தித்திக்கும் தீபாவளித் திருநாள்
4 • 10 • 2021
தீபாவளித் திருநாள்
குழந்தைகள் கொண்டாடும்
குதூகலத் திருநாள்
புத்தாடை பொழிவில்
புத்தொளி பரப்பும்
சிதறிச் சிந்தும் மத்தாப்பும்
சீறி வெடிக்கும் பட்டாசும்
சின்னஞ்சிறு உள்ளங்களை
சிறைபிடிக்கும் திருநாள் !
வெளிச்சக் கீற்றுகளால்
வசந்தம் பெறும்நாள்
உச்சம் தொடும் உற்சாகத்தில்
மிச்சம் தரும் சொற்பூக்களாய்
வானமதில் பட்டாசு மலர்கள்
பல வண்ண மின்னலென
மலர்ந்து உதிர்ந்து ஜொலிக்கும்
காண்பவர் உள்ளம் சிலிர்க்கும்
வண்ணங்களை வாரியிறைக்கும் கவிதையாக
உள்ளம் உவகை கொள்ளும் சிவிகையாக
விளக்குகளால் அலங்கரித்து
வெடி வெடித்துப் பரிசுப் பரிமாறி
நட்பு நாடிச் சுற்றம் போற்றி
நாடெங்கும் பரவும் ஒளியில்
நனைந்து மகிழ்ந்து திளைக்கும்
இனமொழி மதம் நாடு கடந்த ஒப்பற்றப் பெருநாள் !
தீபாவளித் திருநாள் !
பாரதம் தாண்டிப் பார் முழுதும் கொண்டாடும் விழாவாகத் திகழ்கிறது தீபாவளிப் பண்டிகை . தீமையெனும் இருள் அறுத்து , நன்மை தரும் ஒளிப்பரப்பும், களிப்பு கொண்டாட்டம் தீபாவளி. பெரியவர்களும் சிறுபிள்ளையாகி சிறக டிக்கும் திருவிழாவாகவும். வெடி தரும் வேடிக்கையின் மகிழ்ச்சிகள் எண்ணிலடங்கா. இந்திய கலாச்சார திருவிழாக்கள் பண்பாடுகள் நிறைந்த அறிவுரைகள் தரும் வரலாறுகள் ஏராளம். இந்திய திருவிழாக்கள் அனைத்தும் ஏதாவதொரு கதை அல்லது வரலாற்றுப் பின்னணியில் நிகழ்நததாகவே உள்ளது. தீமைக்கு உருவம் கொடுத்து கொடுமைகளை அரங்கேற்றி அநியாயம் செய்து, மக்களை அச்சத்தில் ஆழ்த்திய அரக்கக்குணத்தை அழித்த மாபெரும் வெற்றியே தீபாவளியாம்.
இந்துக்களும் , சமணர்களும், சீக்கியர்களும் இப்பண்டிகையைக் தேசமெங்கும் கொண்டாடிய போதும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப் படுகின்றன. சமயம் சார்ந்த இவ்விழா கலாச்சாரம் சார்ந்த விழாவாகவே கொண்பாடப்படுகின்றது. தீபாவளி எனும் தீப ஒளி விழா இந்தியாவில் மட்டுமன்றி அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் , நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளிலும் கொண்டாடி மகிழ்வது மட்டுமல்லாது அரசாங்க விடுமுறை அளிக்கும் அளவிற்கு சிறப்புப் பெற்று விளங்குகின்றன.
கி.பி ஆயிரத்து நூறாம் ஆண்டுகளிலேயே தீபாவளி கொண்டாடும் வழக்கம் இந்தியாவில் இருந்ததாகச் சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கி.பி 1117- ம் ஆண்டில் சாளுக்கிய மன்னன் ஆண்டு தோறும் தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடக் கல்வெட்டில் காணக் கிடைக்கிறது. மேலும் கி.பி ) 1250 - ஆம் ஆண்டு எழுதப்பட்ட லீலாவதி என்னும் மராத்தி நூல் எண்ணெய்க் குளியலின் இன்றியமையாத செய்திகளை நல்குகின்றன.
கி.பி 16 - ம் நூற்றாண்டு முதல் கோயில்களில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டும் சான்றுகள் திருப்பதி திருமலையின் தமிழ்க் கல்வெட்டுகளிலும் , திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன.
வரலாற்று அடிப்படையிலான ஆய்வில் , முதன் முதலில் தீபாவளியைக் கொண்டாடியவர்கள் சமணர்களே எனஆய்வு கூறுகின்றது.. சமணர்கள் 2500 - ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மகாவீரர் முக்தி அடைந்த தினத்தை பேரொளியால் நிரப் பும் திருநாளாகக் கொண்டாடப் படுகின்றன. சமணத்திலிருந்து இந்து சமயத்திற்கு வந்த சிலவற்றில் தீபாவளியே முதன்மையானது.
