பத்தாம் வகுப்பு - தமிழ்
முன்னுரிமைப் பாடம்
இயல் - 6
கம்பராமாயணம் / அகப்பொருள் இலக்கணம்
வினாக்களும் விடைகளும்
************** *************** ************
தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ்த் தேர்வை எழுத உங்களுக்கு விருப்பமா ? உங்களது வாட்சாப் எண்ணிற்கு வினா இணைப்பு வர வேண்டுமா ? உங்கள் பெயர் , படிப்பு இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள். தினமும் தேர்வை எழுதி அரசுப்பணிக்கு ஆயத்தமாகுங்கள். வாழ்த்துகள்.
1) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது ------
அ) கதை
ஆ) கவிதை
இ) கட்டுரை
ஈ) நாடகம்
விடை : ஆ ) கவிதை
2)' கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பெருமைப்பட்ட கவிஞர் -----
அ ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) கண்ணதாசன்
விடை : அ ) பாரதியார்
3) கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி ----- எனப்பெயரிட்டார்.
அ) கம்பராமாயணம்
ஆ) ராமாயணம்
இ) இராமாவதாரம்
ஈ) இராமன்கதை
விடை : இ ) இராமாவதாரம்
4 ) கம்பர் ------நாட்டின் திருவழுந்தூரைச் சேர்ந்தவர்
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
விடை : ஆ ) சோழ
5) கம்பரை ஆதரித்த வள்ளல் ------
அ) சடையப்ப
ஆ) எட்டப்ப
இ) பாண்டித்துரை
ஈ) சேதுபதி
விடை : அ ) சடையப்ப
6) கம்பன் வீட்டுக்கட்டுத் தறியும் ------ பாடும்
அ ) புவி
ஆ) புகழ்
இ) பெருமை
ஈ) கவி
விடை : ஈ ) கவி
7)" ------ என்னும் ஒண்பாவிற்கு
உயர் கம்பன் " என்று புகழப்பட்டவர்
அ ) சிந்து
ஆ) விருத்தம்
இ ) கட்டளை
ஈ ) கண்ணி
விடை : ஆ) விருத்தம்
8) கம்பராமாயணத்தில் உள்ள
காண்டங்களின் எண்ணிக்கை -----
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) எட்டு
விடை : இ ) ஆறு
9 ) ஓர் உயிர் பல உடம்புகளில் ஊடுருவி உலாவுது போல் பல படங்களில் பாய்ந்த நதி -----
அ) கங்கை
ஆ) வைகை
இ) பொருநை
ஈ) சரயு
விடை : ஈ ) சரயு
10) கோசலை நாட்டில் கொடை
இல்லாத காரணம்
அ ) நல்ல உள்ளம் உடையவர்கள்
இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ ) அரசன் கொடுங்கோல் ஆட்சி
புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
விடை : ஈ )அங்கு வறுமை இல்லாதால்
11) கம்பராமாயணத்தில் உறங்குகின்ற பாத்திரப் படைப்பின் பெயர் -----
அ) கர்ணன்
ஆ) கும்பகருணன்
இ ) அனுமான்
ஈ) இராவணன்
விடை : ஆ) கும்பகருணன்
12) கம்பர் எழுதாத நூல் -----
அ) சரசுவதி அந்தாதி
ஆ) சடகோபர் அந்தாதி
இ) ஏரெழுபது
ஈ) காரெழுபது
விடை : ஈ ) காரெழுபது
13) மலையும் மலைசார்ந்த இடமும் ----
அ) குறிஞ்சி
ஆ) நெருஞ்சி
இ ) பாலை
ஈ) முல்லை
விடை : அ ) குறிஞ்சி
14 ) நிலமும் பொழுதும் -----எனப்படும்.
அ) கருப்பொருள்
ஆ) முதற்பொருள்
இ) உரிப்பொருள்
ஈ) உயிர்ப்பொருள்
விடை : ஆ ) முதற்பொருள்
15 ) பொழுது - --- வகைப்படும்
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) பத்து
அ ) இரண்டு
16) ஆவணி, புரட்டாசி -----காலம் ஆகும்
அ) முன்பனி
ஆ) பின்பனி
இ) கார்காலம்
ஈ) குளிர்காலம்
விடை : இ ) கார்காலம்
17) மாலை 6 மணி முதல் இரவு பத்து மணிவரை உள்ள சிறுபொழுது -----
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
விடை : ஆ ) மாலை
18) எற்பாடு - இதில் ' எல் ' என்றால் -----
அ ) ஞாயிறு
ஆ) திங்கள்
இ) வானம்
ஈ) நட்சத்திரம்
விடை : அ ) ஞாயிறு
19) குறிஞ்சி நிலத்தின் தெய்வம்
அ) திருமால்
ஆ) இந்திரன்
இ) வருணன்
ஈ) முருகன்
விடை : ஈ ) முருகன்
20) நெய்தல் நிலத்தின் தெய்வம்
அ ) முருகன்
ஆ) கொற்றவை
இ) வருணன்
ஈ) திருமால்
விடை : இ) வருணன்
நண்பர்களே ! ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் காட்சிபதிவாகவும் , TNPSC , TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடப்பதிவுகள் பெறவும் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணில் தங்களது பெயர் , படிப்பு , மாவட்டம் இவற்றை அனுப்பி இலவசமாக உங்களுக்குத் தேவையான மெட்டீரியல் பெற்று அரசுப்பணிக்குச் சென்றிட வாழ்த்துகள்.
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
0 Comments