PG - TRB - தமிழ் - 2013 - 2014 வினாத்தாள் - வினாக்களும் விடைகளும் / PG - TRB - TAMIL - 2013 - 2014 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2013 - 2014

வினாக்களும் விடைகளும் - பகுதி - 1

01 முதல் 50 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2013 - 2014

QUESTION & ANSWER - PART - 1

****************    *************   ***********

1 . உழவர்களின் வாழ்வியலைக் கூறும் சிற்றிலக்கியம் எது?

A) பள்ளு

B) உலா

C) கலம்பகம்

D ) தூது

2. பிள்ளைத் தமிழில் முதலாவதாக எப்பருவம் அமைகிறது?

A) முத்தப் பருவம் 

B) அம்புலிப் பருவம்

C) காப்புப் பருவம் 

D) தாலப் பருவம்

3 . முதலாழ்வார்களின் எண்ணிக்கை யாது?

A) 5

B) 6

C) 7

D) 3

4 . ' கொல்லா விரம் குவலயமெல்லா மோங்க எல்லோர்க்குஞ்

சொல்லுவதென் இச்சை பராபரமே' என்று உரைத்தவர் யார்?

A) தாயுமானவர் 

B) பட்டினத்தார்

C) வள்ளலார்

D) திருமூலர்

5 . குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் பெயர் தருக.

A) ஜெயங்கொண்டார்

B) ஒட்டக்கூத்தர்

C) திரிகூடராசப்பக் கவிராயர்

D) குற்றாலநாதர்

6 . ஒரு குறிப்பிட்ட வேலையைக் கற்றது பின்னர் மற்றொரு வேலை கற்பதற்கு உதவியாக இருப்பது எவ்வா அழைக்கப்படுகிறது?

A) எதிர்மறை கற்றல் மாற்றம்

B) பூஜ்ய கற்றல் மாற்றம்

C) நேரிடையான கற்றல் மாற்றம்

D) இவை எதுவும் இல்லை

7 . மனித தேவைகளை உயர்நிலைப் படிக் கோட்பாடாக உருவாக்கியவர்?

A) மார்கன்

B) முர்ரே

C) அட்கின்ஸன் 

D) ஆப்ரகாம் மாஸ்லோ

8 . தற்காப்பு நடத்தை அல்லாதது எது?

A) காரணம் கற்பித்தல்

B) ஈடு செய்தல்

C) புறத்தெரிதல்

D) மனப்போராட்டம்

9. இவற்றில் எது ஆளுமையின் உயிரியியல் காரணி அல்ல?

A) உடல் சார்ந்த பண்புகள் 

B) நுண்ணறிவு

C) நரம்பு மண்டலம் 

D) வேதிப்பொருட்கள்

10. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் சூத்திரம் எது?

A ) மன வயது

கால் வயது  X100

B ) கால வயது

மன வயது  X 100

C) மனவயது X காலவயது X 100

D) மனவயது X காலவயது - 100

11. வைகறை, விடியல்

A) முல்லைத் திணைக்குரிய காலம்

B) குறிஞ்சித் திணைக்குரிய காலம்

C) மருதத் திணைக்குரிய காலம்

D) நெய்தல் திணைக்குரிய காலம்

12 'இருத்தலின்' உரிப்பொருளுக்குரிய திணை

A) குறிஞ்சித் திணை 

B) நெய்தல் திணை

C) முல்லைத் திணை 

D) மருதத் திணை

13. மருதநிலத் தலைமக்கட் பெயர்

A) ஊரன் மகிழ்நன்

B) சேர்ப்பன் துறைவன்

C) மீளி, விடலை 

D) மலைநாடன், வெற்பன்

14. முல்லைத்திணைக்குரிய தெய்வம்

A) இந்திரன்

B) கண்ணன்

C) கொற்றவை

D) வருணன்

15. மருதத் திணைக்குரிய பூ

A) காந்தள் பூ

B) மராம் பூ

C) தாமரை

D) நெய்தல் பூ

16. 'அவர் வந்தார்' என ஒருவரை மட்டும் குறிப்பது

A) திணை வழுவமைதி 

B) பால் வழுவமைதி

C) இட வழுவமைதி 

D) எண் வழுவமைதி

17. 'துஞ்சினார்' என்று செத்தாரைக் குறிப்பது

A) மங்கல வழக்கு 

B) இடக்கரடக்கல்

C) ஆகுபெயர்

D) குழூஉக்குறி

18. 'அண்ணாக் கயிறு' என்பது

A) அண்ணனுக்கு கட்டும் கயிறு

B) அர்ணாக்கொடி

C) அரைஞாண் கயிறு

D) தாம்புக் கயிறு

19. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கடன் வாங்கப்பெற்ற சொற்கள்

