TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - புதுக்பவிதை - பசுவய்யா ( சுந்தரராமசாமி ) / TNPSC - TAMIL - PUTHUKKAVITHAI - PASUVAIYYA ( SUNDARA RAMASAMY )

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 3

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

புதுக்கவிதை - 

பசுவய்யா

* இயற்பெயர் சுந்தரராமசாமி

* 1931 இல் நாகர்கோயில் அருகே உள்ள மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தவர்.

* 2005 இல் இயற்கை எய்தினார்.

எழுதிய நூல்கள்:

* கவிதை: நடுநிசி நாய்கள்

* கதை: ஒரு புளியமரத்தின் கதை, அக்கரைச் சீமையில், பிரசாதம்

* இவர் கவிதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

* ஜெஜெ சில குறிப்புகள், காற்றில் கரைந்த பேரோசை, இறந்தகாலம் பெற்ற உயிர், வானமே இளவெயிலே மரச்செறிவே, வாழ்க சந்தேகங்கள், மூன்று நாடகங்கள் போன்ற   நூல்களையும் எழுதியுள்ளார்.

* தகழி சிவசங்கரம்பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன் என்ற இருநூல்களை மலையாளத்திலிருந்த  மொழி பெயர்த்தவர்.

* தொலைவிலிருக்கும் கவிதைகள் என்பதும் இவரது மொழி பெயர்ப்பு நூலாகும்.

* எழுத்து, அஃக், சதங்கை, ஞானரதம், கசடதபற, தீபம், இலக்கியவட்டம் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதினார்.

* இவர் தமிழ் நூல்களை மலையாளம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.

* நினைவோடைகள் என்ற தலைப்பில் க.நா.சுப்பிரமணியம், சி.த.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா, பிரமிள், தி.ஜானகிராமன், நாகராஜன் ஆகியோர் பற்றி எழுதியுள்ளார்.

மேற்கோள்:

“நகத்தை வெட்டியெறி - அழுக்குச் சேரும்

அகிலமே சொந்தம் அழுக்குக்கு

நகக் கண்ணும் எதற்கு அழுக்கு

குறும்பை தோண்டலாம்

குறும்பைக்குக் குடியிருப்பு

குடலுக்குக் குடிமாற்றம்

குருதியிலும் கலந்துபோம்

நகத்தை வெட்டியெறி அழுக்குச் சேரும்”.

* சுந்தரராமசாமி பெயரில் தமிழ்க் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments