TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - தொடரால் குறிப்பிடப்படுபவர்கள் - வினா & விடை / TNPSC - TRB - ONLINE CERTIFICATE TEST

 

TNPSC & TRB - போட்டித்தேர்வில் வெற்றி 

பகுதி - அ : 2

தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர்கள்


1) சிந்துக்குத் தந்தை என்றழைக்கப்படும் கவிஞர் -----

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) கண்ணதாசன்

விடை : அ ) பாரதியார்

2) குறிஞ்சி பாட வல்லவர்-----

அ) நக்கீரர்

ஆ) ஒட்டக்கூத்தர்

இ) புகழேந்தி

ஈ) கபிலர்

விடை : ஈ ) கபிலர்

3) பரணி பாட வல்லவர் ------

அ) திருமூலர்

ஆ) ஜெயங்கொண்டார்

இ ) காளமேகம்

ஈ) அருணகிரிநாதர்

விடை : ஆ ) ஜெயங்கொண்டார்

4) பெருங்கவிக்கோ என்று
அழைக்கப்படுபவர் -----

அ) வாணிதாசன்

ஆ) அப்துல்ரகுமான்

இ) சேதுராமன்

 ஈ) மு.மேத்தா

விடை : இ ) சேதுராமன்

5) கிறித்தவக் கம்பர் என்று
அழைக்கப்படுபவர் -----

அ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

ஆ) இரா.பி.சேதுப்பிள்ளை

இ )  எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

ஈ) வீரமாமுனிவர்

விடை :இ ) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

6) தமிழ் நாட்டு மாப்பசான் -----

அ) புதுமைப்பித்தன்

ஆ) ஜெயகாந்தன்

இ) கி.ராஜநாராயணன்

ஈ) திரு.வி.க

விடை : அ ) புதுமைப்பித்தன்

7) தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை -----

அ) சி.பா.ஆதித்தனார்

ஆ) மறைமலை அடிகள்

-இ) திரு.வி.க.

ஈ) வ.வே.சு.ஐயர்

விடை : ஆ) மறைமலை அடிகள்

8) பண்டித மணி என்றழைக்கப்படுபவர்

அ) இராகவ ஐயங்கார்

ஆ) கதிரேசன் செட்டியார்

இ) கதிரைவேற்பிள்ளை

ஈ) ஔவை துரைசாமி

விடை : ஆ ) கதிரேசன் செட்டியார்.

9) தமிழ் மாணவர் ------

அ) வீரமாமுனிவர்

ஆ) ஜி.யு.போப்

இ )  சாக்ரடீஸ்

ஈ) பெர்னாட்ஷா

விடை : ஆ ) ஜி.யு.போப்

10 ) தாண்டக வேந்தர் ----

அ) ஞானசம்பந்தர்

ஆ) மாணிக்கவாசகர்

இ) திருநாவுக்கரசர்

ஈ) திருமூலர்

விடை : இ) திருநாவுக்கரசர்

11) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் --

அ) திருக்குறள்

ஆ) மணிமேகலை

இ) சீவக சிந்தாமணி

ஈ) சிலப்பதிகாரம்

விடை : ஈ ) சிலப்பதிகாரம்

12) தமிழ்க்கருவூலம் எனப்போற்றப்படும்
நூல் -----

அ) திருக்குறள

ஆ) அகநானூறு

இ) புறநானூறு

ஈ) நாலடியார்

விடை : இ ) புறநானூறு

13) வையையை மிகுதியாகச்
சிறப்பித்துக்கூறும் நூல் -----

அ) பரிபாடல்

ஆ) நற்றிணை

இ) குறுந்தொகை

ஈ) கலித்தொகை

விடை : அ ) பரிபாடல்

14) ஔவைக்கு நெல்லிக்கனி
கொடுத்த மன்னன் -----

அ) அதியமான்

ஆ) மலையமான்

இ ) பேகன்

ஈ ) சேரமான்

விடை : அ ) அதியமான்

15) பாட்டுடைத்தலைவன் பெயரால் அமைந்த ஆற்றுப்படை நூல் ----

அ) பெரும்பாணாற்றுப்படை

ஆ) சிறுபாணாற்றுப்படை

இ) பொருநராற்றுப்படை

ஈ) திருமுருகாற்றுப்படை

விடை : ஈ ) திருமுருகாற்றுப்படை

16) முத்தமிழ்க் காவலர் -----

அ) அறிஞர் அண்ணா

ஆ) கலைஞர் மு.கருணாநிதி

இ) இரா.பி.சேதுப்பிள்ளை

ஈ) கி.ஆ.பெ.விசுவநாதம்

விடை : ஈ ) கி.ஆ.பெ.விசுவநாதம்

17) மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே -
இவ்வடிகள் பயின்று வரும் நூல் ----

அ) கம்பராமாயணம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) சீவகசிந்தாமணி

ஈ) மணிமேகலை

விடை : ஆ ) சிலப்பதிகாரம்

18) ' மாதானுபங்கி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர் ----

அ) கம்பர்

ஆ) ஒட்டக்கூத்தர்

இ) திருவள்ளுவர்

ஈ) நக்கீரர்

விடை : இ ) திருவள்ளுவர்.

19 ) சீர்திருத்தக் காப்பியம் என்று
அழைக்கப்படும் நூல் ----

அ) சிலப்பதிகாரம்

ஆ) மணிமேகலை

இ) யசோதர காவியம்

ஈ) நாககுமார காவியம்

விடை : ஆ ) மணிமேகலை 

20) தமிழ்ப்பெருங்காவலர் என்று
அழைக்கப்படுபவர் -----

அ) தேவநேயப்பாவாணர்

ஆ) பெருஞ்சித்திரனார்

இ) பாரதியார்

ஈ) இலக்குவனார்

விடை : அ ) தேவநேயப்பாவாணர்

****************    **************   **********




Post a Comment

0 Comments