ஞாயிறு கொண்டாட்டம் - போட்டித்தேர்வில் வெற்றி - கவிஞர்களும் பாடல் வரிகளும் - வினா & விடை / TNPSC , TRB - ONLINE CERTIFICARE EXAM - SUNDAY

 

ஞாயிறு  கொண்டாட்டம் 

போட்டித் தேர்வில் வெற்றி! 

கவிஞர்களும் பாடல் வரிகளும்.


வினா உருவாக்கம் - 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை.

தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும்
ஆன்லைன் தேர்வில் பங்கேற்று பாராட்டுச் சான்றிதழ் பெற விருப்பமா? உங்கள் பெயர், படிக்கும் வகுப்பு அல்லது தங்கள் பணி , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி தேர்வு எழுதுவதற்கான
இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

**************     *************    ***********

1) ' எடுத்த காரியம் யாவினும் வெற்றி' - என்று பாடியவர் -----

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ ) சுரதா

 ஈ) வாணிதாசன்

விடை : அ ) பாரதியார்

2)' வெறுங்கை என்பது மூடத்தனம் என் விரல்கள் பத்தும் மூலதனம்' - என்று தன்னம்பிக்கை விதைத்தவர் -----

அ) சுத்தானந்த பாரதி

ஆ) பழனி பாரதி

இ) யுகபாரதி

ஈ) தாரா பாரதி

விடை : ஈ ) தாரா பாரதி


3) ' தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு' - என்று பாடியவர் -

அ) கவிமணி தேசிகவிநாயகம்

ஆ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

 இ) அழ.வள்ளியப்பா

ஈ) முடியரசன்

விடை : ஆ ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

4) " வீறுடை செம்மொழி தமிழ்மொழி - உலகம் வேரூன்றிய நாள் முதல்
உயிர்மொழி " - என்றவர் ------

அ) பாரதிதாசன்

ஆ) கண்ணதாசன்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) இளங்குமரனார்

விடை : இ ) பெருஞ்சித்திரனார்

5) " உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" -
என்றவர் ------

அ) வள்ளலார்

ஆ) கவிமணி

இ) நாமக்கல் கவிஞர்

ஈ) ஔவையார்

விடை : அ ) வள்ளலார்

6) நாட்டில் உள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருத்தல் " - என்றவர் ------

அ) அம்பேத்கர்

ஆ) அயோத்திதாசர்

இ) பெரியார்

ஈ) பாரதிதாசன்

விடை : இ ) பெரியார்


7) ' உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக் காக்கும் - என்று கூறியவர் -----

அ) ஆபிரகாம் பண்டிதர்

ஆ) அயோத்திதாசப் பண்டிதர்

இ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஈ) அறிஞர் அண்ணா

விடை : ஆ ) அயோத்திதாசப் பண்டிதர்

8) " உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும் " - என்ற பாடலை எழுதியவர் ------

அ) கண்ணதாசன்

ஆ) வாலி

இ) மருதகாசி

ஈ) உடுமலை நாராயணகவி

விடை : அ ) கண்ணதாசன்


9) உடம்பர் அழியின் உயிரார் அழிவர்' என்பது யாருடைய கூற்று?

அ) மாணிக்கவாசகர்

ஆ) திருமூலர்

இ) பட்டினத்தடிகள்

ஈ) சுந்தரர்

விடை : ஆ ) திருமூலர்

10 )" மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா " என்றவர் -----

அ) ஔவையார்

ஆ) காக்கை பாடினார் 

இ ) கவிமணி

ஈ) நாமக்கல் கவிஞர்

விடை : இ ) கவிமணி

11 ) " சமூகத்தின் மாற்றத்திற்குச்
சிந்தனை விதைகளைத் தூவுகின்ற
புரட்சியாளர்களாலேயே இந்த
உலகம் வாழ்கிறது " - என்று கூறியவர் ----

அ) அம்பேத்கர்

ஆ) நேரு

இ) காந்தி

ஈ) படேல்

விடை : அ ) அம்பேத்கர்

12) தமிழுக்குத் தொண்டி செய்வோன் சாவதில்லை " - என்றவர் ------

அ) சோமசுந்தர பாரதியார்

ஆ) சுரதா

இ ) பாரதிதாசன்

ஈ) அப்துல் ரகுமான்

விடை : இ ) பாரதிதாசன்

13 ) " தமிழை , வடமொழி
வல்லாண்மையினின்றும் மீட்பதற்கே இறைவன் என்னைப் படைத்தான் " என்று கூறியவர் ------

அ) பெருஞ்சித்திரனார்

ஆ) பாவாணர்

இ )  இளங்குமரனார்

ஈ) இலக்குவனார்

விடை : ஆ ) பாவாணர்

14) ஒட்டிய சமயத்து உறுபொருள்
வாதிகள் பட்டிமண் டபத்துப்
பாங்கறிந்து ஏறுமின்" - என்று கூறும் நூல் -----

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) சீவகசிந்தாமணி

ஈ) பெரியபுராணம்

விடை : ஆ ) மணிமேகலை

15 ) தந்தை தாய்ப்பேண் - என்று ஆத்திசூடியில் கூறியவர் -----

அ ) ஔவையார்

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) கண்ணதாசன்

விடை : அ ) ஔவையார்

16 ) " செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் " - என்ற பாடலை எழுதியவர் -----

அ ) கண்ணதாசன்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இ ) வாலி

ஈ) வைரமுத்து

விடை : ஆ ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

17) சுடும்வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மனிதன் - நீ மனிதன் என்ற கவிதையை எழுதிய கவிஞர் -----

அ) மு.மேத்தா

ஆ) அப்துல் ரகுமான்

இ) இன்குலாப்

ஈ) வைரமுத்து

விடை : ஈ ) வைரமுத்து

18 ) வாழ்க்கை என்றால் ஆயிரம்
இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் - என்ற பாடலை இயற்றியவர் -

அ) பாபநாசம் சிவன்

ஆ) மருதகாசி

இ) பட்டுக்கோட்டை

ஈ) கண்ணதாசன்

விடை : ஈ ) கண்ணதாசன்

19 ) " தமிழென் அன்னை! தமிழென் தந்தை ! தமிழென் உடன்பிறப்பு " என்றவர் -----

அ) பாரதிதாசன்

ஆ) பெருஞ்சித்திரனார்

இ) காசி ஆனந்தன்

ஈ) சுரதா

விடை : இ ) காசி ஆனந்தன்

20) ' மண் பயனுற வேண்டும்' என்றவர் (டிசம்பர்.5, உலக மண் தினம்)
------

அ ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) நாமக்கல் கவிஞர்

விடை : அ ) பாரதியார்

****************    *********   ***************

Post a Comment

0 Comments