TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி - பொதுத்தமிழ் - தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - மரபுக்கவிதை - கண்ணதாசன் / TNPSC - TAMIL - MARAPHUK KAVITHAI - KQNNADHASAN

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 2

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

மரபுக்கவிதை

கண்ணதாசன்

பெற்றோர் சாத்தப்பன், விசாலாட்சி

இயற்பெயர் முத்தையா

* ஊர் - சிறுகூடற்பட்டி

சிவகங்கை மாவட்டம்

* வாழ்நாள் 24.6.1927 முதல் 17.10.1981 வரை. 54 வயது.

* கதை, வசனம் எழுத வேண்டும் என்று திரை உலகிற்கு வந்து கவிஞரானவர்

* முதல் பாடல் 'கலங்காதிரு மனமே' படம் - கன்னியின் காதல்.

* கடைசி பாடல் 'கண்ணே கலைமானே'- மூன்றாம் பிறை. 1981

* பக்தி, தாலாட்டு, காதல் பாடல்கள் பாட வல்லவர்.

* கவியரசு பட்டம் பெற்றவர்.

பாடல்கள்

'மழைகூட ஒருநாளில் தேனாகலாம்
மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்
அவை யாவும் சேர்ந்தாலும் நீயாகுமா -
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா” - 14 மொழிகளில் பெயர்க்கப்பட்ட பாடல்.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா”

“கோப்பையிலே என் குடியிருப்பு
கோலமயில் என் துணையிருப்பு” - 
இரத்தத் திலகம்

"ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு”

நூல்கள்

* கவிதைகள் - ஏழு தொகுதிகள்

* திரையிசைப் பாடல்கள் ஐந்து தொகுதிகள்

* மாங்கனி - திருச்சி சிறையிலிருந்தபோது எழுதிய முதற் காவியம்.

* ஆட்டனத்தி ஆதிமந்தி - காதல் காப்பியம்
இயேசு காவியம்

*இறுதியாக எழுதிய நூல். இது ஒரு காப்பிய நூல்.

*ஸ்ரீ கிருஷ்ணகவசம் பக்திப்பாடல்

நாவல்கள்

* குமரிக் காண்டம் -  லெமுரியாக் கண்டத்தைக் காட்டுவது

* சேரமான் காதலி - சாகித்திய அகாடமி பரிசு பெற்றது

* வேளங்குடித் திருவிழா, ஊமையன் கோட்டை, விளக்கு மட்டுமா சிவப்பு, ஆயிரங்கால் மண்டபம், சிங்காரி பார்த்த சென்னை, சிவகங்கைச்சீமை, ராஜ தண்டனை

உரை நடை நூல்

* அர்த்தமுள்ள இந்து மதம் -  தத்துவ விளக்க நூல்

* ஞானமாலிகா, புஷ்பமாலிகா, ராகமாலிகா - தத்துவ விசாரணை

* வனவாசம், மனவாசம் - தன் வரலாற்று நூல்கள்

* திரையிசைப் பாடல் மூலம் புகழ் பெற்றவர்

***************  *************   ************

Post a Comment

0 Comments