உலக நிமோனியா தினம் - நிமோனியா எவ்வாறு உருவாகிறது ?

 

             உலக  நிமோனியா தினம். 

                         12 • 11 • 2021


                              நிமோனியா பற்றிய விழிப்புணர்வுக்காகவும் , வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் கடுமையான சுவாசம் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் அனுசரிக்கப் படுகிறது. மேலும் நிமோனியாவின் தீவிரத் தன்மையை எடுத்துரைத்து , குழந்தை ,  நிமோனியா பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் , ஆதரவு திரட்டவும் நிமோனியா எதிர்ப்பு அமைப்பான ( GCCP ) என்பது  முதல் முதலாக 2009 - ஆம் ஆண்டு நவம்பர் 12 - நாள் இத்தினத்தைக் கடைபிடிக முடிவு செய்து தொடர்ந்து  கடைபிடிக்கின்றன. எனவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 - ம் நாள் உலக நிமோனியா தினமாக கடைபிடிக்க படுகின்றது.

நிமோனியா  விளக்கம் :

நிமோனியா என்பது நுரையீரலைத் தாக்கும் ஒரு கடுமையான அழற்சி நோயாகும். கடும் மூச்சு மண்டலத் தொற்று நோய், இது நுரையீரலைப் பாதிக்கிறது.காற்றால் நிரம்பியிருக்கும் நுரையீரல் நுண் அறைகள் , நிமோனியாவால் சளியும் , சீழும் நிரம்பி சுவாசிக்கும் போது வலியைக் கொடுத்து , உயிர்வளியைத் தடுத்து , உதிரம் தேய்ந்த சளியுடன் வைரஸ் , பாக்டீரியா , நுண்ணுயிரி , காளான் போன்றவறால் நிமோனியா உண்டாகிறது.

நிமோனியா தினம் கடைபிப்பதன் காரண‌ம் :

* 5 - வயதுக்குட்பட்ட  குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான நிமோனியா வைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

* நிமோனியா பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் , தடுக்கவும் சிகிச்சையை ஊக்குவிக்கவும் செய்ய வலியுறுத்தல்.

* நிமோனியாவை  குறைக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை உருவாக்குதல் .

நுரையீரலின் வேலை :

உடலின் சீரான இயக்கத்திற்கு முக்கியப் பங்கு வகிப்பது திசுக்கள். அத்திசுக்களுக்கு  ஆக்ஸிஜன் தேவைப்படுகின்றன. நுரையீரல் சுவாசிக்கும் போது காற்றை உள்ளே இழுக்கும் போது , அதில் உள்ள ஆக்ஸிஜன் உள்வாங்கி இரத்தத்தில் கலக்கும் பணியை நுரையீரல் செய்கிறது. உடலில் பயன்படுத்திய  கார்பன் - டை - ஆக்சைடு  கலந்த காற்றை இரத்தத்தில் இருந்து வெளியேறும்  பணியையும் செய்கிறது.இப்படி காற்றைச் சுவாசிக்கும் போது  கலந்துள்ள வைரஸ் ,பாக்டீரியா , பூஞ்சை  போன்றவை நுரையீரலைத் தாக்கி நோயை உண்டாக்கும்.

நோய் பரவும் விதம் :

நிமோனியா நோய் ஒரு தொற்று நோயாகும். இது இருமல் அல்லது தும்மல் மூலம் பரவலாம். இரத்தம் மூலம் பரவலாம் குழந்தைகளின் மூக்கு அல்லது தொண்டையில் இருக்கும் வைரஸ் அல்லது நுண்ணுயிரி போன்றவை நுரையீரலைப் பாதித்தது. 5 -- வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் , 50 -வயதைக்  கடந்தவர்களுக்கும்  நுரையீரல் தொற்று ஏற்படும் வாயாப்பு அதிகம். எனவே இவற்றின் காரணமாக மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும் அபாயமும் காத்திருக்கின்றன. மற்றும்புகை  , மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் , நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும்  நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

நோயைக்  கண்டறிய :

