பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - திருக்குறள் - கூடா நட்பு / 10th TAMIL - EYAL 6 - THIRUKKURAL - KOODANATPU

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் 

இயல் - 6 , வாழ்வியல் இலக்கியம் 

திருக்குறள் - கூடா நட்பு - 87

பகை மாட்சி ( 87 ) 

***************   **************   ***********

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் வாழ்வியல் இலக்கியம் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள திருக்குறள் ' ஆகும்.

முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.




   கூடாநட்பு ( 83 ) அதிகாரத்தில் ஒரு குறளும் , பகை மாட்சி ( 87 ) அதிகாரத்தில் இரண்டு குறட்பாக்களும் கொடுக்கப் பட்டுள்ளன.

கூடா நட்பு ( 83 ) 

10. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

பொருள்: 

      பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளும், கொலைக்கருவி மறைந்து இருக்கும். அது போல் அவர் அழுத கண்ணீரின் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் என்பதை உணர வேண்டும்.

பகை மாட்சி (87)

11. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு

பொருள்: 

சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?

12. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

பொருள்: 

          மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில்
பகைக்கு ஆட்பட நேரும்.

****************    ************   ***********

Post a Comment

0 Comments