ஞாயிறு கொண்டாட்டம் - தினம் ஒரு தேர்வு - ஞாயிறு பல்சுவைத் தேர்வு - வினா & விடை / SUNDAY - ONLINE CERTIFICATE TEST - QUESTION & ANSWER

 

தினமும் எழுதலாம் தேர்வு 

ஞாயிறு கொண்டாட்டம் 

பல்சுவைத் தேர்வு
-
வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ் ' மு.மகேந்திரபாபு , 

தமிழாசிரியர் , மதுரை . 97861 41410


தினமும் நடைபெறும் இயங்கலைத் தேர்வில் பங்கேற்க விருப்பமா? 97861 41410 என்ற எண்ணிற்கு வாட்சாப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.

****************    ****************   **********

1 ) தீபங்கள் பேசும் ----- மாதம்

அ) கார்த்திகை

ஆ) சித்திரை

இ )  மார்கழி

ஈ) பங்குனி

விடை : அ ) கார்த்திகை

2) கார்த்திகை தீபமெனக் காடெல்லாம்

பூத்திருக்கு என்று பாடிய கவிஞர் --

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ )  சுரதா

ஈ) மு.மேத்தா

விடை : இ ) சுரதா 

3) ------ஊரில் மலை மீது பெரிய தீபம்
ஏற்றப்படுகிறது.

அ ) திருப்பரங்குன்றம்

ஆ) திருவண்ணாமலை

இ) திருத்தணி

ஈ) திருப்பதி

விடை : ஆ ) திருவண்ணாமலை

4) மத்திய அரசு திரும்பப் பெற்ற சட்டங்கள் ------

அ ) மருத்துவம்

ஆ) கல்வி

இ) வணிகம்

ஈ) வேளாண்

விடை : ஈ) வேளாண்

5) ' மாலுமி ' என்ற பாரசீகச் சொல்லின்
தமிழாக்கம்

அ ) தேரோட்டி

ஆ) காரோட்டி

இ) படகோட்டி

ஈ) நாவாயோட்டி

விடை : ஈ  ) நாவாயோட்டி

6) காகிதம் ' என்ற மராத்திச் சொல்லின்
தமிழ்ச்சொல்

அ) தாள்

ஆ) பேப்பர்

இ) புத்தகம்

ஈ) ஏடு

விடை : அ ) தாள்

7) எனது இருசக்கர வாகனம் மக்கர்'
செய்கிறது. இத்தொடரில் மக்கர் என்ற
சொல் ----- மொழிச்சொல்.

அ) ஆங்கிலம்

ஆ) இந்தி

இ) அரபு

ஈ ) மலையாளம்

விடை : இ ) அரபு 

8) ' அலமாரி ' என்ற போர்த்துகீசியச்
சொல்லின் தமிழ்ப்பதம் -----

அ) பெட்டி

ஆ) ரேக்

இ) நெடும்பேழை

ஈ) மரச்சட்டகம்

விடை : இ ) நெடும்பேழை

9) சாவி' என்ற போர்த்துகீசியச் சொல்லின் தமிழச்சொல் ------

அ) திறவுகோல்

ஆ) துலாக்கோல்

இ) கன்னக்கோல்

ஈ) கத்தரிக்கோல்

விடை : அ ) திறவுகோல்

10 ) ' மேஸ்திரி' என்ற சொல் குறிப்பது 

அ) வேலையாள்

ஆ) தலைமைத்தொழிலன்

இ ) காவலன்

ஈ) ஏவலன்

விடை : தலைமைத்தொழிலன்

11) இன்று எங்கள்
பேராசிரியர். கு.ஞானசம்பந்தன் ஐயா
அவர்களைப் ' பைந்தமிழ்'
வலையொளிக்காக ( GREEN TAMIL - YOU TUBE ) பேட்டி எடுத்தேன். இத்தொடரில் ' பேட்டி ' என்ற சொல் ----- மொழிச்சொல்.

அ) உருது

ஆ) மராத்தி

இ) இந்தி

ஈ) பாரசீகம்

விடை : அ ) உருது

12) ' பேட்டி ' என்ற சொல் குறிப்பது-----

அ) சந்திப்பு

ஆ) உரையாடல்

இ) நேர்காணல்

ஈ ) கேள்வி பதில்

விடை : இ ) நேர்காணல்

13) சபதம் என்ற சமஸ்கிருதச்சொல்லின்
தமிழ் ----

அ) சிறப்புரை

ஆ) வாழ்த்துரை

இ ) சூளுரை

ஈ) முடிவுரை

விடை : இ ) சூளுரை

14 ) ' அபூர்வம்' என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள்

அ ) ஆச்சர்யம்

ஆ) புதுமை

இ ) பழமை

ஈ) வியப்பு

விடை : அ) புதுமை

15 ) ' Greentamil.in இணையதளம் நடத்தும்' தினம் ஒரு தேர்வை தினமும் எழுதினால் விரைவில் உங்களுக்கு அரசுப்பணி கிடைக்கும் என்பது எனது அபிப்ராயம் - இத்தொடரில் 'அபிப்ராயம்' என்ற சமஸ்கிருதச் சொல் குறிப்பது -----


அ) ஆர்வம்

ஆ) கருத்து


இ) விருப்பம்


ஈ) தகவல்

விடை : ஆ ) கருத்து

16 ) சிங்கத்தின் இளமைப் பெயர் -----

அ) குட்டி

ஆ) கன்று

இ) குருளை

ஈ) பிள்ளை

விடை : இ ) குருளை

17) புலி ------

அ) கர்ஜிக்கும்

ஆ) உறுமும்

இ) பிளிறும்

ஈ) கனைக்கும்

விடை : ஆ ) உறுமும்


18) மயில் ------

அ) அகவும்

ஆ) கூவும்

இ) குனுகும்

ஈ) கரையும்

விடை : அ ) அகவும்


19 ) எடுத்த காரியம் யாவினும் ----- என்றார்
பாரதியார்.

அ ) மகிழ்ச்சி

ஆ ) இன்பம்

இ) வெற்றி

ஈ) அனுபவம்

விடை : இ ) வெற்றி 

20) நெல்லுக்கு நண்டோட ,
கரும்புக்கு ----- , வாழைக்கு -------
தென்னைக்கு தேரோட என்பது
நம் முன்னோர் மொழி.


அ) ஏரோட , வண்டியோட

ஆ) வண்டியோட , ஏரோட

இ) தேரோட , நண்டோட

ஈ) வண்டியோட , தேரோட

விடை : அ ) ஏரோட , வண்டியோட 

Post a Comment

0 Comments