TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி
பொதுத்தமிழ் - பகுதி - இ . 2
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
பகுதி - இ - 3 , புதுக்கவிதை
ந. பிச்சமூர்த்தி
* 15.08.1900 இல் கும்பகோணத்தில் பிறந்தார். வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர்.
* புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி.
* சிறுகதை எழுத்தாளராக அறிமுகம் ஆகிப் புதுக்கவிதைக்கு வந்தவர்.
* ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.
* முதல் சிறுகதை; விஞ்ஞானத்திற்குப் பலி - கலைமகளில் வெளிவந்தது.
* 1933 இல் “முள்ளும் ரோசாவும்” என்ற சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்றது. இதன் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.
* பாரதி "காட்சி” என்ற பாடல் மூலம் வசன கவிதை தொடங்கினார். அதனைப்
புதுக்கவிதையாக்கிப் புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
* வால்ட்விட்மன், பாரதி ஆகியோரை முன்னோடியாகக் கொண்டவர்.
* மணிக்கொடி; கலாமோகினி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் கவிதை எழுதினார்.
* 1934இல் “காதல்” என்ற இவர்தம் முதல் கவிதை வெளியாகியது.
* 1937 இல் "கிளிக்கூண்டு” தினமணிக்கதிரில் வெளியானது. இது இவரை அடையாளம் காட்டியது.
* 1962 இல் 35 கவிதைகள் அடங்கிய “காட்டு வாத்து” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
* பிச்சமூர்த்திக் கவிதைகள், கிளிக்குஞ்சு, பூக்காரி, வழித்துணை போன்றனவும் வெளிவந்தன.
* சிறுகதை நூல்கள்: மோகினி, பதினெட்டாம் பெருக்கு, சம்பரும் வேட்டியும், மாங்காய்த் தலை, பிச்சமூர்த்திக் கதைகள், இரட்டை விளக்கு.
* அகலிகை கதைக்குப் புத்துயிர் கொடுத்து இவர் எழுதிய காவியம் “உயிர்மகள்” என்பது.
* முள்ளும் ரோஜாவும் என்ற சிறுகதை பரிசுபெற்ற கதையாகும்.
* புனைப்பெயர்கள்: பிச்சு, ந.பி.
மேற்கோள்:
வாழ்க்கைப்போர்
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி
ஜீவா! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்
கழுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
****************** ************ ************
0 Comments