TNPSC - தமிழ்
பகுதி - இ
தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
* பெற்றோர் - சிவதாணு பிள்ளை, ஆதிலட்சுமி
* ஊர் - நாகர்கோயிலை அடுத்த தேரூர்
* இவரின் ஆசிரியர் சாந்தலிங்க தம்பிரான்
தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியரானவர்.
நூல்கள்
* மலரும் மாலையும்
* ஆசிய ஜோதி
* நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்
* காந்தளூர் சாலை
* தேவியின் கீர்த்தனைகள்
* உமர்கய்யாம் பாடல்கள்
* ஆர்னால்ட் எழுதிய 'லைட் ஆப் ஏசியா' என்ற நூலின் மொழிபெயர்ப்பு ஆசிய ஜோதி
* இசைப் பாடல் நூல் - தேவியின் கீர்த்தனைகள்
மேற்கோள்
"உள்ளத்தில் உள்ளது கவிதை - இன்ப
ஊற்றெடுப்பது கவிதை
தெள்ளத்தெளிந்த தமிழில் -உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை”
“மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா”
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா -
அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா - அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பையடா"
0 Comments