TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி
பொதுத்தமிழ் - பகுதி - இ . 3
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
புதுக்கவிதை
இரா.மீனாட்சி
* 23 .01 . 1941 ல் திருவாரூரில் பிறந்தவர்
* பெற்றோர் - இராமச்சந்திரன் - மதுரம்
எழுதிய நூல்கள்:
கவிதை நூல்கள்: நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப் பகல், உதய நகரிலிருந்து, மறு பயணம், வாசனைப்புல், கொடிவிளக்கு.
* ஆங்கிலப் படைப்பு: இந்தியப் பெண்கவிகள் பேசுகிறார்கள்.
* எழுத்து, கணையாழி, தீபம், அன்னம்விடு தூது, கவி ஆகிய சிற்றிதழ்களில் கவிதை எழுதியர்.
* Seeds France, Dust and Dreams என்ற கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர்.
* பாரதி, பாரதிதாசனுக்குப் பின் பெண் உரிமை குறித்து அதிகம் எழுதியவர்.
* இவர் கவிதை முழுவதும் மீனாட்சி கவிதைகள் என்ற தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. 191 கவிதைகள் உள்ளன.
மேற்கோள்:
"எவனோ எழுதி வைத்த
நிர்ணயிப்புகளை
அன்றாடம் ஒப்பிக்கும்
பேராசிரியப் பெருமக்களே
எங்களை
கீறல் இசைத்தட்டாக்காதீர்கள்”
"சொந்தக் கருப்பையைக்
குத்தகைக்கு ஏன் விடனும்
நாங்கள் கூட்டமாய்க் குரவையிட்டுக்
கன்னியராய் வீடு செல்வோம்”.
0 Comments