    நிமோனியா நோய்த் தொற்றை  எக்ஸ் - ரே மூலம் கண்டுப்பிடிக்கலாம்.  நிமோனியா கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால் எளிதாக பலருக்கும் பரவும் அபாயம் உண்டு. நுண்ணுயிரி நுரையீரலை அடைந்து பின் ஓரிரு வாரங்களில் தன் வீரியத்தைக் காட்டத் தொடங்கும். மூன்று அல்லது நான்கு நாட்களில் காய்ச்சல் உண்டாகும்.இருமல் , மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தும் . சில நேரங்களில்நெஞ்சு வலியும் , இரத்தம் கலந்த சளியும் ஏற்படலாம்.

நிமோனியா என்பது நுரையீரலைத் தாக்கும் கடுமையான சுவாச நோய்த் தொற்றாகும்.இத்தொற்றின் பாதிப்பால் நுரையீரல் வீக்கம் அடைந்து நிமோனியாவை உண்டாகும் .

நோய்க்கான  அறிகுறி :

* கடும் குளிர் மற்றும் காய்ச்சல் .

* சுவாசிக்கும் போது ஆழமாக  இரும்மல்  அல்லது மார்பு வலி.

* விரைவான ஆழமற்ற சுவாசம்.

* குறைந்த உடல் வெப்பநிலை மற்றும் மூச்சுத் திணறல்.இந்த 

அறிகுறிகள் காணப்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவ சிகிச்சையை  மேற்கொள்ள வேண்டும்.

நோயைத்  தடுக்கும் முறை :

தாய்ப்பால் , தடுப்பூசி , சுற்றுச் சூழல் சுத்தம் , மாசற்ற சுகாதரம் , பாதுகாப்பான குடிநீர் , புகையற்றச் சுற்றம். தூசற்ற படுக்கை அறை, ஒவ்வாமை இல்லா உணவுப் பழக்கம் , முறையான மருத்துவம், சரியான மருத்துவ ஆலோசனை  போன்றவற்றைப் பயன் படுத்தி நோய் தாக்குதலிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்.  இந்நோயைத் தடுக்க தன்சுத்தம் பேணப்படுவது அவசியமாகின்றன. பிறந்து முதல்ஆரோக்கிய நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் நிமோனியாவில் இருந்து குழத்தைகளைப் பாதுகாக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு கூடுதலாக உயிர்ச் சத்து "ஏ" நிறைந்த உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும்.

தடுப்பூசி :

குழந்தைகள் பிறந்தவுடன் போடவேண்டிய சில தடுப்பூசிகளை அவசியம் பின்பற்ற வேண்டியது நமது கடமையாகும். மருத்துவரை அணுகி சரியான முறையைப் பின்பற்ற வேண்டும். பயன்படுத்த வேண்டியவற்றில் சில குழந்தை பிறந்த  45 - ஆவது நாள் , 75 - ஆவது நாள், 105 -ஆவது நாள் 6 - மாதம் , 18 - மாதம் , 5 - வயது , 10 - வயது மற்றும் வருடா வருடம் "ப்ளு" தடுப்பூசி போடப்பட வேண்டும். இந்த விழிப்புணர்வு நமக்கு மட்டுமல்ல, உலகம் அனைத்திற்கும் உடையது. ஒவ்வொரு ஆண்டும் 2.5 - மில்லியன் இறப்புகளுக்கு நிமோனியா காரணமாக உள்ளது.குழந்தைகள் நிமோனியாவில் மொத்த வழக்குகளில் சுமார்- 23% -இந்தியாவில் மட்டுமே பதிவாகியுள்ளது.

நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை" உலகநாடுகள் உருவாக்கியுள்ளன.2013 - ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு ( WHO ) , ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் ( UNICEF ) பெனு மோனியா மற்றும் வயிற்றுப்போக்கு குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு செயல் திட்டத்தை அறிவுறுத்துகிறது. இவ்வழியைப் பின்பற்றி  நிமோனியா தொற்றிலிருந்து குழந்தைகளையும் ' முதியவர்களையும்  பாதுகாப்போம்.!


Post a Comment

0 Comments