குழந்தைகள் தின விழா - சிறப்பு இயங்கலைத் தேர்வு - வினா & விடை / CHILDRENS DAY - ONLINE CERTIFICATE TEST

 


குழந்தைகள் தினம்  (நேரு பிறந்த தினம்)


சிறப்பு - இயங்கலைத் தேர்வு - 14 - 11 - 2021

வினா உருவாக்கம் - 

' பைந்தமிழ் ' மு.மகேந்திரபாபு

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

80 % மதிப்பெண் பெற்று , சான்றிதழ்
கிடைக்கப்பெறவில்லையெனில் தங்கள் பெயர் வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 141410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.


தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும்
ஆன்லைன் தேர்வு இணைப்பு தேவையெனில் தங்கள் பெயர் , படிப்பு , மாவட்டம் அனுப்பி இணைப்பினை உங்கள் வாட்சாப் எண்ணிற்குத் தினமும் பெற்றுக்  கொள்ளலாம்.

**************   *************   *************

1 ) குழந்தையும் ------ குணத்தால் ஒன்று என்பது நம் முன்னோர் மொழி.

அ ) தெய்வமும்

ஆ ) தந்தையும்

இ ) தாயும்

ஈ ) ஆசிரியரும்

விடை : அ ) தெய்வமும்


2 ) ------ பிறந்த நாளே குழந்தைகள் தினவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.

அ ) மகாத்மா காந்தி 

ஆ ) டாக்டர்.இராதா கிருஷ்ணன்

இ ) டாக்டர்.அம்பேத்கர்

ஈ ) பண்டித ஜவஹர்லால் நேரு

விடை : ஈ ) பண்டித ஜவஹர்லால் நேரு

3 ) ' குழந்தைக் கவிஞர் ' என்று அழைக்கப் படுபவர் ------

அ ) பாரதியார்

ஆ ) பாரதிதாசன்

இ ) அழ.வள்ளியப்பா

ஈ ) ஔவையார்

விடை : இ ) அழ.வள்ளியப்பா 


4 ) குழந்தைகளுக்காகப் ' பாப்பா பாட்டு ' பாடியவர் -----

அ ) நாமக்கல் கவிஞர்

ஆ) கவிமணி

இ ) பாரதியார்

ஈ ) அழ.வள்ளியப்பா 

விடை : இ ) பாரதியார்


5 ) ' மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே ' - என்ற பாண்டியன் அறிவுடை நம்பியின் பாடல் இடம்பெற்ற நூல் ------

அ ) புறநானூறு

ஆ ) அகநானூறு

இ ) கலித்தொகை

ஈ ) பரிபாடல்

விடை : அ ) புறநானூறு


6 ) ' குழலினிது யாழினிது என்பதம் மக்கள் 

     மழலைச்சொல் கேளா தவர் ' - என்ற குறட்பா இடம்பெற்றுள்ள அதிகாரம் -----

அ ) அறிவுடைமை 

ஆ ) பண்புடைமை

இ ) பெரியாரைத் துணைக்கோடல்

ஈ ) மக்கட்பேறு

விடை : ஈ ) மக்கட்பேறு


7 ) நேரு அவர்கள் பிறந்த மாநிலம் ------

அ ) மத்தியப்பிரதேசம்

ஆ ) உத்தரப்பிரதேசம்

இ ) குஜராத்

ஈ ) ஆந்திரா 

விடை : ஆ ) உத்தரப்பிரதேசம்


8 ) நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது , இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் ------

அ ) இராசேந்திர பிரசாத்

ஆ ) இராதா கிருஷ்ணன்

இ ) வெங்கட்ராமன்

ஈ ) நாராயணன்

விடை : அ ) இராசேந்திர பிரசாத்


9 ) நேருவின் தந்தையார் மோதிலால் நேரு -------- தொழில் புரிந்தார்.

