9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , மொழியை ஆள்வோம் - வினா & விடை / 9th TAMIL - EYAL 5 , MOZHIYAI AALVOM

 

ஒன்பதாம் வகுப்பு தமிழ்

இயல் - 5 , மொழியை ஆள்வோம்

விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.

புத்தகம் படிப்போம்!

புதியன அறிவோம்!

புத்தகத் திருவிழா

செப்டம்பர் 19 முதல் 28வரை.

இடம் - சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

நேரம் - காலை 8 மணிமுதல் 6 மணிவரை.

(முதல்நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்)

(நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும், சிறப்புப் பேச்சாளர்களின்

உரைகளும் இடம்பெறும்.)

அனைவரும் வாரீர்! அறிவுத்திறம் பெறுவீர் !

   புத்தகத் திருவிழா

தஞ்சாவூர் சரசுவதிமகால் நூலகத்தில், செப்டம்பர் 19 முதல் 28வரை, புத்தகத் திருவிழா நடைபெறஉள்ளது. நாள்தோறும் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும், சிறப்புப் பேச்சாளர்களின் உரைகளும் இடம்பெறும். முதல்நாள் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் அவர்கள், விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

அனுமதி இலவசம். அனைவரும் வாரீர்! அறிவுத் திறம் பெறுவீர்.


Post a Comment

0 Comments