10 ஆம் வகுப்பு - தமிழ் - திருப்புதல் தேர்வு - மாதிரி வினாத்தள் - 2 , மதுரை / 10th TAMIL - EYAL 1, 2 , 3 - REVISION TEST - MADURAI

 


அரசு மேல்நிலைப் பள்ளி,

சருகுவலையபட்டி,

மதுரை மாவட்டம்.

மாதிரி வினாத்தாள்

பத்தாம் வகுப்பு தமிழ்

(இயல்கள்:1,2,3 இல்

முன்னுரிமைப் பாடங்கள்)

காலம்:3மணி.

மதிப்பெண்கள்:100

பகுதி-1

(மதிப்பெண்கள்:15)

தேர்ந்தெடுத்து எழுதுக

1.'எண்தொகையே! நற்கணக்கே'-

இவ்வடிகள் குறிப்பிடும் நூல்கள் எவை?

அ.பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

ஆ.எட்டுத்தொகையும்   பதினெண்கீழ்க்கணக்கும்

இ.பத்துப்பாட்டும் பதினெண்கீழ்க்கணக்கும்

ஈ.எட்டுத்தொகையும் திருக்குறளும்

2.'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் - குறிப்பிடுவது

அ.இலையும் சருகும்

ஆ. தோகையும்சண்டும்

இ.தாளும் ஓலையும்

ஈ.சருகும்சண்டும்


3. வேர்க்கடலை, மிளகாய்விதை,
மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர்வகை-------

அ.குலைவகை 

ஆ.மணிவகை

இ.கொழுந்துவகை

ஈ.இலைவகை

4."உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"-
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
நயங்கள் -----

அ.உருவகம், எதுகை

ஆ.மோனை,எதுகை

இ.முரண், இயைபு

ஈ.உவமை,எதுகை

5. 'தென்மொழி, தமிழ்ச்சிட்டு' ஆகிய
இதழ்களின் வாயிலாகத்
தமிழுணர்வைப் பரப்பியவர் யார்?

அ.இளங்குமரனார் 

ஆ.திரு.வி.க

இ.பாரதியார் 

ஈ.பெருஞ்சித்திரனார்

6. காடைக்கண்ணி'-எந்த மணி
வகையைச் சேர்ந்தது?

அ.கூலம்         ஆ.பயறு

இ.கடலை       ஈ.வித்து

7.'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது-
இத்தொடரில் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் வினையாலணையும்
பெயரும் முறையே------- 

அ.பாடிய கேட்டவர் 

ஆ.பாடல் பாடிய

இ. கேட்டவர் பாடிய 

ஈ.பாடல்; கேட்டவர்


8.காலம் காட்டும் இடைநிலைகள்
தொக்கி வரும் தொகை எது?

அ. வேற்றுமைத்தொகை

ஆ.உவமைத்தொகை

இ.வினைத்தொகை

ஈ.அன்மொழித்தொகை

9.தனித்துநின்று ஒரு பொருளையும்
பிரிந்து நின்று வேறு பொருளையும்
தருவது எது?

அ.தனிமொழி 

ஆ. தொடர்மொழி

இ.பொதுமொழி 

ஈ.அளபெடை

10.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல்
ஆகிய சொற்றொடர்களில் பொருளை
வேறுபடுத்துவது எது?

அ.வேற்றுமை உருபு 

ஆ. எழுவாய்

இ.உவம உருபு 

ஈ.உரிச்சொல்

11. குயில் கூவியது- எவ்வகைத்
தொகாநிலைத்தொடர்?

அ.எழுவாய்த்தொடர்

ஆ. வினைமுற்றுத்தொடர்

இ.விளித்தொடர்

ஈ.வேற்றுமைத்தொடர்

பாடலைப் படித்து விடை தருக.

வேலொடு நின்றான் இடுவென்
றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.


12. இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்

அ.மெய்உணர்தல் 

ஆ.கண்ணோட்டம்

இ.கொடுங்கோன்மை

ஈ.ஒழுக்கமுடைமை

13. கோலொடு நின்றான் - யார்?

