குடியரசு தினம் - ஜனவரி 26 - சிறப்பு இயங்கலைத் தேர்வு - வினா & விடை / JANUARY 26 - ONLINE CERTIFICATE EXAM - QUESTION & ANSWER

 


குடியரசு தினம் - 

சிறப்பு வினாடி வினா - 

போட்டித் தேர்வு - Green Tamil 

வினா உருவாக்கம் - 

திருமதி.தமிழ் தென்றல்

 , தமிழாசிரியை , தருமபுரி.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , 

மதுரை. - 97861 41410

*************    ************   **************

தினமும் இரவு 8 மணிக்கு நடக்கும்
ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர் , வகுப்பு , பணி, மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

****************    ************  *************

1) இந்திய அரசியலமைப்புச் சட்டம்
செயலாக்கத்திற்கு வந்த நாள் -----
தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அ) குடியரசு தினம்

ஆ) ஆசிரியர் தினம்

இ) சுதந்திர தினம்

விடை : அ) குடியரசு தினம்

2) இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதலில் ---- , ----- மொழிகளில் ஒப்புதல்
கையொப்பமிடப்பட்டது.

அ) ஆங்கிலம் தமிழ்

ஆ) கன்னடம், இந்தி

இ) ஆங்கிலம் , இந்தி

விடை : இ) ஆங்கிலம் , இந்தி

3) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்
தலைவர் யார்?

அ) வி.வி.கிரி.

ஆ) இராஜேந்திர பிரசாத்

இ) அப்துல்கலாம்

விடை : ஆ) இராஜேந்திர பிரசாத்

4) சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார் ?

அ) மோதிலால் நேரு

ஆ) ஜவஹர்லால் நேரு

இ) இந்திராகாந்தி

விடை : ஆ) ஜவஹர்லால் நேரு

5) இந்தியாவின் தற்போதைய குடியரசுத்
தலைவர் யார்?

அ) பிரதிபா பாட்டில்

ஆ) அப்துல்கலாம்

இ) திரௌபதி முர்மு

விடை : இ) திரௌபதி முர்மு

6) சட்ட வரைவுக் குழுவின் தலைவர் ------

அ) அம்பேத்கர்

ஆ) டி.என்.சேஷன்

இ) இராஜேந்திர பிரசாத்

விடை : அ) அம்பேத்கர்

7) தலைநகர் டில்லியில் மூவர்ணக்கொடி
ஏற்றி வீரர்களின் அணிவகுப்பு
மரியாதையை ஏற்பவர் யார் ?

அ) குடியரசுத்தலைவர்

ஆ) பிரதமர்

இ) ஆளுநர்

விடை : அ) குடியரசுத்தலைவர்

8) குடியரசு தின விழாவில் சிறப்பாகப்
பணியாற்றிய ----- க்கு குடியரசுத் தலைவர்
பதக்கங்களை வழங்குவார்.

அ) வீரர்கள்

ஆ) ஆசிரியர்கள்

இ) மருத்துவர்கள்

விடை :  அ) வீரர்கள்

9 ) மாநிலங்களில் கொடியேற்றி , 
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பவர் ------

அ) முதல்வர்

ஆ) நீதிபதி

இ) ஆளுநர்

விடை : இ) ஆளுநர்

10 ) ஆளுநர் வீரதீரச் செயல் புரிந்த ------- க்குப்  பதக்கங்களை வழங்குவார்.

அ) கவிஞர்கள்

ஆ) காவலர்கள்

இ) மருத்துவர்கள்

விடை : ஆ) காவலர்கள்

11) பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு -----
அந்தஸ்தை வழங்கியது.

அ) சம உரிமை

ஆ) தனியுரிமை

இ) டொமினியன்

விடை :  இ) டொமினியன்

12 ) 1950 ஜனவரி 26 ஆம் நாள் அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர் ----- நாட்டைச் சேர்ந்தவர்.


அ) அதிபர் சுகர்ணோ - இந்தோனேஷியா

ஆ),இராசபக்சே - இலங்கை

இ) பெனாசீர்பூட்டோ - பாகிஸ்தான்

விடை : அ) அதிபர் சுகர்ணோ - இந்தோனேஷியா

13) 1995 ஆம் ஆண்டு குடியரசு தின சிறப்பு
விருந்தினராக அழைக்கப்பட்டவர் -----


அ) ஜான் கென்னடி

ஆ) நெல்சன் மண்டேலா

இ) ஜார்ஜ்புஷ்

விடை :  ஆ) நெல்சன் மண்டேலா

14 ) மக்களாட்சி என்பது மக்களால்------ காக   மக்களே நடத்தும் ஆட்சி.

அ ) தலைவர்

ஆ) முதலமைச்சர்

இ ) மக்கள்

விடை :  இ ) மக்கள்

15 ) ஜனநாயகத்தின் நான்கு தூண்கள்
என்பது நாடாளுமன்றம், அரசு இயந்திரம்,
நீதித்துறை மற்றும் ----- ஆகும்.

அ) ஊடகம்

ஆ) நாடகம்

இ) இலக்கியம்

விடை : அ) ஊடகம்


16) வயது வந்தோர் அனைவருக்கும் ------
என்ற புரட்சிகரமான உரிமையை சட்ட
வரைவு வழங்கியது.

அ) பேச்சுரிமை

ஆ) எழுத்துரிமை

இ) வாக்குரிமை

விடை : இ) வாக்குரிமை

17) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்
------  க்கும் ----- க்கும் சிறப்புச் சட்டம்
இயற்றப்பட்டது.

அ) ஆண்கள் , பெண்கள்

ஆ) பெண்கள் , குழந்தைகள்

இ) முதியவர்கள், குழந்தைகள்

விடை :  ஆ) பெண்கள் , குழந்தைகள்

18) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்
நடவடிக்கைகள் ----- ற்கு வழிகோலியது.

அ) சமதர்ம சமுதாயம்

ஆ) முற்போக்கு சமுதாயம்

இ) வளரும் சமுதாயம்

விடை : அ) சமதர்ம சமுதாயம்

19 ) இந்திய அரசியலமைப்பின் சிறந்த
கொள்கைகள் ------- ------ ஆகும்.

அ) நம்பிக்கை , வேலைவாய்ப்பு

ஆ) பொது உடைமை , மதச்சார்பின்மை

இ) மதநம்பிக்கை , கல்வி

விடை : ஆ) பொது உடைமை , மதச்சார்பின்மை

20) இந்திய அரசியலமைப்பின்படி இந்தியா ஒரு --- நாடாகும்.

அ ) தனியாட்சி

ஆ) சிறப்பாட்சி

இ) கூட்டாட்சி

விடை : இ) கூட்டாட்சி

Post a Comment

0 Comments