ஏழாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 6
தொழிலையும் பண்பாட்டையும் உணர்த்தும்
சொற்களை அறிதல்
வினாக்களும் விடைகளும்
**************** ************ ***********
கற்றல் விளைவு:
பல்வேறு தலைப்புகளின்கீழ் படிநிலைப்படுத்தப்பட்ட சொற்களையும் தொழில்கள்மற்றும் பண்பாடு சார்ந்த சொற்களையும் நன்றாகப் புரிந்துகொள்ளுதல், பொருத்தமான இடங்களில் பயன்படுத்துதல்.
கற்பித்தல் செயல்பாடு:
மாணவர்களே! நீங்கள் கடலைப் பார்த்துள்ளீர்களா? யார் யார் கடலில் விளையாடிஉள்ளீர்கள்? உலகில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. கடல் பகுதியில் வசிக்கும்மக்கள் பரதவர், பரத்தியர் எனப்படுவர். மீனவர் மீன் பிடிக்கும்போது களைப்புத் தெரியாமல்இருக்கப் பாடல்கள் பாடுவர்.
சான்று:
"விடிவெள்ளி நம்விளக்கு - ஐலசா
விரிகட லே பள்ளிக்கூடம் -ஐலசா
அடிக்கும் அலை நம்தோழன் -ஐலசா
அருமைமேகம் நமதுகுடை- ஐலசா
பாயும்புயல் நம்ஊஞ்சல்- ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை -ஐலசா
காயும்கதிர்ச் சுடர்கூரை -ஐலசா
கட்டுமரம் வாழும்வீடு -ஐலசா
மின்னல்வரி அரிச்சுவடி -ஐலசா
பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள்- ஐலசா"
இப்பாடல் வாயிலாகக் கடலைச் சார்ந்து மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து
கொண்டீர்களா?
மாணவர் செயல்பாடு:
1.விடிவெள்ளி, விரிகடல் - இவ்விரண்டு சொற்களுக்கு அகராதியைப் பார்த்து பொருள்அறிக.
2. கடலில் இருந்து கிடைக்கும் அலங்காரப்பொருள்களைப் பட்டியலிடுக.
(சங்கு, சிப்பி, முதலியன)
3. கடலில் மிதக்கும் கலன்களுக்கு வழங்கக்கூடிய வேறுபெயர்களைக் குறிப்பிடுக.
(நாவாய், வங்கம், முதலியன)
4.கடலில் கிடைக்கும் உணவுப்பொருள்கள் யாவை?
(நண்டு, இறால், மீன் வகைகள்)
************* ************
மதிப்பீட்டுச் செயல்பாடு:
1. கடல்பகுதியோடு தொடர்புடைய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
அ. மேய்த்தல்
ஆ. மீன்பிடித்தல்
இ. வேட்டையாடுதல்
ஈ. உழுதல்
2. பாடலின் அடிப்படையில் பொருத்துக.
1 பாயும்புயல் - வீடு
2 பனிமூட்டம் - ஊஞ்சல்
3 கட்டுமரம் - அரிச்சுவடி
4 மின்னல்வரி - போர்வை
3. கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களை வட்டமிடுக.
அ. முந்நீர்
ஆ. பரவை
இ. ஆழி
ஈ. மிதவை
உ. படகு
4, கடல்பகுதி சார்ந்த சொற்கள் நான்கினை எழுதுக
(எ.கா. படகு பார்த்தல் - மீன் பிடிக்கச் செல்லுதல்.)
5. உழவுத்தொழில் சார்ந்த பத்துச் சொற்களை எழுதுக.
(எ.கா, கலப்பை, நீர் இறைத்தல், ....... )
6.
உங்கள் பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழில் குறித்து நான்கு தொடர்கள்
எழுதுக.
0 Comments