ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 , உள்ளததின் சீர்
மதிப்பீடு - பாடப்பகுதி - சிறுவினா
1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.
* ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டு, முல்லைநில மக்களின் அடையாளமாகும்; வேளாண்குடிகளின் தொழில் உற்பத்தியோடும், பாலைநிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது ஏறு. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.
* எனவே, தம் தொழிலோடு துணைநின்ற மாடுகளைப் போற்றி அழகுபடுத்தி, பொங்கல் படையல் இட்டு, ‘மாட்டுப் பொங்கல்' எனக் கொண்டாடுகின்றனர்.
2 ) ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
* கலித்தொகை, ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டினை முல்லைநிலப் பண்பாட்டின் அடையாளமாகக் காட்டுகிறது. முல்லைத்திணை, மருதத்திணை மக்களின் நாகரிகச் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறது.
* முல்லைநிலப் பெண்டிர், முரட்டுக் காளையை அடக்கிய வீரனையே விரும்பி ஏற்பர். மருதநிலத்தில் மாடுகளை ஏரில் பூட்டி, வேளாண்மைக்குப் பயன்படுத்தினர்.
* வேளாண்மக்கள், தங்கள் வாழ்வோடும் உழைப்போடும் உதவிய மாடுகளைப் போற்றி வணங்கினர்.
* மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பொங்கல் விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வர். ஏறுதழுவுதலும், வேளாண்மையும் திணைநிலை வாழ்வுடன் பிணைந்திருந்தன.
3 ) வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில், அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க
.
* உலகில், அறிவியல் விந்தைகள் விண்ணளாவப் பரந்து கிடக்கின்றன; மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் அறிவியல், வியத்தகு சாதனைகள் புரிந்துள்ளன.
* அகழாய்வும் அறிவியலை ஆதாரமாகக் கொண்டதுதான்.
* கடந்த காலத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டால்தான் நிகழ்காலத்தைச் செம்மைப்படுத்திட முடியும்.
* வருங்காலம் வளமாக அமைவதற்கு, வலிமையான கட்டமைப்பினை உருவாக்கிட முடியும்.
* பட்டறிவை வகைப்படுத்தித் தொகுத்துப் பார்ப்பதற்கும் அகழாய்வு தேவை.
4 ) உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.
* இந்திரவிழா சிறப்பாக நடக்கும்பொருட்டு, கொடியேற்றம் - நாற்படைகளும் சூழ முரசறைவோன்
நகர மக்களுக்குச் செய்திகளைக் கூறுதல் 28 நாட்கள் விழா நடைபெறும் வீடுகளும், வீதிகளும், பொது இடங்களும், மன்றங்களும் அழகுபடுத்தப்படும்.
* நமது ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். விழா நடைபெறும் நாளைக் குறிப்பதற்காக ஊர்ச்சபையின் கூட்டம் கூட்டப்பெறும். ஊர்த் தலையாரி
என்பவர் பறையறைந்து தெருக்கள்தோறும் சென்று, செய்திகளைக் கூறிவருவார். ஊர்ச்சபையின் தலைவரே விழாத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
* நாட்டாண்மைக்காரர்கள் ஒன்றுகூடி விழா நடைபெறும் நாளை முடிவுசெய்வர். அழைப்பிதழ் அச்சடித்து அனைவருக்கும் கொடுப்பர். விழாநாள் குறித்து அன்றே காப்புக் கட்டுதல் என்ற கொடியேற்றம் நடைபெறும். கோயில், சிலைகள், முக்கிய இடங்கள் ஆகியவற்றுக்கு வெள்ளை
அடிக்கவும் வண்ணம் தீட்டவும் செய்வர். விழா முடியும் நாள்வரை ஆடல், பாடல், நாடகம், கூத்து, வாணவேடிக்கை, அம்மன் வீதியுலா என, பல நிகழ்வுகள் தினமும் நடைபெறும். மக்கள்
அனைவரும் இறையருள்பெற, ஒற்றுமையாய் இருந்து விழாவை நடத்துவர்.
1 Comments
𝙽𝙾𝚃 𝚃𝙷𝙸𝚂 𝙰𝙽𝚂𝚆𝙴𝚁
ReplyDelete