ஏழாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
8. மரபுத்தொடரைப் பொருள் அறிந்து
பயன்படுத்துதல்
வினாக்களும் விடைகளும்
கற்றல் விளைவு:
மொழியின் நுட்பமான கூறுகளை மனத்தில் கொண்டு தங்களுக்கான சொந்த மொழியைக் கட்டமைத்தல்.
கற்பித்தல் செயல்பாடு:
1. வகுப்பில் இன்று மரபுத்தொடர் குறித்து அறிந்து கொள்வோமா?
* நமது வகுப்பில் ஈர மனசுக்காரன் யார்? அவனை அவ்வாறு அழைக்கக் காரணம் என்ன?
* உன் நண்பர்களில் தர்மபிரபு யார்? அவனை தர்மபிரபு என்று ஏன் அழைக்கிறோம்?. இவற்றைப்போன்ற பலவாறான வினாக்களைக் கேட்டு மாணவர்களை விடைகூறச் செய்தல்.
2. எங்கள் ஊரில் மணி என்பவர் பிண்ணாக்கு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தார். அவரும் அவர்தம் குடும்பமும் பிண்ணாக்குத் தொழிலை வாழையடி வாழையாகச் செய்துவந்தனர். அவர் மற்ற வியாபாரிகளையும் அவர்களது வியாபாரத்தையும் பலவாறாகக் கயிறு திரித்துக்கூறி அவர்கள் வியாபாரத்தைத் தடுத்தார். அவரது பித்தலாட்டத்தை ஊர்மக்கள் அறிந்தனர். ஊர்மக்கள் இவருக்குத் தண்டனை அளிக்கலாம் என முடிவெடுத்தனர். இதனால் மணியின் பேராசை கானல் நீரானது. அவ்வியாபாரிகள் தம்மை ஏற்றுக் கொள்வதற்காக முதலைக்கண்ணீர் வடித்தார்.
இப்பத்தியில் வரும் மரபுத்தொடர்களின் பொருளை அறியலாம்.
மரபுத்தொடர் என்பது நேரடியாகப் பொருள் உணர்த்தாமல் குறிப்பால் பொருள் உணர்த்துவதாகும். மரபுத்தொடரில் ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர் பொருளை உணர்த்தாது. வழிவழியாகத் தொடரும் பயன்பாட்டால் வேறு ஒரு குறிப்புப் பொருளை உணர்த்தும்.
0 Comments