மகாகவி பாரதி - பிறந்த நாள் சிறப்புக்கவிதை / BHARATHI BIRTH DAY KAVITHAI

 

மகாகவி பாரதி பிறந்த நாள்

சிறப்புக் கவிதை 

கவிஞர்.திருமதி.உமா மகேஸ்வரி , 

த.ஆசிரியை , அ.மே.நி.பள்ளி,

சத்திரரெட்டியபட்டி , விருதுநகர்.

ஓவியம் - மது சியாமளா , கல்லூரி மாணவி , திருப்பூர்.



***************    ************   **********

பாரதி !

நீ ்எமக்குப் பாரதீ !

எட்டயபுரத்தில் பிறந்தவரே !

எம் பெண்குலத்தின் வழிகாட்டியே !

தையலை 

உயர்வு செய்தாய் !

தையல் 

மடமை மாய்த்தாய் !


ஆண் , பெண் 

சமம் என்றாய் !

ஆணாதிக்கத்தை 

வெளிச்சமிட்டாய் !

கற்பு நிலை பெண்ணுக்கு 

மட்டுமா ?

இருபாலருக்கும் என்றுரைத்தாய் .


வேதம் புதுமை செய்தாய் நீ !

புதுநெறி வகுத்த 

புதுயுகக்கவியே !

கண்ணிலே தெரியுது 

வானம் என்றாய் !

மண்ணிலே விண்ணைக்கண்டாய் !

புரட்சிப் பெண்ணாக

எம்மை வாழவைத்தாய் !


தேசபக்தியும் , தெய்வபக்தியும்

தமிழ்ப்பக்தியும்

உயிரெனக் கொண்டாய்.

முப்பத்தொன்பதாம் வயதில்

மறைந்தாய்.

நூற்றுமுப்பத்தொன்பது வயதிலும்

எம் மனத்தில் நிறைந்தாய் !


எம்பாட்டனே ! பாரதியே !

உம்பாதம் பணிகிறேன்.

உம்பணி தொடர்கிறேன் !

நீடுழி வாழ்க ! வாழ்கவே !


******************    ************  *********

Post a Comment

0 Comments