TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி ! பொதுத்தமிழ் - பகுதி - இ . 2 - மரபுக்கவிதை - பகுதி - 1 , முடியரசன் / TNPSC - TAMIL - TAMILTH THONDU - KAVIGNAR MUDIYARASAN - PART - 1

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ: 2



மரபுக்கவிதை

முடியரசன்

* வாழ்நாள்; 1920 - 1998

* பிறந்த ஊர்: பெரியகுளம், இயற்பெயர்: துரைராஜ்

* மேலைச்சிவபுரி செந்தமிழ்க் கல்லூரியில் படித்தவர்.

* காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

* நூல்கள்: முடியரசன் கவிதைகள், காவியப்பாவை, பூங்கொடி, ஊன்றுகோல், வீரகாவியம்.

* தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் பூங்கொடி (1966)

* தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்றது வீரகாவியம்

* பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் பற்றியது - ஊன்றுகோல்

* பெற்ற பட்டம்: கவியரசு (பறம்புமலை பாரி விழா)

மேற்கோள்:

"இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
இரண்டும் கொண்ட ஆறடா - வாழ்வு
இரண்டும் கொண்ட ஆறடா
இரண்டு கரையும் இல்லை என்றால்
வறண்டு போகும் பாரடா - இதைத்
தெரிந்து நெஞ்சம் தேறடா"

“அவள்ஓர் அழகி - என் ஆவி கலந்தாள்
பலநாள் பழகி”

"வயலுக்கு வரப்பொன்றும் வேண்டாம் என்றால்
வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால்
இயல்மொழிக்கு இலக்கணம் வேண்டாம் கண்ணே"

"மொழிகாக்கும் வரம்பு இல்லையேல்
எம்மொழியும் அழிந்துபோகும்"

"மணவினையில் தமிழ் உண்டா? பயின்றவர்தம்முள்
வாய்ப்பேச்சில் தமிழ் உண்டா? மாண்டபின்னர்
பிணவினை'பில் தமிழ் உண்டா?"



Post a Comment

0 Comments