அ ) ஆசிரியர்

ஆ ) மருத்துவர்

இ  ) வழக்குரைஞர்

ஈ ) பொறியாளர்

விடை : இ ) வழக்குரைஞர்


10 ) நேருவின் மகள் ------

அ ) இந்திரா காந்தி 

ஆ ) சோனியா காந்தி 

இ ) மேனகா காந்தி 

ஈ ) பிரியங்கா காந்தி 

விடை : அ ) இந்திரா காந்தி 


11 ) சுதந்திரப் போராட்ட காலத்தில் நேரு சிறையில் இருந்த ஆண்டுகள் ------

அ ) மூன்று

ஆ ) ஐந்து 

இ ) ஏழு

ஈ ) ஒன்பது

விடை : ஈ ) ஒன்பது


12 ) ------- இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945 ஆம் ஆண்டு நேரு கைது செய்யப்பட்டார்.

அ ) உப்புச்சத்தியாகரகம்

ஆ ) வெள்ளையே வெளியேறு

இ ) ரௌளட் சட்டம்

ஈ )சுதேசி இயக்கம்

விடை : ஆ ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்


13 ) நேரு , முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை ------ ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

அ ) 1947

ஆ ) 1950

இ ) 1951

ஈ ) 1955

விடை : இ ) 1951


14 ) நேரு ------ கொள்கையை உருவாக்கினார்.

அ ) புதிய கல்விக்கொள்கை

ஆ ) தட்சசீலக் கொள்கை

இ ) பஞ்சசீலக் கொள்கை

ஈ ) சுதேசிக்கொள்கை 

விடை : இ ) பஞ்சசீலக்கொள்கை 


15 ) நேரு குடும்பத்தினரின் இல்லம் ------ என அழைக்கப்படுகிறது.

அ ) ஆனந்த பவன்

ஆ ) இராஷ்டிரபதி பவன்

இ ) மோதிலால் பவன்

ஈ ) நேருபவன்

விடை : அ ) ஆனந்த பவன்


16 ) நேரு , ' நேஷனல் ஹெரால்டு ' என்னும் பத்திரிகையைத் தொடங்கிய ஆண்டு -----

அ ) 1938

ஆ ) 1940

இ ) 1948

ஈ ) 1950

விடை : அ ) 1938


17 ) நேருவிற்குப் பிடித்த மலர் ------

அ ) தாமரை

ஆ ) ரோசா

இ ) அல்லி

ஈ  ) மல்லி 

விடை : ஆ ) ரோசா


18 ) இன்றைய குழந்தைகளுக்கு நாம் தர வேண்டியது -----

அ ) தூக்கம்

ஆ ) ஏக்கம்

இ ) ஊக்கம்

ஈ  ) பணம்

விடை : இ ) ஊக்கம்


19 ) படிக்கும் காலம் -----. பண்பை வளர்க்கும் நற்காலம் என்பார் கவிஞர்.ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள்.

அ ) பொற்காலம்

ஆ ) கற்காலம்

இ ) தற்காலம்

ஈ ) எதிர்காலம்

விடை : அ ) பொற்காலம்


20 ) குழந்தை மையக்கற்றலை வலியுறுத்தியவர் ------

அ ) ப்ரோபல்

ஆ ) ஜான்டூயி

இ ) மாண்டிசோரி

ஈ ) ரூசோ

விடை : ஈ ) ரூசோ


21 ) தாயைப் போல பிள்ளை . ------ போல சேலை என்பது நம் பழமொழி.

அ ) நூலைப் 

ஆ ) பாவைப் 

இ ) துணியைப் 

ஈ ) வேலைப்

விடை : அ ) நூலைப்போல 

22 ) கீழ்க்கண்டவற்றுள் நேரு அவர்களுக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு

அ ) ஆசியசோதி

ஆ ) மனிதருள் மாணிக்கம்

இ ) தேசத்தந்தை

ஈ ) சமாதானப்புறா 

விடை : இ ) தேசத்தந்தை


******************   ************   ***********

Post a Comment

0 Comments