தீபாவளி - சிறப்பு வெடித்தேர்வு - வினாக்களும் விடைகளும் / DIWALI - ONLINE CERTIFICATE TEST

 

நண்பர்கள் அனைவருக்கும் 

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வெடித்தேர்வு - வினாக்களும் விடைகளும் !

****************   ************   *************

1) வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைத் தரும் பண்டிகை

அ) கார்த்திகைத் திருநாள்

ஆ) தைத்திருநாள்

இ ) தீபாவளித் திருநாள்

விடை : இ ) தீபாவளித்திருநாள்

2) தீபாவளி - இதில் ஆவளி என்பதன்   பொருள்

அ) அழகு

ஆ) ஒளி

இ) வரிசை

விடை : இ ) வரிசை 

3) ' உன்னைக் கண்டு நான் ஆட என்னைக்
கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்பத்தீபாவளி ' என்று பாடல் எழுதிய
கவிஞர் -----

அ) கண்ணதாசன்

ஆ) வாலி

இ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

விடை : இ ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

4) தீபாவளி ----- மாதத்தில்   கொண்டாடப் படுகிறது.

அ) புரட்டாசி

ஆ) ஐப்பசி

இ) கார்த்திகை

விடை : ஆ ) ஐப்பசி 

5) மகாவீரர் வீடுபேறு அடைந்த தினமாக
இத்தினத்தைக் கொண்டாடுபவர்கள்

அ)சமணர்கள்

ஆ) சைவர்கள்

இ) பௌத்தர்கள்

விடை : அ ) சமணர்கள் 

6 ) தமிழகத்தில் பட்டாசிற்குப் பெயர் பெற்ற ஊர் -----

அ) சிவகாசி

ஆ) தென்காசி

இ) வடக்கம்பட்டி

விடை : அ ) சிவகாசி 

7) பொற்கோயில் கட்டுமானப் பணிகள்
இத்தினத்தில் தொடங்கியதைக்
கொண்டாடுபவர்கள் -----

அ) வைணவர்கள்

ஆ) சீனர்கள்

இ) சீக்கியர்கள்

விடை : இ ) சீக்கியர்கள்

8) தான் இறந்த நாளை மக்கள்
மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என --- --- எனும் அரக்கன் விரும்பியதாகக்
புராணக்கதை கூறுகிறது.

அ) நரகாசுரன்

ஆ) தாராசுரன்

இ) மாரிசன்

விடை : அ ) நரகாசுரன்

9 ) தீபாவளி அன்று அதிகாலையில்
எண்ணெய்த் தேய்த்து குளிக்கும் குளியலின் பெயர் ------

அ) கங்கா ஸ்நானம்

ஆ) காயத்ரி ஸ்நானம்

இ) சூரிய ஸ்நானம்

விடை : அ ) கங்கா ஸ்நானம்

10 ) தீபாவளியன்று ----- பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தி சுற்றுச்சூழலைப்
பாதுகாக்க வேண்டும்.

அ) பசுமை

ஆ) மஞ்சள்

இ ) வெண்மை 

விடை : அ ) பசுமை

***************   ****************   ********


Post a Comment

0 Comments