மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10 / INTERNATIONAL HUMAN RIGHTS DAY - DECEMBER 10

 


உலக மனித உரிமைகள் தினம்

   International Human Rights Day

                10 • 12 • 2021

          ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையைப் பெறுவதும், மற்ற மனிதரையும் வாழவிடும் வழிமுறையை உணர்த்துவதே உலக மனித உரிமைகள்  தினத்தின் முக்கிய கருத்தாக விளங்குகின்றன. அனைத்து மக்களும் சுதந்திரம் , உரிமை , கண்ணியம் போன்றவற்றில்  ஒருவருக்கொருவர் சமமானவர் என்பதை இந்த தினம் முக்கிய நோக்கமாக வலியுறுத்துகிறது.மேலும் இனம் , நிறம் , மொழி, மதம்,அரசியல் ,நாடு , சொத்து, பிறப்பு போன்ற  எந்த ஒரு வேறுபாடும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் இன்றியமையாமையை உணர்த்த இந்த நாளைக் கொண்டாடுகிறோம்.

      1948 -- ஆம் ஆண்டு டிசம்பர் 10-- ம் நாள் ஐக்கிய நாடுகள் சபை உலக மனித உரிமைப் பேரறிக்கையாக, உலக மக்கள் அனைவருக்குமான உரிய வாழ்வுரிமைகளை சட்டப்பூர்வமாக அறிவித்தது.அந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10- ம் நாளை உலக மக்கள் அனைவராலும் மனித உரிமை நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஐ நாவின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் விதமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.மேலும் ஐ நாவின் பொது அவை நாடுகளும், தன்னார்வ நிறுவனங்களும் விடுக்கப்பட்ட  வேண்டுகோளுக்கிணங்க 1950 -- ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 10 -- ம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.


மனித உரிமைகள் நாள் தோன்றிய வரலாறு:

        இரண்டாம் உலகப் போரில் , உலகம் கண்ட கோரத்தாண்டவம் நெஞ்சை உறைய வைக்கின்றவையாக இருந்தது.உயிரிழ ப்பும் , பொருளாதார நெருக்கடியும் மனித குலத்தைச் சிதைத்ததுது. இந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், மீண்டும் இவை போன்ற பாதகச் செயல்கள் நிகழாதிருக்கவும், இரண்டாம் உலகப்போரின் போது கூட்டணி நாடுகள் நான்கு சுதந்திரமான பேச்சு , மத , அச்சமில்லா சுதந்திரங்கள் மற்றும் விரும்பும் சுதந்திரம் ஆகியவற்றை கொண்ட கொள்கையை நடைமுறைப்படுத்தின. ஐக்கிய நாடுகள் சாசனம் ' அடிப்படை மனித உரிமைகள் , கண்ணியம் மற்றும் மனித இனத்தின் மதிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தியது' மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளையும் ஊக்குவிக்கும் இனம் , மொழி அல்லது மதம் போன்ற வேறுபாடு இல்லாத மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் அனைத்திற்கும் உலகளாவிய மரியாதை வழங்க வேண்டும்.மேலும் தனி மனித உரிமைகளை குறிப்பிட்ட ஒரு உலகளாவிய அறிவிப்பு , மனித உரிமைகள் மீதான சாசனத்தின் ஏற்பாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தும் வகையிலும் , மனித உரிமைகள் தொடர்பான செய்திகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்த தினம் உலகளாவிய செய்தியாக அனுசரிக்கப்படுகிறது. 

1948 -ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 30- உறுப்புரைகளைக் கொண்டது .அவற்றில் சில...


* சமத்துவ உரிமை -- அனைத்து மனிதர்களும் சுதந்திரமாக   பிறக்கின்றனர். அவர்கள் வருமானத்திலும், உரிமைகளிலும்   சமமானவர்கள்.அவர்கள் நியாயத்தையும் , மனசாட்சியையும்   இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

* ஏற்றத் தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை:

   இனம் , நிறம் , பால் , மதம் ,அரசியல் மற்றும் தேசிய அல்லதுசமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் சம உரிமையைப் பெற்றவர்கள்.

* சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

* யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை .

* சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

* ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை உண்டு.

* தனிப்பட்ட அல்லது அந்தரங்க விசயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

* ஒவ்வொரு நாட்டிற்குளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும் , திரும்பி வரவும் உரிமை.

* ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு. 

* சிந்தனை , மனசாட்சி , மதச் சுதந்திரங்கள் பெற அனைவருக்கும் உரிமை உண்டு.

* கருத்துச் சுதந்திரமும் , பேச்சு சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு.

* எந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள,சங்கத்தில் உறுப்பினராக  எல்லோருக்கும் உரிமை உண்டு. 

மனித உரிமை ஆணையக் குழு :

1946 - ஆம் ஆண்டு பிப்ரவரி 16 - ம் நாள் ஐக்கிய நாடுகள் " மனித உரிமை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.இது 53 நாடுகளை இவற்றில் இணைத்து அங்கம் வகித்த குழுவாக   உருவாக்கப்பட்டது. இக்குழுவில் தொடங்கிய முதல் வேலை சர்வதேச  மனித உரிமைப் அறிவிப்பை உருவாக்கியது.அவற்றை அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலீனா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவாகத் தொடங்கப்பட்டது   .இக்குழுவின் பரிந்துரைப் படி 30- பிரிவுகளின்.கீழ் மனித உரிமைகள்   இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பற்றிய அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

எனவே டிசம்பர் 10 , 1948 - ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்த அறிவிப்பிற்கு 58 - நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.டிசம்பர் 10 - என்ற இந்த நாளை 1950 - ஆம் ஆண்டிலிருந்து " சர்வதேச மனித உரிமைகள் தினமாக அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது.  உலககில் பிறந்த  அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகளும் , அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையைத் தான் இந்த  நாள் மகிழ்ந்து கூறுகின்றன. 

மனித உரிமை நீதிமன்றங்கள் :

       மனித உரிமை நீதிமன்றங்களாவன  மனித உரிமைகள் மீறப்பட்டதிலிருந்து  எழும் குற்றச் செயல்களை விரைந்து விசாரணைசெய்ய ஏதுவாக மாநில அரசால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒருங்கிணைவுடன் சிறப்பு நீதிமன்ற  ங்கள் அமைக்க சட்டம் வழிவகை செய்துள்ளதின் படி அமைக்கப்பெற்ற சிறப்பு நீதிமன்றங்கள் இவ்வழக்கு களை விசரனை செய்யும் .

தமிழ் நாடு மாநில மனித உரிமை ஆணையம் :

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997 - ம் ஆண்டு ஏப்ரல் 17 நாள், மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு 21- இல் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1993 - ன் படி கட்டமைக்கப்பட்ட து.இதன் படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னார்வம் பெற்ற அமைப்பாக விளங்குகிறது.

மனித உரிமைகளை சீர்குலைக்கும் அனைத்து செயல்களையும் விடுத்து , தனிமனித உரிமையை மதித்தல் வேண்டும்.அதற்கு நமது சமத்துவ செயல்பாடுகளை மேம்படுத்துவது   இன்றியமையாதது ஆகும்.ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து சமத்துவம் வளர்க்க வேண்டும்.தான் வாழ்ந்து பிறரையும் வாழவைப்பதே மனித உரிமையின் நெறியாக விளங்குகிறது.சமூக ஏற்றத்தாழ்வுகளையும் , பாகுபாடுகளையும் களைந்து அவற்றை மறந்து மனித இனம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதே பயனுள்ள வாழ்வாகும்.இது வருங்கால தலைமுறை வளர ஆரோக்கிய மனநிலை உள்ள தலைமுறையாக உருவாக வழி காணும். மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும் , உலக ஒற்றுமையின் அவசியத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்த டிசம்பர் 10 - என்பதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நாம் விரும்பும் உலகைக் கட்டமைக்க கிடைத்த சிறந்த வாய்ப்பாக இந்த நாளை அமைத்து, இனி வரும் நாட்கள் எல்லாம்  வெற்றியைக்காண்போம்.!

Post a Comment

0 Comments