அகிலம் மகிழும் ஆங்கிலப் புத்தாண்டு
1 • 1 • 2022
ஆங்கிலப் புத்தாண்டை அவனியில் உள்ள அனைவரும் அகம் மகிழ ஆர்வமாகவும் , ஆரவாரமாகவும் கொண்டாடி மகிழ்கின்றோம். புதியவற்றை வரவேற்கவும், காணவும் அத்தனை ஆர்வம் .தன் நலம் காண விழையும் மனிதன் மேலும் ஒரு முன்னேற்றம் காணும் துடிப்புகள்,ஆனந்த எதிர்பார்ப்புகள், காலத்தை வரவேற்கும் வசந்த அழைப்புகள்.உலகமே ஒரு குடும்பமாகி , குதூகலமாக கொண்டாடும் ஒரு விழாவாகிறது. இங்கே அன்பும்,ஆரவாரமும்,பண்பாடும் , பரிசும் , நட்பும் ,சமரசமும் , விவேகமும் , விட்டுக்கொடுத்தலும் தவழ்ந்து மகிழ்கிறது.
மக்கள் அனைவரும் வேறுபாட்டைக் கடந்து மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான திருவிழாவாக விளங்குகின்றது. இவ்வாறு ஒன்றிணைந்து உள்ளம் எங்கும் உவகை பொங்க கொண்டாடும் திருநாளை பெருமையோடு போற்ற வேண்டும்.ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் முதல் நாள் ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவை எப்படி வந்தது ? இவற்றின் வரலாறு என்ன ? ஒருங்கிணைவும்,ஒத்துழைப்புமே விடையாக அமைகின்றன. ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக கடைபிடிப்பது சுமார் 500 - ஆண்டுகளாக நடக்கும் ஒரு வரலாகிறது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியர்கள் மார்ச் - 25 - ம் நாளை, ஆண்டின் முதல் நாளாகக் கருதினர் . இவர்களது காலத்தில் ஒரு ஆண்டுக்கு பத்து மாதங்களே கொண்டு கணக்கிட்டு பயன்படுத்தினர். அதாவது மார்ச் மாதமே ஆண்டின் முதல் மாதமாகவும்,மார்ச் 25 - ம் நாளே, ஆண்டின் முதல் நாளாகவும் வழக்கத்தில் இருந்தது.அதன் பின் மாற்றம் அடைந்து அனைவராலும் ஏற்கப்பட்டு ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த ஜனவரி சில படிநிலைகளைக் கடந்து ஒரு வரலாறாக விளங்குகின்றது.
ரோமானியர்கள் கொண்டாடிய புத்தாண்டு :
அவனியை ஆட்சி செய்யும் ஆதவனின் அசைவின் ( நகர்வின்) அடிப்படையிலான ஒரு அட்டவணையைக் கொண்டே ரோமானியர்களின் காலண்டர் மார்ச் - 1 - நாளையே புத்தாண்டு தினமாக கடைபிடித்தனர். ரோமானிய மன்னர்களில் ஒருவரான," நுமா போம்பிலியஸ் " என்பவர் 10 - மாதமாக இருந்த ஆண்டின் மாதக் கணக்கில், கூடுதலாக இரண்டு மாதங்கள் சேர்த்து , ஒரு ஆண்டுக்கு 12 - மாதங்கள் என அமைத்தனர். மேலும் முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி மற்றுமபிப்ரவரி என பெயர்ச் சூட்டினர். இந்தப் பெயரை வைத்ததன் காரணம் , ரோமானியர்களின் கடவுளான " ஜனஸ் " நினைவாக " ஜனவரி " என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அந்த முறையே இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
ஜுலியன் காலண்டர் :
ஜனவரி 1 - ம் நாளை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் என்பவர் ஆவார்.இந்த காலண்டர் முறை இயேசு பிறப்பதற்கு 46 - ஆண்டுகளுக்கு முன்பாகவே பயன்படுத்தப்பட்டது. இவற்றை கி.மு 46 - ம் ஆண்டிலேயே ஜூலியஸ் சீசர் அறிவித்தார்
. எனவே அவர் பின்பற்றிய காலண்டர் முறையே " ஜூலியன்" ழழகாலண்டர் முறை என அழைக்கப்பட்டது.
கிரிகோரியன் காலண்டர் :
ஜூலியன் காலண்டரை கி.பி.1582 - ம் ஆண்டு ,போப் 13 - ம் கிரிகோரி என்பவர் ரத்து செய்தார்.அதனைத் தொடர்ந்து நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி , அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 - நாட்கள் என்று 365 - நாட்களையும், 12 - மாதங்களுக்குள் சரியான முறையில் அடக்கிக் காட்டினார் . இம்முறை சரியாகப் பொருந்தியதால் , இந்த முறையினை உலகம் முழுவதும் எற்றுக்கொள்ளப்பட்டது. எனவே கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கிரிகோரியின் காலண்டர் முறைப்படி ஆண்டி ன் முதல் நாள் ஜனவரி - 1 - என நிர்ணயிக்கப்பட்டது.எனவேஅன்று முதல் கடந்த 500 - ஆண்டுகளாக ஜனவரி 1- நாளே பு மத்தாண்டு தினமாக உலகம் முழுவதுமுள்ள மக்களால் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறாக வரலாற்றைக் கொண்ட புத்தாண்டு முதன் முதலில் நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில் தான் கொண்டாடப்படுகிறது. நியூசிலாந்தின் நேரப்படி டிசம்பர் 31- ம் தேதி மாலை 4 • 30 - மணிக்கு புத்தாண்டு பிறந்து விடுகிறது. இதனை அடுத்து ஆஸ்ட்ரேலியாவில் மாலை 6 • 30 மணியளவில் ஆங்கில புத்தாண்டு அன்புடன் எதிர் நோக்கி ஆரவாரமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டமானது பட்டாசுகளும், வானத்தை அலங்கரிக்கும் வண்ணப் பூக்களாய், கண்ணை மயக்கும் ஒவியமாய் வாரியிறைத்தும் , இனிப்புகள் வழங்கியும் சொந்ங்களும் , நட்புகளும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வர்.பரிசு வழங்கி மகிழ்வதுடன் விருப்பத்துடனும் ,விளையாட்டாகவும், உறுதிமொழி தனை ஏற்பர். கிறிஸ்தவர்கள் தேவாலய ங்களில் சிறப்புப் பிரார்த்ததனையும், கோவில்களில் இறைவழிபாடும் நடத்தப் பட்டு நலம்பெற வேண்டுகிறோம்.இனி இனிமை ததும்ப வரவிருக்கும் 2022-- புத்தாண்டையும் உள்ளமும் , உறவுகளும் மகிழ்ந்து வரவேற்று, கூட்டம் இல்லா கொண்டாட மாகவும் , கொரோனா இல்லா கொண்டாட மாகவும் கொண்டாடி மகிழ்வோம்.
'கேக்' வெட்டிக் கொண்டாடுவதோடு நில்லாமல் நாட்காட்டியும், வாழ்த்து அட்டையும் பரிசாக வழங்கப்பட பாதையில் பாசத்தோடு பயணத்தைத் தொடங்குவோம் .! நினைப்பது நிறைவேற , அனைத்தும் ஈடேற புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம் .!
************** ************** **********
0 Comments