10 ஆம் வகுப்பு - தமிழ் - கலைச்சொல் அறிவோம் - பகுதி 3 - வினா & விடை / 10th TAMIL - ONLINE TEST PART 3 - QUESTION & ANSWER

 

10 ஆம் வகுப்பு - தமிழ் 

கலைச்சொல் அறிவோம் 

பகுதி - 3 ,இயல் 8 & 9

இலக்கணக்குறிப்பு அறிதல்

வினாக்களும் விடைகளும்

*************   *************  ***********

1) Belief - என்பதன் கலைச்சொல் ------

அ) நம்பிக்கை

ஆ) மகிழ்ச்சி

இ) உண்மை

விடை : அ ) நம்பிக்கை 

2) Renaissance - என்பதன் கலைச்சொல்

அ) மலர்ச்சி

ஆ) மறுமலர்ச்சி

இ) புதுமை

விடை : ஆ ) மறுமலர்ச்சி

3) Philosopher - என்பதன் கலைச்சொல் ----

அ) தத்துவவியலாளர்

ஆ) மெய்யியலாளர்

இ) அரசியலாளர்

விடை : ஆ ) மெய்யியலாளர்

4) Revivalism - என்பதன் கலைச்சொல் ------

அ) நினைவாக்கம்

ஆ) உருவாக்கம்

இ) மீட்டுருவாக்கம்

விடை : இ ) மீட்டுருவாக்கம்

5) Humanism - என்பதன் கலைச்சொல் ------

அ ) அருட்பண்பு

ஆ) மனிதநேயம்

இ) கருணை

விடை : ஆ ) மனிதநேயம்

6) Cabinet - என்பதன் கலைச்சொல் ------

அ) அமைச்சரவை

ஆ) மக்களவை

இ) மாநிலங்களவை

விடை : அ ) அமைச்சரவை

7) Cultural Boundaries - என்பதன்   கலைச்சொல் ------

அ) நாகரீகக் கோட்பாடு

ஆ) பண்பாட்டு அசைவு

இ) பண்பாட்டு எல்லை

விடை : இ ) பண்பாட்டு எல்லை

8) Cultural Values - என்பதன் கலைச்சொல்

அ) பண்பாட்டு விழுமியங்கள்

ஆ) பண்பாட்டுச் சிந்தனைகள்

இ) பண்பாட்டுக் கொள்கைகள்

விடை : அ) பண்பாட்டு விழுமியங்கள்

9) கல் என்பதன் கூட்டப்பெயர் -----

அ) மலை

ஆ) குவியல்

இ) மலை

விடை : ஆ ) குவியல்

10 ) பழம் என்பதன் கூட்டப்பெயர் ----

அ) குலை

ஆ) கட்டு

இ) குவியல்

விடை : அ ) குலை 

11) புல் என்பதன் கூட்டப்பெயர் ------

அ) குலை

ஆ) படப்பு

இ ) கட்டு

விடை : இ ) கட்டு

12) ஆடு - என்பதன் கூட்டப்பெயர் -----

அ ) மந்தை

ஆ) கிடை

இ) பட்டி

விடை : அ ) மந்தை 



13) தொடுதிரை - தொகைச்சொல்லை எழுதுக.

அ) பண்புத்தொகை

ஆ) உவமைத்தொகை

இ) வினைத்தொகை

விடை : இ ) வினைத்தொகை 

14) மோர்ப்பானை - தொகைச்சொல்லை எழுதுக.

அ) இரண்டாம் வேற்றுமைத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) இரண்டாம் வேற்றுமை உருபும்

பயனும் உடன்தொக்க தொகை

விடை : இ) இரண்டாம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகை

15 ) வெண்டைக்காய் - தொகைச்சொலை எழுதுக.

அ) வினைத்தொகை

ஆ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை

இ  ) அன்மொழித்தொகை

விடை : ஆ ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை

16) பெரிய மீசை சிரித்தார் -
இத்தொடரில் பெரியமீசை என்ன
தொகை?

அ) அன்மொழித்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) உவமைத்தொகை

விடை : அ ) அன்மொழித்தொகை

17) கபில பரணர் ------- தொகை ஆகும்.

அ) எண்ணும்மை

ஆ) உம்மைத்தொகை

இ) பண்புத்தொகை

விடை : ஆ ) உம்மைத்தொகை

18) பூங்கொடி ------- தொகை ஆகும்.

அ) உவமைத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) பண்புத்தொகை

விடை : அ ) உவமைத்தொகை

19 ) எழுகதிர் ------- தொகையாகும்.

அ ) அன்மொழித்தொகை

ஆ) வினைத்தொகை

இ) உம்மைத்தொகை

விடை : ஆ ) வினைத்தொகை

20 ) பைந்தமிழ் இணையதளத்தின் மூலம் 2022 புத்தாண்டை வருக வருக என
வரவேற்கிறோம் - இத்தொடரில்
வருக வருக என்பதன்   இலக்கணக்குறிப்பு -------

அ ) இரட்டைக்கிளவி

ஆ) பெயரெச்சத்தொடர்

இ) அடுக்குத்தொடர்

விடை : இ) அடுக்குத்தொடர்


******************   *************     *********




Post a Comment

0 Comments