தீபம் + ஆவளி = தீபாவளி. தீபம் என்றால் விளக்கு எனவும் , ' ஆவளி ' என்பது வரிசை எனப் பொருள் படும் . தீபாவளி, தீபங்கள் அணிவகுக்கும் வரிசையின் காட்சித்திருநாளைக் கொண்டாடும் வழக்கம் பழங்காலம் தொட்டே கொண்டாடப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தீபாவளியின் முக்கிய நிகழ்வான கிருஷ்ண லீலை என்பது இந்திய மக்களின் பெரும் நம்பிக்கை. இந்து மதத்தில் கிருஷ்ண லீலையே மிக முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், இராமயணமத்தில் இராமர் , இராவணனை அழித்துக் கொண்டாடும் திருவிழாவும் , கந்த புராணத்தில் சிவனோடு சினம் கொண்ட பார்வதி , சிவனது சக்தியை உணர்ந்து , 21 - நாட்கள் விரதம் இருந்து பின்பு சிவனிடம் ஒன்றிணைந்த வரலாறு கேதார கெளரி விரதமாக மேற்கொண்டு பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது.இவை மட்டுமல்லாமல் மேலும் சில தீபாவளிகளும் இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகின்றன.
*புத்த மத தீபாவளியானது அசோகர் தழுவிய நாளை புத்த மத தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.
* சமணர்கள் தீபாவளி:
சமணர்களின் தலைவரான மகாவீரர் இறையடியைச் சேர்ந்த நாளை நினைவுக் கூர்ந்து , இத்தினத்தை தீபாவளிதிருநாளாக சமணர்கள் கொண்டப்படுகின்றன.
சீக்கிய ர்களின் தீபாவளி :
சீக்கியர்களின் கலாச்சார பண்பாட்டைப் பறைசாற்றும் பண்டிகையாக தீபாவளியை பொற்கோவில் கட்டுமான வேலையைத் தொடங்கிய நாளை கொண்டாடுகின்றனர். இது ஐந்து நதிகள் அலைபாயும் பஞ்சாப்பைத் தஞ்சமெனக் கொண்ட சீக்கியர்கள் கொண்டாடும் தியாகச் சரித்திரத் திருவிழா தீபாவளி. இந்நாளை சீக்கியர்கள் தங்கள் குருவிடம் சென்று வாழ்த்துக்களைப் பெறும் நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். இவ்வாறாக சீக்கிய மூன்றாம்
சீக்கிய மத குருவான அமர்தாஸ் ( 1552 - 1547 ) - அறிவுறுத்தலின் படி தொடங்டிய அந்த வழக்கம் இன்றும் தொடர்கின்றன.
ஆனந்தம் தரும் அமைதி தீபாவளி :
அமைதியே ஆனந்தமாய் அலங்கரிக்கப்பட்ட அற்புதஇடம் கூந்தன் குளம். திருநெல்வேலி மாவட்டம் ,நாங்குநேரி வட்டம் கூந்தன் குளம் பறவைகளின் சொர்க்கம்.தீபாவளி என்றாலே படபடக்கும் பட்டாசும் , புகை கமழும் சூழலும் சுற்றுப்புறத்தை சுகந்தமாக்கும் . அத்தகைய பட்டாசுகளே வேண்டாமென வேட்கையுடன் நின்று பறவையின் உயிர்காக்கும் செயல் நெல்லையின் தொல் வளம் காக்கும் கூந்தன் குளம். இங்குள்ள பாசமிகு மக்களின் நேசமிகு உறவுகளாக பறவைகள் பவனி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளையாக அன்பு பாராட்டி அரவணைப்பதால், பறவைகள் அவைகாணும் நீர்நிலை எங்கும் நீந்தி , மகிழ்ந்து, தன் இனம் பெருக்கி கூந்தன்குளத் தை சொர்க்கமென எண்ணி ஆனந்த நடனம் புரிகின்றன.
