TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி
பொதுத்தமிழ் - பகுதி - இ . 3
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
புதுக்கவிதை - சி.சு.செல்லப்பா
சி.சு. செல்லப்பா
* 29.09.1912 இல் சின்னமனூரில் பிறந்தவர். வத்தலகுண்டில் வளர்ந்தவர்.
*பி.ஏ. படித்தபோது மகாத்மா காந்தியின் கொள்கை ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
* சுதந்திர சங்கு என்ற இதழில் முதன் முதலாக எழுதத் தொடங்கினார்.
* மணிக்கொடி என்ற இதழ் இவரின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது.
* சரசாவின் பொம்மை” என்ற சிறுகதை வரைச் சிறந்த எழுத்தாளராக
அறிமுகப்படுத்தியது.
* 1947 - 1953 இல் தினமணிக் கதிரில் பணிபுரிந்தார்.
* 1958 இல் "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார்.
* மணிக்கொடி, கலாமோகினி இதழ்கள் நின்று போன தால் மறுமலர்ச்சி
எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உறுதுணையாக நின்றது “எழுத்து” என்ற இதழ்.
(119 இதழ்கள் மட்டுமே வெளிவந்தன).
* தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் முன்னோடி “எழுத்து”.
எழுதிய நூல்கள்
* புதுக்கவிதை: மாற்று இதயம்
* சிறுகதைகள்: சரசாவின் பொம்மை, மணல்வீடு, அறுபது, சத்தியாக்ரகி, வெள்ளை என்ற ஐந்து தொகுதிகள்.
* நாவல்: வாடிவாசல், ஜீவனாம்சம், சுதந்திரதாகம்.
* விமர்சனம்: தமிழ் இலக்கிய விமர்சனம், தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.
* குறுங்காவியம்: இன்று நீ இருந்தால் (மகாத்மா காந்தி பற்றியது)
* பதிப்பித்த நூல்: புதுக்குரல்கள், பிச்சமூர்த்தி கவிதைகள்
* சுதந்திர தாகம் என்ற நாவலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.
18.12.1998 இல் இயற்கை எய்தினார்.
0 Comments