அ.மன்னன் 

ஆ.கள்வன்

இ.பகைவன் 

ஈ.அறிஞர்

14.இக்குறளில் இடம்பெற்றுள்ள
வேற்றுமை உருபு

அ.இடு                 ஆ.ஒடு

 இ.போலும்        ஈ.என்றது

15. இரவு'- இச்சொல் குறளில் குறிக்கும்
பொருள் யாது?

அ.ஆட்சி 

ஆ. கொடுமை 

இ.இரத்தல்

ஈ.யாமம்

பகுதி-2
(மதிப்பெண்கள் -18)
பிரிவு-1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளி. (வினா எண்:21
கட்டாயவினா)

16.விடைக்கேற்ற வினா அமைக்க.

அ.அறிவு என்பது உண்மை
காணுதலாகும்.

ஆ.புதிய ஆத்திசூடி பாடியவர்
பாரதியார் ஆவார்.


17.'மன்னுஞ்சிலம்பே!மணிமே
கலைவடிவே!-இவ்வடிகளில்
இடம்பெறாத
ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

18.பழி என்று வள்ளுவர் எதனைக்
கூறுகிறார்?

19.பூவின் நிலைகளைக் குறிக்கும்
சொற்களை எழுதுக.

20. பாரதியார் கவிஞர் நூலகம்
சென்றார் அவர் யார்? ஆகிய
தொடர்களில் எழுவாயுடன் தொடரும்
பயனிலைகள் யாவை?

21.'அறிவு' என முடியும் குறளை எழுதுக.

பிரிவு-2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
மட்டும் விடையளி.

22. எண்ணுப் பெயர்களைக்
கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

அ.நாற்றிசையும் செல்லாத நாடில்லை

ஆ. ஐந்து சால்பு ஊன்றிய தூண்

23.கீழ்க்காணும் தொழிற்பெயர்களை
வகைப்படுத்துக.

அ.கட்டு

ஆ.நடத்தல்

24. தொகைச் சொற்களை அடையாளம்
கண்டு வகைப்படுத்துக.

அனைவருக்கும் மோர்ப்பானையைத்
திறந்து மோர் கொடுக்கவும்.

25.கலைச்சொற்களைத் தமிழில் தருக.

அ.consonant 

ஆ.modern literature

26.இருசொற்களையும் ஒரே தொடரில்
அமைத்து எழுதுக.

அ.மலை-மாலை 

ஆ.விடு-வீடு

27.பழமொழிகளை நிறைவு செய்க

அ.விருந்தும்..............

ஆ.ஒரு பானை

28.கீழ்க்காணும் சொற்களின்
தொடர்வகைகளை எழுதுக.

அ.தம்பீ,விரைந்து வா.
ஆ.நிறைந்த செல்வம்

பகுதி-III

(மதிப்பெண்கள்-18)

பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடை தருக.

29'புளியங்கன்று ஆழமாக
நடப்பட்டுள்ளது'- இதுபோல்
இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.

30.தானியங்களுக்கு வழங்கும்
சொற்களை எழுதுக.

31.பத்தியைப் படித்து விடை தருக.
"தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒரு பொருட் பலவரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே
சிறப்பாக உரியனவாகக் கருதப்படும்
சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக்
கருதப்படும் சொற்களும்
தமிழில்உள" என்கிறார் 'திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும்
நூலின் ஆசிரியரான கால்டுவெல்.

அ.இப்பத்தியில் கூறப்படும் திராவிட
மொழிகள் யாவை?

ஆ.தமிழுக்கே உரிய சிறப்பெனக்
கால்டுவெல் எதனைக் கருதுகிறார்?

இ.இப்பத்தியில் தமிழின் சொல்வளம்
பற்றிக் கால்டுவெல் குறிப்பிடுகிறார்
-என்ற கூற்று சரியா?தவறா?

பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடை தருக.
(வினா எண்:34 கட்டாய வினா)

32.தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணங்களாகப் பாவலரேறு சுட்டு
வன யாவை?

33.பாரதியின் 'காற்றே வா!' எனும் வசன
கவிதை வெளிப்படுத்தும்
கருத்துக்களை எழுதுக.

34.அடிபிறழாமல் எழுதுக.

அன்னை மொழியே.......
பேரரசே!

பிரிவு-3

எதையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடை தருக.

35.கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே!
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடிஆடி ஓய்ந்துறங்கு!

இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர்வகைகளை எழுதுக.