இவற்றின் நலன் காக்க இப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. அவற்றை அறவே ஒழித்து பறவைகளின் பாதுகாவலர்களாக உள்ளனர். இங்கு தீபாவளி அமைதியான திருநாளாகவும் , பறவையின் வாழ்வுக்காக மனிதன் தன் தியாகத்தைப் பறைசாற்றும் தியாக தீபாவளியாக பெருமைக்குறியதாகிறது. எனவே ஆண்டு தோறும் அலையலையாக பறவைக் கூட்டங்கள் வருகைத் தருகின்றன. எனவே இப்பகுதியை 1994 - ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
நலம் தரும் பசுமை தீபாவளி :
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வேதிச்சேர்மங்கள் கொண்ட பட்டாசுகளை விடுத்து , பயன் தரும் பசுமைப்பட்டாசு நலன் தரும் . பசுமைப் பட்டாசுகள் ஒளி , ஓலி மற்றும் காற்று மாசுபாட்டைத் தடுக்கும். வேதியல் பட்டாசுகளால் வேதனைகள் தரும் பாதிப்புக்களை தடுக்கும் விதமாக செயற்கைப் பட்டாசுகளின் பயன்பாட்டைக் குறைத்துபசுமைப் பட்டாசை பயன்படுத்த வேண்டும். இப்பட்டாசுகள் குறைந்த ஒலியையுடன் வெள்ளை மற்றும மஞ்சள் நிறங்களில் ஒளிரும். சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே எளிதில் எரியக் கூடிய தேனீக்களின் மெழுகு மற்றும் சாணத்தால் செய்யப்பட்ட விளக்குகளைப் பயன்படுத்தி நலம்காணலாம்.
மரத்தை நட்டு மாசை அகற்று :
பண்டிகையின் மகத்துவம் பரிசு அளிக்கப்படுவது. அவ்வாறு அளிக்கப்படும் பரிசு பயன்களையும் , நிரந்தர நினைவுக ளையும் , மகிழ்ச்சியையும் , தூய்மையும் தருவதாக இருக்க கருதி னால் அதற்கு மரக்கன்றையோ, சிறு மூலிகைச் செடிகளையோ வழங்குவது சாலச் சிறந்ததாகும். இது பரிசைப் பெறுபவரின் ஆரோக்கியம் காக்கவும் , காற்றின் மாசை அகற்றவும் பயன்படுகிறது. சிறு செடி வளர்ந்து வளம்பெற்று இருளகற்றி ஒளி தரும் தீபாவளிப் போல தாவர உலகம் தீமைத் தரும் மாசு அகற்ற வடி கட்டியாகி ஒளியென நல் வாழ்வை மனித குலத்திற்கு தூய்மையக்கி வழங்கும் வள்ளலாகிறது. எனவே ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு சிறு செடியாவது நட்டு வளர்ப்பதன் மூலம் வையத்தையும் குளிர்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாற்றி உயிர்வளி தரும் உன்னத நிலை யைக் காணலாம். எனவே இவற்றை பசுமை போற்றி ஒளிபெறும் தீபாவளியாக கொண்டாடி மகிழ்வோம்.
விழிப்பளிக்கும் விபத்தில்லா தீபாவளி :
தேவையற்ற செயல் நீக்கிப் பயனுள்ள நிலைக்காண விழிப்புணர்வு என்பது இன்றியமையாததாகிறது. தீபாவளி என்பது இனிப்பும் , பட்பாசும் என இரண்டறக் கலந்த விழாவாகும். இவற்றை தேர்வு செய்யும் போதும் , பயன்படுத்தும் போதும் சிறிது கவனம் தேவை . தரமான பட்டாசுகளை வாங்கி உபயோகிக்க வேண்டும். சிறிய வெடியாக இருந்தாலும் சரியான முறையில் கையாள வேண்டும். பருத்தியாலான துணிகளைப் பயன்படுத்த வேண்டும். காலணிகளையும் , கையுரைகளையும் பயன் படுத்த வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும்பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். முழுவதுமாக அணைக்கப்பட்ட பிறகே அருகில் செல்ல வேண்டும். வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் ராக்கெட் போன்ற பட்டாசு களையும் , சீறிப்பாயும் பட்டாசுகளையும் பயன்படுத் துவதை தவிர்த்தல் நலம். மேலும் கையிலொ, சட்டைப் பையிலோ பட்டாசு வைத்துக்கொண்டு மற்றொரு பட்டாசை கொளுத்தக் கூடாது. இவ்வாறாக இவற்றை தவிர்த்து கவனமாக கொண்டாடுவது நிரந்தர ஒளி வீசும் தீபாவளியாக இனிக்கும்.
தீபாவளி என்பது இந்துக்கள் மட்டுமல்லாது இந்தியாவே ஒளிரும் திருநாளாகும். அவ்வொளி தூர தூர தேசங்களிலும் எதிரொளிக்கப் பட்டு இன்பம் தருகின்றன. இந்திய கலாச்சாரம் இமயமாக உயர்ந்து இனிமையாக விளங்க நமது பங்களிப்பும் மிக அவசியமாகின்றன. அவற்றைஉணர்ந்து பசுமை போற்றி, விழிப்புணர்வு கொண்டு அமைதி தீபாவளியாக அகிலம் மகிழ கொண்டாடுவோம்.
0 Comments