TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி
பொதுத்தமிழ் - பகுதி - இ . 2
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
மரபுக்கவிதை
உடுமலை நாராயணகவி
* நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்
* சீர்திருத்த கருத்துகளை முதன் முதலாகத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
* திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
* பெற்ற பட்டம் கவிராயர்
பாடல்கள்
“போகாதே போகாதே என்கணவா
பொல்லாத சொப்பனம் நானுங் கண்டேன்”-மாயாஜோதி (கட்டபொம்மு கூத்து)
“பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே” - தூக்குத் தூக்கி
* "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பது ஏது” ரத்தக் கண்ணீர்
************** ************* ************
பட்டுக்கோட்டைக் கலியாண சுந்தரம்
* பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்
* 'எனது வலதுகை' என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்
* முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா" என்பது
* சினிமாவில் இருந்தது ஒன்பது ஆண்டுகள் (1951 - 1959)
பாடல்கள்
* ' தூங்காதே தம்பி தூங்காதே
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கொண்ட கொள்கையில் தூங்கியவன் புகழ் இழந்தான்”
* “திருடாதே பாப்பா திருடாதே”
"காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்”
******************** ******** *************
மருதகாசி
* இவரின் ஆசிரியர் பாபநாசம் சிவனின் சகோதரர் ராஜகோபாலையர்
* முதல் முதலில் எழுதிய படம் மாயாவதி
* சம்பூர்ண ராமாயணப் படப் பாடல்கள் முழுவதும் எழுதியவர்
* “ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே"
53 வரிகளில் இராமாயணச் சுருக்கமாக அமைந்தது
* 1968இல் கலைமாமணி விருது
* “மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடல் தமிழக அரசின் பரிசு பெற்றது
பாடல்கள்
“ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை”
பிள்ளைக் கனியமுது
“நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே" - சதாரம்
“வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகுதூரமில்லை” - மந்திரிகுமாரி
0 Comments