A) ஓலை, கறி, காசு, தேக்கு

B) மயில், மாலை, பழம், ஏலம்

C) குடி, கூலி, பெருமகன், கல்

D) அரிசி, இஞ்சி, கருவா (பட்டை), தோகை

20. 'Bicycle' என்பதன் கலைச் சொல்லாக்கம்

A) சைக்கிள்

B) துவிச் சக்கர வாகனம்

C) ஈருருளி 

D) மிதிவண்டி

21. “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்” என மான உணர்ச்சி மிகுந்த பாடல் பாடிய மன்னன் யார்?

A) சேரமான் கணைக்கால் இரும்பொறை

B) கிள்ளிவளவன்

C) பாண்டியன் அறிவுடைநம்பி

D) நலங்கிள்ளி

22. “பெரியோரை வியத்தலும் இலமே : சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனப் பாடியவர் யார்?

A) ஔவையார்

B) உலோச்சனார்

C) கணியன் பூங்குன்றனார் 

D) பரணர்

23. உவமையால் பெயர் பெற்ற புலவர்

A) ஓதலாந்தையார் 

B) கல்பொருசிறுநுரையார்

C) வன்பரணர்

D) அம்மூவனார்

24. கோப்பெருஞ்சோழனோடு பிசிராந்தையாரைப் போல் நட்புக்
கொண்ட மற்றொரு புலவர் யார்?

A) பொத்தியார்

B) கபிலர்

C) தொல்கபிலர் 

D) பெருஞ்சித்திரனார்

25. “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” எனப் பாடிய புலவர் யார்?

A) பாரி மகளிர்

B) பெருங்கோப் பெண்டு

C) வெள்ளி வீதியார்

D) ஔவையார்

26. தமிழ்மொழியை உயர்தனிச்செம்மொழி என்று முதன்முதலில் கூறியவர்

A) மறைமலை அடிகள் 

B) திரு.வி. கல்யாண சுந்தரம்

C) பரிதிமாற் கலைஞர் 

D) எஸ். வையாபுரிப் பிள்ளை

27. தொல்காப்பியர் சுட்டும் உரசொலிகள்

A) ல,ள

B) ப,ம

C) ச,ஞ

D) ர,ழ

28 . ' என்' என்னும் சொல் யார் காலத்தில் 'அன்' என்று மாறியது ?

A ) பல்லவர்

B) பாண்டியர்

C ) சேரர்

D) சோழர்

29. முதன் முதலாகத் 'தமிழன்' என்ற சொல்லாட்சி காணப்படும் இலக்கியம்


A) சம்பந்தர் தேவாரத்தில்
 
B) திருமந்திரத்தில்

C) அப்பர் தேவாரத்தில்

D) திருவாசகத்தில்

30. எந்த அளபெடை சோழர் காலத் தமிழில் காரணவினை
காட்டும் உருபாக இருந்தது?

A) இகரம்

B) உகரம்

C) அகரம்

D) எகரம்

31. உவமை தோன்றும் நிலைக்களன்

A) பகை

B) காதல்

C) விளையாட்டு

D) வினை

32. பொறி நுதல் வியர்த்தல்

A) இரண்டாம் நிலை மெய்ப்பாடு

B) மூன்றாம் நிலை மெய்ப்பாடு

C) முதல் நிலை மெய்ப்பாடு

D) ஆறாம் நிலை மெய்ப்பாடு

33. உவமப் போலி

A) நான்கு

B) மூன்று

C) இரண்டு

D) ஐந்து

34. உள்ளுறை உவமத்தின் பயன்

A) சுவை

B) கற்பனை

C) வடிவம்

D) உணர்ச்சி

35. 'தளிர் அடிமென் நகை மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்கு' - இவ்வடிகளில் அமைந்துள்ளது

