TNPSC & TRB போட்டித் தேர்வில் வெற்றி
பகுதி - அ : 2
தொடரும் தொடர்பும் அறிதல்
தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
பகுதி - 2
சிறுகதையின் தந்தை - வ.வே.சு அய்யர்
புதுக்கவிதையின் தந்தை - பாரதி
சிந்துக்குத் தந்தை - பாரதி
நாடகத்தின் தந்தை - சங்கரதாஸ் சுவாமி
தனித்தமிழ் இயக்கத் தந்தை - மறைமலை அடிகள்
தமிழர் தந்தை - சி.பா. ஆதித்தனார்
கலைத் தந்தை - கருமுத்து தியாகராஜ செட்டியார்
தொழிலாளர் தந்தை - திரு.வி.க
நாடகப் பேராசிரியர் - பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத்தலைமை ஆசிரியர் - பம்மல் சம்பந்த முதலியார்
நாடகக் காப்பியம் - சிலப்பதிகாரம்
நடிகவேள் - எம்.ஆர்.ராதா
நடிகர் திலகம் - சிவாஜி கணேசன்
கலைவாணர் - என்.எஸ். கிருஷணன்
முத்தமிழ் காவலர் - கி.அ.பெ விஸ்வநாதன்
தமிழிசைக் காவலர் - இராஜா அண்ணாமலைச்செட்டியார்
ஆட்சிமொழி காவலர் - இராமலிங்கனார்
தமிழ்த்தென்றல் - திரு.வி.க
தமிழ்த்தாத்தா - உ.வே.சா
தமிழ் மாணவர் - ஜி.யு.போப்
தமிழ் அறிஞர் - கி.வ.ஜகன்நாதன்
தமிழர் தலைவர் - ஈ.வெ.ரா
கப்பலோட்டியதமிழன் - வ.உ.சி
செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி
தமிழ்நாட்டின் சுதேச இயக்கத் தந்தை - வ.உ.சி
இந்திய நாட்டுச் சாக்ரடீஸ் - ஈ.வெ.ரா
தென்னாட்டுப் பெர்னாட்ஷா - அண்ணா
தமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
தமிழ்நாட்டு மாப்பசான் - புதுமைப் பித்தன்
தமிழ்நாட்டு வேர்ட்ஸ்வொர்த் - வாணிதாசன்
சிலம்புச்செல்வர் - ம.பொ.சிவஞானம்
சொல்லின் செல்வர் - இரா.பி. சேதுப் பிள்ளை (இலக்கியம்) ஈ.வெ.கி.சம்பத் (அரசியல்)
வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்
குறிஞ்சிக் கோமான் - கபிலர்
கவிச்சக்கரவர்த்தி - கம்பர்/ஒட்டக்கூத்தர்/ ஜெயங்கொண்டார்
தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
வியாக்கியான சக்கரவர்த்தி - பெரியவாச்சான் பிள்ளை
நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
கிறித்தவக் கம்பர் - எச்.ஏ. கிருட்டிண பிள்ளை
மகாவித்வான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நாவலர் - சோமசுந்தரம் பிள்ளை
தொண்டர்சீர் பரவுவார் - சேக்கிழார்
அம்மை - காரைக்கால் அம்மையார்
பேயார் - காரைக்கால் அம்மையார்
திருக்குறளார் - முனுசாமி
20ம் நூற்றாண்டு ஔவையார் - அசலாம்பிகை அம்மையார்
மூதறிஞர் - இராஜாஜி
இராஜாஜி - இராஜகோபாலாச்சாரி
பேரறிஞர் - அண்ணா
சதாவதானி - செய்குத் தம்பி பாவலர்
அஸ்டாவதானி - இராமையா பிள்ளை
இசைக்குயில் - சுப்புலட்சுமி
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
பாவலர் ஏறு - பெருஞ்சித்திரனார்
பெருமழைப்புலவலர் - சோமசுந்தரனார்
பன்மொழிப்புலவர் - அப்பாதுரையார்
பன்மொழி வித்தகர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
சிலம்பொலி - செல்லப்பன்
உரையாசிரியர் - இளம்பூரணர்
அண்ணல் - காந்தி
கர்ம வீரர் - காமராஜர்
வண்ணக்களஞ்சிய புலவர் - அமீது இப்ராஹீம்
மகாமகோபாத்யாயர் - கதிரேசன் செட்டியார்
சுஜாதா - ரங்கராஜன்
தமிழண்ணல் - இராமபெரிய கருப்பன்
கற்பனைக் களஞ்சியம் - சிவப்பிரகாச சுவாமிகள்
வாக்குக்கு - அருணகிரி
கருணைக்கு - அருணகிரி
கருமயோகி - சுத்தானந்த பாரதியார்
சிற்பி - பாலசுப்பிரமணியன்
மீரா - மீ . ராஜேந்திரன்
மூவர் முதலிகள் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
சமயக்குரவர்கள் - அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்
முதலாழ்வார்கள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
ஆசிய ஜோதி - புத்தர் / நேரு
பாம்பன் சுவாமிகள் - குமரகுருதாசர்
**************** ************** *********
வாழ்த்துகள் நண்பர்களே !
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************* ***********
0 Comments