9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , கசடற மொழிதல் - நெடுவினா & விடை / 9th TAMIL - EYAL 5 , NEDUVINA & VIDAI

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 5 , கசடற மொழிதல் 

மதிப்பீடு - நெடுவினா 


2 . ' குடும்ப விளக்கு' நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

             சங்ககாலத்தில் பெண்கள் கல்வி கற்றுத் தமிழ்நாடு சிறந்து இருந்தது. அரசனுக்கே அறிவுரை கூறிய   ஔவையார், இலக்கண நூல்களை இயற்றிய காக்கைப்பாடினியார் போன்ற பெண்கள், கல்வியிற் சிறந்து   விளங்கினர். இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. சமைப்பதும், வீட்டு வேலைகள்செய்வதும் பெண்ணின் கடமைகள் என்று கூறிவந்தனர். 

           அவர்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாக மாட்டார்கள் என்றும், கல்வி கற்ற பெண்களால்தான்   அறிவுடைய மக்களை உருவாக்கமுடியும் என்றும், குடும்பவிளக்கின் தலைவி பேச்சில் வெளிப்படும் வகையில்   பாரதிதாசன் பாடியுள்ளார்.

“சமைப்பவர் உணவை மட்டும் சமைப்பதில்லை; அதற்கும் மேலாக இன்பத்தையும் படைக்கிறார்” எனப்

பேசுகிறார். இன்று சமையல் வேலைகளில் பெண்களுக்கு ஆண்கள் துணை நிற்பதைக் காணமுடிகிறது.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், மருத்துவம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களில், 50 விழுக்காடு பெண்களேயாவர்.

                    தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி அம்மையார் என அறிவோம்.

            கிண்டி பொறியியற் கல்லூரியில் பயின்ற சாந்தா மேனன், தொழில்துறை வல்லுநராக உள்ளார். பிசினஸ்
எக்ஸலன்ஸ் பிரிவில் பத்மினி பொக்காலா, ஆசியாவிலேயே சிறந்த தலைவராக உள்ளார். இன்றைய பெண்கள் அடுத்த தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும்பணியைச் செய்து வருகிறார்கள். இவற்றை நோக்க, இன்றைய சூழலில் குடும்ப விளக்குத் தலைவி பேசியவை,
நற்பயன் அளிப்பதாக அறியமுடிகிறது.

Post a Comment

0 Comments