குழந்தைகள் தினவிழா - மாணவச் செல்வங்களின் மனம் மகிழும் படைப்புகள் / மாணவப் பிரம்மாக்கள் / NOVEMBER 14 - CHILDRENS DAY - KAVITHAI - DRAWING

 

             குழந்தைகள் தினவிழா 

            மாணவப் பிரம்மாக்களின் 

                  கைவண்ணங்கள் 


கவிதை 

கொடியில் பிறந்த மலரே !

தாய் மடியில் உதித்த மழலையே!

இளமை, முதுமை பெற்றாலும் இவ்வுலகம்

 உனைத் தந்த பெற்றோரை பேணிடுவாய்!-

என்றும் நற்றோனாய் வாழ்ந்திடுவாய் !

 பட்டாம் பூச்சிகளாய் சிறகு விரிப்பாய்! 

எட்டா சிகரத்தையும் ஏறி மிதிப்பாய்! 

சுயத்தை என்றும் சுடர விடுவாய்! 

பயத்தை சற்று விலக்கி விடுவாய்! 

மாதா பிதா குரு தெய்வம் மதித்திட 

என்றும் மறவாதிருப்பாய்

கவிஞர்.கோகிலா

ஒன்பதாம் வகுப்பு , விருதுநகர்.

***************     *********   *************

ஓவியம் - சி.ஜெயந்தி 



*****************   ***********   ***********

கவிதை 

வெள்ளை மனம் கொண்ட  உள்ளங்களே

வருங்கால சமுதாயத்தின்  

சிற்பிகள்....!


வஞ்சினம் கொண்ட மனிதனும் 

உந்தன் பிஞ்சு உள்ளத்தின் 

மழலை சொல் கேட்டால்

மடியின் இசையில் மயங்கும் 

நாகம் போல் மயங்கி

தன் சினம் மறந்து விடுவான்.....!


குழந்தைச் செல்வங்களே   

நாட்டின் வருங்கால தூண்கள்

என்பதை எல்லோரும் உணர்ந்து 

குழந்தைகளுக்கு

அன்பையும் பண்பையும்

போதித்து வளர்க்க வேண்டும்

என்று சொன்னார் பண்டிதர் நேரு...!


கவிஞர்.ர. கவிதா , ஒன்பதாம் வகுப்பு

அரசு உயர்நிலைப்பள்ளி

துவரிமான் , மதுரை.

****************    *************   ***********


ஓவியம் 

செ.ஆரோக்கிய கீர்த்தி , 

பத்தாம் வகுப்பு.


**************   **************   ***********

ஓவியம் - A.மாலதி , 12 

அ.பெ.மே.நி.பள்ளி , மணலூர் பேட்டை , 

கள்ளக்குறிச்சி .



Post a Comment

0 Comments