A) உவமை

B) அடைமொழி

C) உள்ளுறை

D) இறைச்சி

36. கவிதை இலக்கியங்களுள் பேரிலக்கியமாகத் திகழ்வது

A) காப்பியம்

B) அற இலக்கியம்

C) பக்தி இலக்கியம் 

D) சிற்றிலக்கியம்

37. மணநூல் என்று அழைக்கப்படுவது

A) சிலப்பதிகாரம்

 B) மணிமேகலை

C) வளையாபதி 

D) சீவகசிந்தாமணி

38. 'அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்கு உரியவர்

A) கோவலன்

B) மாடலன்

C) சாத்தனார்

D) இளங்கோவடிகள்

39. மணிமேகலையால் யானைத் தீ பசிநோய் தீர்க்கப்பட்டவள்

A) ஆதிரை

B) சுதமதி

C) சித்திராபதி

D) காயசண்டிகை

40. குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றிய வாத நூல்

A) நீலகேசி

B) வளையாபதி

C) உதயண குமார காவியம் 

D) சூளாமணி

41. ஒலி வடிவிலும் வரி வடிவிலும் அமைந்த எழுத்துகளின்
தனித்தன்மையை விளக்குவது

A) மொழி மரபு

B) தொகை மரபு

C) நூன் மரபு

D) பிறப்பியல்

42. சகார ரூகாரம் பிறப்பு

A) நுனிநா அண்ணம் 

B) இடைநா அண்ணம்

C) முதல்நா அண்ணம் 

D) கடைநா அண்ணம்

43. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் எழுந்த சொல்லிலக்கண நூல்

A) பிரயோக விவேகம்

B) நேமிநாதம்

C) முத்துவீரியம் 

D) தமிழ் நெறி விளக்கம்

44. 'சொல்லும் பொருளும்' ஒரு தாளின் இரண்டு பக்கம்
போன்றது என்று கூறியவர்

A) கால்டுவெல் 

B) டிசசூர்

C) சோம்ஸ்கி

D) சீகன் பால்கு

45. யாப்பிலக்கணக் கலைக் களஞ்சியம்' என அழைக்கப்படுவது

A) யாப்பருங்கலக்காரிகை

B) யாப்பருங்கலம்

C) யாப்பருங்கல விருத்தியுரை

D) இலக்கண விளக்கம்

46. குழந்தை மையக் கல்வியில் ஆசிரியரின் பணி

A) கற்றலுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்துதல்

B) உகந்த சுற்றுச்சூழலை அளித்தல்

C) குழுவின் செயல்படு உறுப்பினராகத் திகழ்தல்

D) மேற்கூறிய அனைத்தும்

47. மகிழ்ச்சியுடன் கற்றல் என்பது கீழ்க்கண்ட எந்தக்கற்பித்தல் வகைக் கோட்பாடுகளை அடிப்படையாகக்
கொண்டது ?

A) செயல்வழிக் கற்றல்

 B) குழந்தை மையக் கற்றல்

C) தேர்வு மையக் கற்றல் 

D) (A) மற்றும் (B) இரண்டும்

48. 'தி வில்லேஜ் காலேஜ்' என்ற வெளிநாட்டின் அடிப்படையில்
சமுதாயப் பள்ளியை முதன் முதலில் நிறுவியவர்

A) இவான் இல்லிச் 

B) ஹென்றி மோரிஸ்

C) ஜான் டூயி

D) மகாத்மா காந்தி

49. இந்தியாவில் 1961 ஆம் ஆண்டு 'சைனிக் பள்ளிகள்' என்ற
பள்ளி அமைப்புகள் இவருடைய கருத்தில் உருவானது?

A) A.K. கிருஷ்ண மேனன் 

B) J.K. கிருஷ்ண மேனன்

C) S.K கிருஷ்ண மேனன் 

D) V.K கிருஷ்ண மேனன்

50. 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் எது?

A) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், புது டெல்லி

B) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், கர்நாடகம்

C) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், ஆந்திரப்பிரதேசம்

D) மத்தியக் கல்வி நுட்பவியல் நிறுவனம், தமிழ்நாடு

Post a Comment

0 Comments