மனைவி நினைத்தால் புரையேறுமா ? கதைக்கடல் வாரியார் சுவாமிகள் - Thirumuruga kirupanantha vaariyar suvamikal

 

வாரியார் சுவாமிகளின் நினைவு தினம்



           07 - 11 -2021 

வாரியார் சுவாமிகள் சொன்ன கதைகள் இரண்டு இங்கே நமது நண்பர்களுக்காக அவரது நினைவைக் கொண்டாட தரப்பட்டுள்ளது. வாசியுங்கள். வாரியார் சுவாமிகளை நேசியுங்கள்.

                 புரையேறுதல்

       ஒரு கணவனும் மனைவியும் ஒரு வீட்டில் இருக் கிறார்கள். எதிர்வீட்டில் இன்னொரு கணவன் மனைவி இருக்கிறார்கள். கணவன்மார் காட்டிலே போய் விறகு வெட்டி எடுத்து வருவதுபோல ஏதாவது வேலை செய்து கொண்டு வருவாங்க. ஒருவனுக்கு அவன்மனைவி தயிர்சாதம் கட்டிக் கொடுப்பா. இன்னொருத்தன் மனைவி புளிச்சாதம் கட்டிக் கொடுப்பா.

             இந்தப் புளிச்சாதம் சாப்பிடறவனுக்குப் புரையேறுது. "என்னடா காரணம்”னு அடுத்தவன் கேட்டான். “என் பொண்டாட்டி என்னை ஓயாம நினைச்சிக்கினு கீறா அதனாலதான் புரையேறுது”ன்னான்.

"தயிர் சாதம் சாப்பிட்டவனுக்கு ஏக்கம். கூடவே கோபம். நம்ம பொண்டாட்டி நம்ம ஒரு தடவை கூட நினைக்கலையே. அதனாலதான் நமக்குப் புரையேறலைன்னு வீட்டுக்குப் போய் பொண்டாட்டியைப் போடு போடுன்னு போடறான். “ஏய்யா என்னை அடிக்கிறேன்”னு கேட்கிறா.

“எதிர் வீட்டுக்காரன் சாப்பிடும்போது புரையேறுது. ஏன்னு கேட்டா அவன் பொண்டாட்டி நினைக்கிறாங்கறான். நீ என்னை நினைக்கல; அதனால எனக்குப் புரையேறலை”ன்னு சொல்றான்.

“சரி நாளைக்குப் பாருய்யா”ன்னு கூறிய மனைவி சாப்பாட்டிலே ரொம்ப காரம் போட்டு அனுப்பினாள். அவன் அதைக் கொண்டுபோய் சாப்பிடும்போது ஒரே புரையேறல்தான்... “அடியே என்னை நினைக்காதடி என்னை நினைக்காதடி போதும்டி போதும்டி”ன்னு துடித்து விட்டான்.

சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் மறுபடியும் மனைவியை அடிக்கிறான். “உன்னை யார்டி அத்தனை தடவை நினைக்கச் சொன்னது?”

      மனைவி, “புரையேறது நினைக்கிறதாலே வராது. சாப்பாடு சாப்பிடும் முறையாலதான் வருதுன்னு தெரிஞ்சிக்க”ன்னு சொன்னாள்.

***********    ************   *********

                         சனிக்கிழமை விரதம்

  ஒருவன் சனிக்கிழமைதோறும் விரதமிருந்து
அன்னதானம் செய்யறான். பொருளாதாரம் குறைஞ்சிப் போச்சி ஏழையாயிடறான். என்ன செய்வான் பாவம்? முடியலை. அவன் மனைவி இருக்கிறாளே அந்தம்மா நிறைய சாப்பிடுவா. புருசன் சாப்பிடுவதற்கு முன்னாடி இவளே போட்டுத்
தின்னுக்குவா.

இப்போ சாப்பாட்டுக்கு வழியில்லை.

மனைவி குளிச்சிட்டு வந்தா. “என்னங்க...”

குறிப்பறிந்து கணவன் சொல்றான், “நான் என்னடி பண்ணட்டும், என்கிட்டே ஒண்ணுமேயில்லையே.” அவ மேலே ஆவேசம் வந்துடுது. 'நாராயணா நாராயணா நாராயணா'ன்னு ஆடறா. "ஏண்டா எனக்கு
சாப்பாடு இல்லேன்றியா. பெருமாள்தான் பேசறாரு. என்ன சொல்றே.”

அவன் மளிகைக் கடைக்கு ஓடிப்போய் கடன்
வாங்கி வந்து பொங்கிப் போட்டு அன்னிக்கு வெங்க டேசப் பெருமாளைச் சமாதானம் பண்ணிட்டான். அடுத்த வாரம் என்ன பண்ணுவான்? சனிக்கிழமை
வந்தது. இன்னிக்கு அன்னம் இல்லேன்னதும் ஆவேசம் வந்துடுச்சி.

"அடே எனக்கு சாப்பாடு இல்லேன்றியா.”

எங்கெங்கோபோய் கடன் வாங்கி வந்து போடறான்.

இப்படியே எத்தனை வாரம் செய்யறது. எதுத்த
வீட்டுக்காரர்கிட்ட இந்த மாதிரி பெருமாள் வாரா வாரம் வந்து தொல்லை கொடுக்கிறார் நான் என்ன பண்ணட்டும்”னு புலம்பினான்.

        பெருமாளாவது ஒண்ணாவது. அடுத்த சனிக்கிழமை சாமி ஆடறப்ப என்னை வந்து கூப்பிடு. நான் பேசிக் கறேன்னு அடுத்த வீட்டுக்காரன் சொன்னான்.

அடுத்த வாரம் சனிக்கிழமை. வழக்கம்போல்
விசாரணை. சாப்பாடு இல்லேன்னு சொல்றான். உடனே ...ன்னு ஆர்ப்பாட்டத்துடன் கோவிந்தா கோவிந்தான்னு ஆடறா. வெளியே எதிர் வீட்டுக்காரன் ஆடிக்கினு வர்றான்.

ஊ......

"என்னங்க நான்தான் பத்மாவதி, லட்சுமிதேவி. என்னை வுட்டுட்டு பக்தன் வீட்லே வந்து தங்கிட்டீங்களே. என்ன வுட்டுட்டீங்களே. நான் என்ன பண்ணு
வேன்?”னு சொல்லிக்கினு அந்த அம்மாளைக் கட்டித் தழுவ போறான். அந்தம்மா உத்தமி. பசிக் கொடுமை அவ்வளவுதான்.

“சீ நாயே”ன்னு கூச்சலிட்டு “என்னான்னு நினைச்சி என்னை கட்டித் தழுவ வர்ற.”

“ஐயோ நானா வந்தேன் அலமேலு மங்கம்மா,
பத்மாவதி, லட்சுமிதானே வந்திருக்கேன். நான் பத்மாவதி நீங்க பெருமாளு.”

“பெருமாளாவது மண்ணாவது. நான் என் வூட்லே எப்படியோ ஆடிக்குவேன் உனக்கென்னையா?”

பிற்பாடுதான் கணவன் உணர்ந்தான். அவனும் வைதான். அதன் பிறகு வழக்கப்படி சனிக்கிழமை வரும்.

****************   **************   ***********




Post a Comment

0 Comments