந்தினர்களை ஆதரிப்பதே விருந்தோம்பல் ஆகும்.

    தமிழர் மரபான விருந்தோம்பல் குறித்த இலக்கியச் செய்திகள் :

திருக்குறள் : 

   திருவள்ளுவர் 'விருந்தோம்பல்' என்று ஓர்   அதிகாரத்தையே இல்லறவியலில் அமைத்துள்ளார். முகம் வேறுபடாமல்,  மலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை 

"மோப்பம் குழையும் அனிச்சம்” என்ற குறளில் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம் :

" -------  தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை'

கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி, அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துகிறாள்.

கம்பராமாயணம் :

"பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்து அன்றி விளைவன யாவையே”

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்து ஈகையும்

செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

கலிங்கத்துப்பரணி :

(விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போல''

விருந்தினர்க்கு உண விடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார் செயங்கொண்டார்.

புறநானூறு :

“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே........'

அமிழ்தமே கிடைத்தாலும் தனித்து உண்ணார் தமிழர் என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்.

நற்றிணை :

“அல்லில் ஆயினும் விருந்து வரின்

உவக்கும்''

நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று

உணவளித்தாள் குடும்பத் தலைவி.


Post a Comment

0 Comments