ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் 1 - மொழி - அமுதென்று பேர்
திராவிட மொழிக்குடும்பம்
சான்றிதழ்த் தேர்வு - 1
வினா உருவாக்கம் - புலவர்.துவாரகன்,
தமிழாசிரியர் , அரசு ஆதிந. பெ.மே.நி.ப ,
திருச்சி.
மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************** ************** **********
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வில் பங்கேற்று சான்றிதழ் பெற விரும்புவோர் , தங்கள் பெயர் , படிப்பு அல்லது பணி , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி இணைப்பினைப் பெறலாம். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசுப்பணிக்குச் செல்லலாம்.
************** ************** *************
1) திராவிட மொழிகளுக்குள் மூத்த
மொழியாய் விளங்குவது -----
அ) தமிழ்
ஆ) மலையாளம்
இ) சமஸ்கிருதம்
ஈ) கன்னடம்
விடை : அ ) தமிழ்
2) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின்
எண்ணிக்கை
அ) 1500
ஆ) 1300
இ ) 400
ஈ) 2000
விடை : ஆ ) 1300
3) இந்தியாவில் பேசப்படும்
மொழிக்குடும்பங்கள்
அ) 3
ஆ) 5
இ) 6
ஈ) 4
விடை : ஈ ) 4
4) இந்திய நாடு மொழிகளின்
காட்சிச்சாலையாகத் திகழெகிறது என்று
கூறியவர்
அ) குமரிலபட்டர்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) ராஸ்க்
ஈ) கால்டுவெல்
விடை : ஆ ) ச.அகத்தியலிங்கம்
5) ' திராவிடம் ' என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் -----
அ) குமரிலபட்டர்
ஆ) கால்டுவெல்
இ) ஹோக்கன்
ஈ ) எமினோ
விடை : அ ) குமரிலபட்டர்
6) ஹோக்கன் என்பவர் சில மொழிகளை
இணைத்து ------ எனப் பெயரிட்டார்
அ) அமுது
ஆ) திராவிடா
இ) தமிழியன்
ஈ) மலையாளம்
விடை : இ ) தமிழியன்
7) 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
என்னும் நூலை எழுதியவர்
அ) கால்டுவெல்
ஆ) ஹீராஸ் பாதிரியார்
இ) வில்லியம் ஜோன்ஸ்
ஈ) மாக்ஸ்முல்லர்
விடை : அ ) கால்டுவெல்
8) தற்போதுள்ள திராவிட மொழிகளின்
எண்ணிக்கை
அ) 26
ஆ) 30
இ) 28
ஈ ) 24
விடை : இ ) 28
9) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
எழுதப்பட்ட ஆண்டு
அ) 1854
ஆ) 1856
இ ) 1846
ஈ ) 1858
விடை : ஆ ) 1856
10 ) ' தமிழ் நமக்கு மட்டும் தாய்மொழியன்று ; அது உலக மொழிகளுக்கெல்லாம்
தாய்மொழி என்று கூறியவர் -----
அ) கால்டுவெல்
ஆ) தேவநேயப்பாவாணர்
இ) கமில்சுவலபில்
ஈ ) எல்லிஸ்
விடை : ஆ ) தேவநேயப்பாவாணர்
11) வினைச்சொற்களில் திணை, பால் , எண் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும் மொழி
அ) மலையாளமொழி
ஆ) வடமொழி
இ) திராவிடமொழி
ஈ) ஜெர்மன்மொழி
விடை : இ ) திராவிட மொழி .
12 ) ' கண்' என்னும் சொல் மலையாளத்தில் -
---- என்று வழங்கப்படுகிறது.
அ) கண்
ஆ ) கண்ணு
இ ) கெண்
ஈ) கண்ணா
விடை : ஆ ) கண்ணு
13 ) வடமொழி ஐரோப்பிய மொழிகளோடு
தொடர்புடையது என்று கூறியவர் -----
அ) வில்லியம் ஜோன்ஸ்
ஆ) கால்டுவெல்
இ) எமினோ
ஈ) பரோ
விடை : அ ) வில்லியம் ஜோன்ஸ்
14) மொரிசியஸ் , இலங்கை உள்ளிட்ட
நாடுகளின் பணத்தாளில் ----- மொழி
இடம்பெற்றுள்ளது.
அ) தமிழ்
ஆ) உருது
இ ) வடமொழி
ஈ) மலையாளம்
விடை : அ ) தமிழ்
15 ) தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல்
அ) நன்னூல்
ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ) தண்டியலங்காரம்
விடை : இ ) தொல்காப்பியம்
16) தொன்மையான கன்னட இலக்கியம்
அ) பாரதம்
ஆ) இராமசரிதம்
இ) கவிராஜ மார்க்கம்
ஈ) சங்க இலக்கியம்
விடை : இ ) கவிராஜ மார்க்கம்
17) மலையாளத்தின் தொன்மையான
இலக்கண நூல் -----
அ) ஆந்திரபாஷா பூஷணம்
ஆ) லீலாதிலகம்
இ) தொல்காப்பியம்
ஈ) கவிராஜ மார்க்கம்
விடை : ஆ ) லீலா திலகம்
18) கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்த
மனிதன் கண்டுபிடித்த கருவியே
அ) மொழி
ஆ) மதம்
இ ) இசை
ஈ) ஓவியம்
விடை : அ ) மொழி
19 ) சொற்களின் முதன்மைப் பகுதியான
வேர்ச்சொல் என்பது ----- எனப்படும்.
அ ) வினைச்சொல்
ஆ) பெயர்ச்சொல்
இ) உரிச்சொல்
ஈ) அடிச்சொல்
விடை : ஈ ) அடிச்சொல்
20) பின்வருவடவற்றுள் எது நடுத்திராவிட
மொழிக்குடும்பத்தைச் சார்ந்தது ?
அ இருளா
ஆ) கொரகா
இ) குரூக்
ஈ) தெலுங்கு
விடை : ஈ ) தெலுங்கு
2 Comments
Thank u fr the mcq today I have exam
ReplyDeleteThanks for the answer
ReplyDelete