ஞாயிறு கொண்டாட்டம் - போட்டித்தேர்வில் வெற்றி ! - கவிஞர்களும் பிறந்த ஊர்களும் - பகுதி - 1 / TNPSC - SUNDAY EXAM - PART - 1

 


ஞாயிறு கொண்டாட்டம் 

போட்டித்தேர்வில் வெற்றி!

கவிஞர்களும் பிறந்த ஊர்களும்.

வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

1) தேசியக் கவிஞர் பாரதியார் பிறந்த ஊர் -----

அ) எட்டயபுரம்

ஆ) தளவாய்புரம்

இ) பொன்னையாபுரம்

விடை : அ ) எட்டயபுரம்

2) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர்

அ) கூடுவாஞ்சேரி

ஆ) புதுச்சேரி

இ) விளாச்சேரி

விடை : ஆ ) புதுச்சேரி 

3) கலிங்கத்துப்பரணி இயற்றிய
செயங்கொண்டார் திருவாரூர் மாவட்டம்
------  என்னும் ஊரில் பிறந்தார்.

அ) முத்துப்பேட்டை

ஆ) திருவாஞ்சியம்

இ) பங்குடி

விடை : இ ) பங்குடி

4) கம்பர் பிறந்த ஊர் -----

அ) தேரெழுந்தூர்

ஆ) நாகூர்

இ) பாப்பாவூர்


விடை :  அ ) தேரெழுந்தூர்

5) சேக்கிழார் , காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ------- என்னும் ஊரில் பிறந்தார்.

அ) குன்றத்தூர்

ஆ) ஏனாத்தூர்

இ) காழியூர்

விடை : அ ) குன்றத்தூர்

6) திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்திலுள்ள ----- என்னும் ஊரில் பிறந்தார்.

அ) திருவந்திபுரம்

ஆ) திருவாமூர்

இ) திருமாணிகுழி

விடை : ஆ ) திருவாமூர்

7) அப்பூதியடிகள் பிறந்த ஊர் -----

அ) பொங்கலூர்

ஆ) வெள்ளலூர்

இ) திங்களூர்

விடை : இ ) திங்களூர்

8) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் -----

அ) திருமறைக்காடு

ஆ) திருப்புவனம்

இ) திருவாரூர்

விடை : அ ) திருமறைக்காடு

9) புகழேந்திப் புலவர் பிறந்த ஊர் 
தொண்டை நாட்டில் உள்ள ------

அ) படமாத்தூர்

ஆ) குளத்தூர்

இ) களத்தூர்

விடை : இ ) களத்தூர்

10 ) இராமலிங்க அடிகள் கடலூர்
மாவட்டத்திலுள்ள ------ எனும் ஊரில்
பிறந்தார்.

அ) மருதூர்

ஆ) மருதாடு

இ) மதலப்பட்டு

விடை : அ ) மருதூர்

11 ) வீரமாமுனிவர் பிறந்த நாடு -----

அ) பிரான்சு

ஆ) இத்தாலி

இ)  ஜெர்மனி

விடை : ஆ ) இத்தாலி

12) ஆறுமுக நாவலர்  யாழ்ப்பாணத்திலுள்ள ------  எனும் ஊரில் பிறந்தார்.

அ) நல்லூர்

ஆ) வில்லூர்

இ) செல்லூர்

விடை : அ ) நல்லூர்

13) ஜி.யு.போப் ------ நாட்டில் பிறந்தார்.

அ) கனடா

ஆ) ஆஸ்திரேலியா

இ) பிரான்சு

விடை : இ ) பிரான்சு

14 ) கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் -----  ல் பிறந்தார்.

அ ) காரைக்குடி

ஆ) வேட்டங்குடி

இ) சிறுகூடல்பட்டி

விடை : இ ) சிறுகூடல்பட்டி

15) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் -----

அ) திருவாதவூர்

ஆ) திருமோகூர்

இ) திருமங்கலம்

விடை : அ ) திருவாதவூர்

16) திரு.வி.க. சென்னைக்கருகில் உள்ள
------ என்னும் ஊரில் பிறந்தார்.

அ) மயிலம்

ஆ) துள்ளம்

இ) ஆலந்தூர்

விடை : ஆ ) துள்ளம்

17) உவமைக்கவிஞர் சுரதா பிறந்த ஊர் ----

அ) குன்றத்தூர்

ஆ) சென்னை

இ) பழையனூர்.

விடை : இ ) பழையனூர்.

18) நாமக்கல்லில் ------ என்னும் ஊரில்
இராமலிங்கம் பிறந்தார்.

அ) மோகனூர்

ஆ) கீரனூர்

இ) மலையனூர்

விடை : அ ) மோகனூர்

19 ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்தில் ----- எனும் ஊரில் பிறந்தார்.

அ) வாழப்பாடி

ஆ) இரும்பாலை

இ ) சமுத்திரம்

விடை : இ ) சமுத்திரம்

20 ) கவிஞர்.மீரா பிறந்த ஊர் -----

அ) மதுரை

ஆ) காரைக்குடி

இ) சிவகங்கை

விடை : இ ) சிவகங்கை 

**************   **************  ************

தேர்வு எழுதுவதற்கான இணைப்பு 
Post a Comment

0 Comments