36.நச்சப் படாதவன் செல்வம்
நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

37.நாள்தொறும் நாடி முறைசெய்யா
மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.

-இக்குறளுக்கு அலகிட்டு
வாய்பாடு தருக.


பிரிவு-4

(மதிப்பெண்கள்-25)

அனைத்து வினாக்களுக்கும்
விடையளி.

38. அ.தமிழர், பொருளைக் கூர்ந்து
நோக்கி பருப்பொருட் சொற்களும்
நுண்பொருட் சொற்களும் அமைத்துக்
கொள்ளும் மதிநுட்பம் உடையவர்கள்
என்பதற்குச் சான்றுகள் தருக.

(அல்லது)

ஆ.முயற்சியின் அருமை பற்றி
வள்ளுவர் கூறும் கருத்துக்களைக்
கூறுக.

39.அ.மாநில அளவில் நடைபெற்ற "மரம்
இயற்கையின் வரம்" எனும்
தலைப்பிலான கட்டுரைப் போட்டியில்
வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற
தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

(அல்லது)

ஆ.உணவு விடுதியொன்றில்
வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்
விலை கூடுதலாகவும் இருந்தது
குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்
பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்
எழுதுக.

40.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41.அ.பத்தியைப் படித்துக் கருத்தைச்
சுருக்கி வரைக.

            வீடுகளில் மேசை,நாற்காலி, சோபாக்கள் இருக்கும்.பீரோக்கள்
இருக்கும். அவைகளில் வெள்ளித்
தாம்பாலமும், விதவிதமான
வட்டில்களும், பன்னீர்ச்செம்பும்
இருக்கும்.உடைகள் சிறு கடை அளவு
இருக்கும். மருந்துவகைகள் சிறு
வைத்தியசாலை அளவுக்கு
இருக்கும். அப்படிப்பட்ட வசதியுள்ள
வீடுகளிலேயுங்கூடப் புத்தகசாலை
இராது. வீட்டிற்கோர் புத்தகசாலை
நிச்சயம் வேண்டும். வாழ்க்கையில்
அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த
இடம், அலங்காரப் பொருள்களுக்கும்
போக போக்கியப் பொருள்களுக்கும்
தரப்படும் நிலைமாறி புத்தகசாலைக்கு
அந்த இடம் தரப்பட வேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை.அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.

(அல்லது)

ஆ.மொழிபெயர்த்துத் தலைப்பிடவும்.

Sangam literature shows that Tamils were
best in culture and civilization about two
thousand years ago. Tamil culture is rooted in
the life styles of Tamils throughout India,
Srilanka, Malaysia, Singapore, England and
Worldwide. Though our culture is very old,it
has been updated consistently. We should
feel proud about our culture.

42.நயம் பாராட்டுக


"கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்"
காளமேகப் புலவர்


பிரிவு-5

(மதிப்பெண்கள்-24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான
விடைதருக.

43.அ.தமிழின் சொல்வளம் பற்றியும்
புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
குறித்தும் தமிழ்மன்றத்தில்
பேசுவதற்கான உரைக் குறிப்புகளை
எழுதுக.

(அல்லது)

மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில்
தவழும் காற்றையும் கவிதை
நயத்தையும் பாராட்டி உரை செய்க.

44.அ.அன்னமய்யா என்னும்
பெயருக்கும் அவரின் செயலுக்கும்
உள்ள பொருத்தப்பாட்டினைக்
'கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி
கொண்டு விவரிக்க.

(அல்லது)

ஆ.கரிசல் இலக்கியம் பற்றியும், கோபல்லபுரத்து மக்கள்
கதைப்பகுதியில் இடம்பெற்றுள்ள
கரிசல் வழக்குச் சொற்கள் குறித்தும்
விவரிக்க.

45.அ.அன்பை எதிர்பார்த்திருப்பவராக,யாருமற்றவராக.... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த
நிகழ்வினைக் கதையாக்குக.

(அல்லது)

ஆ.'சான்றோர் வளர்த்த தமிழ் ' என்னும்
தலைப்பில் கட்டுரை வரைக.

****************   *************  ************

நன்றி 

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , சருகுவலையப்பட்டி , 

மேலூர் , மதுரை 

***************   ***************   ************

Post a Comment

0 Comments